பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பன்‌ டெட்ராகுளோரைடு 373

கார்பன் டெட்ராகுளோரைடு 372 யாகும். கார்பன் எதிர் அயனியிலுள்ள கார்பன் அணு வின் பண்பு (S-character) அதிகரிக்கும்போது அதன் நிலைப்புத் தன்மையும் அதிகரிக்கிறது. காட்டாக RC=C, R,C=CH, C,H,- போன்ற கார்பன் எதிர் அயனிகள் அல்க்கைல் கார்பன் எதிர் அயனிகளைவிட மிகு நிலைப்புத் தன்மை கொண்டவை. கார்பன் நேர் அயனிகளுடன் ஒப்பிடுகையில் கார்பன் எதிர் அயனிகள் உயர் நிலைப்புத்தன்மை கொண்டவை. அவை எலெக்ட்ரான் தூண்டல் விளை வாலும் (inductive effect) உடனிசைவு விளைவாலும் (resonance effect) நிலைப்புத்தன்மை அடைகின்றன. அல்க்கைல் பென்சைல் போன்ற கார்பன் எதிர் அயனி கள் உடனிசைவு விளைவால் நிலைப்படுத்தப்படு கின்றன. கார்பன் எதிர் அயனிகள் எதிர் மின்னேற்றம் கொண் டவையாதலால் அவை எலெக்ட்ரான் கவர் தொகுதி களால் நிலைப்படுத்தப்படுகின்றன. எலெக்ட்ரான் வழங்கும் தொகுதிகளால் நிலைப்புத்தன்மை குறை கிறது. கார்பன் எதிர் அயனியிலுள்ள பங்கிடப்படாத எலெக்ட்ரான்கள் உடனிசைவுக்கு உள்ளாகும்போதும் நிலைப்புத்தன்மை அதிகரிக்கிறது. தனித்த கார்பன் எதிர் அயனியிலுள்ள பங்கிடப்படாத எலெக்ட்ரான் ணை கொண்ட கார்பன் அணுவுடன் கார்போனைல் சயனோ, நைட்ரோ, எஸ்ட்டர் போன்ற எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிகள் இணைத்திருக்கும்போது அந்த அயனி, தூண்டல் விளவாலும் உடனிசைவு விளைவாலும் பெருமள வில் நிலைப்புத்தன்மை அடைகிறது. RC - C = H R R C = N: H R 4+ R C=C 0: 1 H R ++ R - C = H மேற்கூறிய விளைவுகளால் நிலைப்புத்தன்மை அடையும் கார்பன் எதிர் அயனிகள் மிக எளிதாக உருவாகின்றன. தீவிர ஹைட்ரஜன் கொண்ட சேர்மங்களைக் காரங்களுடன் வினைப்படுத்துவதன் மூலம் அத்தகைய ஹைட்ரஜனை நீக்கும் போது கார்பன் எதிர் அயனி உண்டாகிறது. சான்றாக, CH_COCH,COOCH, + C.HO எத்தில் அசெட்டோ அசெட்டேட் CH,COËHCOOC,H,+C,H,OH CH-CH +HO- அசிட்டால்டிஹைடு 0 11 CH,-C-H 10: CH,=C-H ஒற்றை மூலக்கூறு எலெக்ட்ரான் கவர் பதிலீட்டு (Spl) வினைகள் நிறைவுற்ற கார்பனில் நடைபெறும் போது கார்பன் எதிர் அயனி இடைநிலைப் பொருளாக உண்டரகிறது. கார்பன் எதிர் அயனியின் கார்பன் நடுவிலுள்ள sp3 இனக்கலப்பால் hybridisation) ஆனது. ஆகவே கார்பன் எதிர் அயனி அமீன்கள்போல் பிரமிடு வடிவமைப்புக் கொண்ட தாக நம்பப்படுகிறது. பங்கிடப்படாத எலெக்ட்ரான் இணை, பிரமிடின் உச்சிப் பகுதியில் இருக்கும். கார்பன் எதிர் அயனியிலுள்ள எதிர் மின்னேற்றம் பல் பிணைப்பில் (multiple bond) உள்ள எலெக்ட்ரான் களுட டன் உடனிசைவு விளைவால் நிலைப்படுத்தப்படும் போது கார்பன் எதிர் அயனி, அதனுடன் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே தளம் கொண்ட அமைப்புடையவையாக இருக்கும். அ. சண்முகசுந்தரம் நூலோதி. Jerry. March, Advanced Organic Chemistry, John wiley and Sons Ltd. New york. 1986. கார்பன் டெட்ராகுளோரைடு இதன் மூலக்கூறு வாய்பாடு CC; இது மெத்தேன் சேர்மத்தின் முக்கியப் பெறுதியாகும். கார்பன் டெட்ராகுளோரைடு நிறமற்ற, அடர்வான நீர்மம். கார்பன் டைசல்ஃபைடுடன் வினையூக்கி உடனிருக்க குளோரினை வினைப்படுத்தி இதைப் பெறலாம். AICI, Cs,+3Cl,→CCI,+S,C!, - இதன் கொதிநிலை 77-C; இது நீரில் கரையாது. ஆனால் எத்தனால், ஈதர் போன்ற கரிமக் கரைப் பான்களில் எளிதில் கரையும். இதன் ஆவி, எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையற்றிருப்பதால் தொழி லகங்களில் கொழுப்பு, எண்ணெய், ரெசின், வோக் கர் போன்றவற்றிற்கான கரைப்பானாக உள்ளது. பைரீன் என்னும் பெயரில் தீயணைப்பானாகவும் செயல்படுகிறது. கார்பன் டெட்ரா குளோரைடு செஞ்சூட்டிலும் (500-C) நிலையாக இருக்கக்கூடியது. ஆனால் இதன் ஆவி, நீர் ஆவியுடன் சேரும்போது கார்போனைல் குளோரைடு(பாஸ்ஜீன்) உண்டாகிறது.