பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கார்பன்‌ டைஆக்சைடு

374 கார்பன் டை ஆக்சைடு இரும்பத் துருவலால் து குளோரோஃபார்மாக ஒடுக்கப்படுகிறது. கார்பன் டைஆக்சைடு 4 த. தெய்வீகன் இது ஒரு நிறமற்ற மணமற்றவளிமம்இது தீப்பற்றி எரியக் கூடியதன்று. நீரில் இதன் கரைசல் வலிமை யில்லா அமிலத்தன்மை கொண்டது. சுற்றுப்புறக் காற்றில் இதன் அடர்த்தி 0.04% ஆக உள்ளது. சுவாசத்தின்போதும், விலங்குப்பொருள்கள் எரி யும் போதும், சிதைவுறும்போதும், நொதிக்கும்போதும் இது வெளியிடப்படுகிறது. காற்றைவிடக் கனமாக இருப்பதால் இது கிணறு மற்றும் கிணறு மற்றும் சுரங்கங்களின் அடியில் நிறைந்திருக்கும். இது நீரில் 1:1 என்னும் விகிதத்தில் கரையக்கூடியது. இது உலோகக் கூடுகளில் 31°C க்கு மேற்படாத வெப்பநிலையில் தேக்கி வைக்கப்படுகிறது. கார்பன்டை ஆக்சைடு உள்ள உலோகக் கூடுகளின்மேல் சாம்பல் நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும். . இயக்கங்கள். கார்பன்டை ஆக்சைடு, இரத்தம் இவற்றின் அமில-காரச் சமநிலையை ஒழுங்கு படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இதை 5-7% அடர்த்தியில் ஆக்சிஜனுடன் சேர்த்துச் செலுத்தும் போது மூச்சு மையத்தைத் தூண்டுகிறது. ஆனால் மருந்துகளால் ஒடுக்கப்பட்ட மூச்சு மையத்தைத் தூண்ட இதைப் பயன்படுத்தினால் நன்மையைவிடத் தீமையையே ஏற்படுத்தும். இது பெருமூளை இரத்தக் குழாய்களையும் திறம்பட விரிவடையச் செய்கிறது. ஏ பயன்கள். ஆக்சிஜனுடன் சேர்த்துச் செலுத்தப் படும்போது மூக்கு வழிச் செலுத்தப்படும் உணர் விழப்பு மருந்துகளின் உள் எடுப்பு விகிதத்தை மிகுதிப் படுத்தவும் அவற்றின் வெளியேற்றத்தை விரைவு படுத்தவும் இது பயன்படும். ஆக்சிஜன்-கார்பன் டைஆக்சைடு கலவை சாதாரணமாகக் கட்டுப்படுத்த முடியாத விக்கலையும் கட்டுப்படுத்தும். மேலும் இக்கலவை பிறந்த குழந்தைகளின் மூச்சுவிடுதலைத் தூண்டவும், நீரில் மூழ்கியவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவும் பயன்படும். கார்பன்டை ஆக்சைடு பனிக் சுட்டி 80°C வெப்பநிலையை உடையது. இது மருக்களை அழிக்கப் பயனபடுகிறது. தமனித் தடிப்பு நோய் உள்ளோருக்கு அறுவை செய்யும்போது மூளை யில் இரத்த ஓட்டத்தை மிகுதிப்படுத்த இது பயன்படு கிறது. கார்போனேட் அல்லது பைகார்போனேட் கரைசலாக இது வாய் வழியே உட்கொள்ளப்படும் போது உணவுப்பாதைச் சளிச்சவ்வின் மூலம் நீர்மங் கள் உள் ஏற்கப்படுவது மிகுதியாகும். எரியும் தீயை அணைக்க இது தீயணைப்புப் பொருளாகவும் பயன் படுகிறது. நச்சு விளைவுகள். காற்றோட்டம் இல்லாத நெரிச லான அறையுள் சில மணி நேரம் இருக்கும்போது. காற்றில் கார்பன் டைஆக்சைடின் அடர்த்தி 0.5% என்னும் அளவில் இருந்தாலும், தலைவலி, அயர்ச்சி முதலிய விளைவுகள் ஏற்படுகின்றன. இதை 7% அடர்த் திக்கும் மேல் செலுத்தும்போது தலைவலி, அயர்ச்சி. மனக்குழப்பம், படபடப்பு, மிகை இரத்த அழுத்தம், கடின மூச்சு ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன. இதை 10-12.5% அடர்வில் செலுத்தும்போது ஆழ் மயக்கம் ஏற்படுகிறது: 40% அடர்த்தியில் செலுத்தும் போது மூச்சு ஒடுக்கம் ஏற்பட்டு மரணம் நேரிடுகிறது. கார்பன் டைஆக்சைடால் உண்டாகும் நச்சு பெரும் பாலும் தற்செயலாகவே ஏற்படுகிறது. (எ.கா: சுரங்கங்கள். கிணறுகளின் அடியில் பணி செய்யும் போது). அரிதாசு, அறுவையின்போது உணர்விழப்பு மருத்துவர் ஆக்சிஜனுக்கு மாற்றாகக் கார்பன் டை ஆக்சைடைத் தவறுதலாகச் செலுத்தி விடுவதாலும் நச்சு ஏற்படக்கூடும். கார்பன் டைஆக்சைடைக் கண்டறியும் ஆய்வுகள். இது சுண்ணாம்பு நீரைப் பால் நிறமாக்குகிறது. சுற்றுப்புறக் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 15-16% அளவில் உள்ள சூழ்நிலையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்தால் அது அணைந்து விடும். வெள்ளி நைட்ரேட்டுடன் இது சேரும்போது வெள்ளி கார்பனேட் எனும் வெண்மையான வீழ்படிவு ஏற்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு நச்சுக்கு மருத்துவம். நோயாளியைக் காற்றோட்டமுள்ள வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். ஆக்சிஜனைச் செலுத்திச் செயற்கை மூச்சு விடுதலை ஏற்படுத்த வேண்டும். சிரை வழியாக 2- அமினோ - 2 ஹைட்ராக்சி மெத்தில் - 1, 3 - புரோப் பனிடயால் எனும் அமீன் தாங்கியைச் செலுத்தினால் மிகு நன்மை தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. - கார்பன்டை ஆக்சைடு நச்சுத் தடுப்பு. சுற்றுப்புறக் காற்றில் இதன் பெரும அடர்த்தி 10 லட்சத்திற்கு 500 பகுதிகள் என்னும் அளவுக்கு மேற்படாதவாறு இருக்கலாம் என அறுதியிடப்பட்டிருப்பதால் இவ்வளி வெளிப்படக்கூடிய வாய்ப்புள்ள சுற்றுப்புறக் காற்றின் கார்பன் டைஆக்சைடின் அளவைத் தக்க கருவி கொண்டு அளந்து அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மு. துளசிமணி கார்பன் நேர் அயனி (கார்போனியம் அயனி) நேர்மின்னேற்றம் பெற்ற கார்பன் அயனிகள் கார் போனியம் அயனிகள் (கரிம நேரயனிகள்) என்று குறிப்பிடப்படுகின்றன. சில கார்போனியம் அயனிகள்