பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கார்பன்‌ நேர்‌ அயனி

376 கார்பன் நேர் அயனி (கார்போனியம் அயனி) பற்றி மேலும் அறிந்து 'கொள்ள மறைமுக வழி களைப் பயன்படுத்தவேண்டும். இதற்கு வேதி வினை வேசு இயல் (chemical kinetics), கார்போனியம் அயனி வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருளைப் பகுப்பாய்வு செய்தல், முக்கியமாக மூலக்கூறில் அணுக்களின் முப்பரிமாணத்தை அறிதல், ஐசோ டோப்பைப் பயன்படுத்தி ஆய்வு செய்தல் ஆகிய வற்றைப் பயன்படுத்தலாம். சில கரைப்பான்கள் கார்போனியம் அயனிகளுடன் வினைபுரிவதில்லை. ஹைட்ரஜன் ஃபுளூரைடு, ஆன்ட்டிமனி பென்ட்டா ஃபுளூரைடு.ஃபுளூரோசல்ஃப்யூரிக் அமிலம், ஆன்ட்டி மனி பென்ட்டாஃபுளூரைடு (சிறிதளவு சல்ஃபர் நடஆக்சைடு அல்லது சல்ஃப்யூரைல் ஃபுளூரைடுடன்) ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். இந்தக் கரைப்பான்களில் கார்போனியம் அயனிகளின் நிலைப்புத் தன்மை குறிப்பிடத் தகுந்ததாக அமைந் திருப்பதால் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. CH H C-H + ஓரிணைய கார் போனியம் அயனி (எத்தில் நேரயனி) H-C-H -- H மெத்தில் நேரயனி இவ்வயனிகளின் நிலைப்புத்தன்மையை அல்க்கைல் தொகுதி sp கார்பன் அணுவுடன் மின்சுமையைப் பரவச் செய்யும் விதத்தால் விளக்கலாம். பென்சைல் நேரயனிகள் ஏனைய ஓரிணைய நேரயனிகளைவிட உயர் நிலைப்புத்தன்மை கொண்டவையாகவுள்ளன. இதற்குக் காரணம் பென்சைல் அயனியில் இருக்கும் நேர்மின்சுமை பென்சீன் வளையத்தில் பல்வேறு டங்களில் பரவ வாய்ப்பிருப்பதாலும் அந்த அமைப்புகள் உடனிசைவு அமைப்புகளாக இருப்ப தாலுமே இவ்வமைப்புகளைப் பின்வருமாறு குறிக்க லாம். மூவிணைய கார்போனியம் அயனிகள் (tertiary carbonium ions) ஈரிணைய போனியம் அயனிகளைவிடவும், போனியம் அயனிகள் ஓரிணைய (secondary) கார் சரிணைய கார் கார்போனியம் அயனிகளை விடவும் உயர் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. மூவிணைய கார்போனியம் அயனி களில், sp " கார்பன் அணு மூன்று அல்க்கைல் தொகுதி களுடனும், ஈரிணைய கார்போனியம் அயனியில் sp கார்பன் இரு அல்க்கைல் தொகுதி களுடனும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடனும் ணைந் துள்ளன. ஓரிணைய கார்போனியம் அயனியில் sp' கார்பன் ஓர் அல்க்கைல் தொகுதியுடனும் இரு ஹைட்ரஜன் அணுக்களுடனும் அல்லது மெத்தில் நேரயனியில் உள்ளது போல் மூன்று ஹைட்ரஜன் அணுக்களுடனும் இணைந்திருக்கலாம். ஒவ்வொரு வகைக்கும் சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. CH₂ CH₁ C+ CH. மூவினைய கார்போனியம் அயனி (t-பியூட்டைல் நேரயனி) - H 1 CH, C CH, ஈரிணைய கார் போனியம் அயனி (ஐசோபுரோப்பைல் நேரயனி) -CH, =CH, -CH, =CH, வினைகள். கார்போனியம் அயனிகள் எலெக்ட் ரான் குறை அயனிகளாக உள்ளமையால் அவை எலெக்ட்ரான் வழங்கி மூலக்கூறுகளுடன் (nucleo philes) எளிதில் வினைபுரிகின்றன. மூன்று வகையான சுருக்கவர் வினைப் பொருள்கள் உள்ளன. I - காரங்கள், பை (pi) காரங்கள், சிக்மா (sigma) காரங்கள் என்பவையே அவை. n. பை, சிக்மா என்பன கருக் சுவர் வினைப் பொருளில் வழங்கும் இணை எலெக்ட் ரான்களின் பிணைப்புகளின் நிலையைக் குறிக் கின்றன. எலெக்ட்ரான் வினைப்பொருள்கள் வெளியி லிருந்து, வினைப் பொருள்களுக்குள்ளேயே அமைய லாம். பின்னர் சொல்லப்பட்ட வினையில் அமைப்பு மாற்றங்கள் நிகழும். சான்றுகள்: வெளி n-காரத்துடன் விளை: ஐசோ பியூட்டிலீனை அமிலத்தால் நீரேற்றம் செய்தல். வினையில் நீர் மூலக்கூறில் இருக்கும் ஆக்சிஜன் அணுவில் எலெக்ட்ரான் இணை உள்ளது. H,O (CH,),C = CH, + H+ → CH, + H+ (CH,), C+- t-பியூட்டைல் நேரயனி