20 களைகள்
20 களைகள் படம் 5.1.நீன் கைப்பிடி கொண்ட முள் உருளைக் சுளைக்கருவி 2. நீள் கைப்பிடி கொண்ட நட்சத்திரக் களைக் கருவி. ப. வெங்கடாசலம் நூலோதி. H.S. Biswas, Weeding Tools and Implements of India, Central Institute of Agrl. Enginee ring, Bhopal. களைகள் களைச்செடிகள், வேண்டாத இடங்களிலும் சாகுபடி நிலங்களிலும் உள்ள நீரையும், சத்துகளையும் உட்க லர்ந்து பயிர்களுக்கும், மனிதருக்கும் கேடு உண்டாக்கு கின்றன. பயிர் நிலங்களிலும், மேய்ச்சல் நிலங் களிலும், மைதானங்களிலும், காடுகளிலும் இவை விரைவாக வளர்ந்து, பயிர்களின்வளர்ச்சி, விளைச்சல் தரம் ஆகியவற்றைக் குறைத்துவிடுகின்றன. வேளாண் உற்பத்தியில் களைகளால் மட்டும் 45% இழப்பு ஆண்டுதோறும் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட் டுள்ளது. களைச் செடிகளால் பல்வேறு இழப்புகள் ஏற்படு கின்றன. புல் நிலங்களில் உள்ள களைகளைக் கால் நடைகள் உட்கொள்வதால், அவற்றிலிருந்து பெறப் படும் பால், இறைச்சி முதலியவற்றின் தரம் குறையும். களைகளால் பண்ணை மேலாண்மைச் செலவுகள் மிகும். பூச்சிகளும், பூசணங்களும் களைச்செடிகளில் வளர்ந்து பெருகி, பயிர்களை அழிக்கும். நீர் நிலையி லுள்ள களைகள். நீர்ப்பாசன மேலாண்மை நீர் வழிப்போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையூறாக உள்ளன. சில வகைக் களைச் செடிகளிலிருந்து வெளிப்படும் மகரந்தத்தூள், காற்றின் மூலம் பரவி, மனித நலவாழ்வைப் பாதிக்கும். . களைச் செடிகளை, அவை வாழும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பருவக்களைகள், (annu- als) இரு பருவக் களைகள் (biennials) பல பருவக் களைகள் (perennials) என வகைப்படுத்தலாம். ஒரு பருவக் களைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்ந்து பூத்து விதைகளை உண்டாக்கி அழிகின்றன. இரு பருவக் களைகள், முதல் பருவத்தில் வளர்ச்சியைப் பெற்று அடுத்த பருவத்தில் மலர்ந்து, விதைகளை உண்டாக்கிய பின் அழிகின்றன. பல பருவக் களைகள் நீண்டநாள் உயிர் வாழும் திறன் பெற்றவை. இவை விதை, வேர்ப்பகுதி, கிழங்கு, கணுவிடைப் பகுதி, தண்டுப் பகுதி இவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.பயிர்த் தாவரங்கள், மரங்கள் இவற்றில் ஒட்டுண்ணிகளாகச் சில களைகள் வளர்ந்து அவற் றின் சத்துக்களையும், சாற்றையும். உறிஞ்சித் தாவ ரங்களின் வளர்ச்சியையும் விளைச்சலையும் குறைக் கின்றன. . களைச் செடிகளுக்குள் ஏற்படும் போட்டி பல் வேறு காரணிகளைப் பொறுத்து அமையும். பயிர்ச் செடிகள் நன்கு வளர்ந்த பின் தோன்றும் களை களால் பயிரின் வளர்ச்சிக்குப் பெரும் இடையூறுகள் இருப்பதில்லை. பயிர்த்தாவரங்களும், களைகளும் ஒரே வளர்ச்சி விகிதமும் வாழ்க்கைத் தன்மையும் கொண்டிருப்பின், அவற்றிற்கிடையே போட்டி நிலவும். களைச்செடிகளில் பெரும்பாலானவை, மிகுதியான விதைகளை உற்பத்தி செய்கின்றன. களைகளைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பல்வேறு முறைகள் இன்று கையாளப்படுகின்றன. அவற்றை மரபு வழிமுறை உயிர் வழிக் களைக் கட்டுப்பாடு (biological weed control) வேதி வழிக் கட்டுப் (chemical weed பாட்டு control) முறை ன வகைப்படுத்தலாம். களைகளின் உயிர்வழிக் கட்டுப்பாடு. களைகள் வளரும் நிலங்களில் பயிர் வளர்த்தல். பயிர்கள், களைகளுடன் போட்டியிடும் தன்மை (crop-weed competition) தாவரச் சாறுண்ணிகள், கொன்று தின்னிகள் (predators) பயிர் நோயூக்கிகள் மூலம் களைகளின் வளர்ச்சியையும், பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவது உயிர்வழிக் கட்டுப்பாடு எனப் படும்.