பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கார்பன்‌ விண்மீன்கள்‌

380 கார்பன் விண்மீன்கள் வளிமத்தால் நச்சு ஏற்படும் தீமை உள்ளது. சுரங்கம், பெட்ரோலியம், இவ்வளி தோன்றக்கூடிய வாய்ப்பு உள்ள தொழிற்சாலை நிறைந்த இடம் போன்ற டங்களில் தகுந்த காற்று அழுத்தக் கருவியைக் காண்டு இவ்வளிம அளவைக் கண்டறிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவத்தில் கார்பன் மோனாக்சைடின் பயன். கார்பன் மோனாக்சைடைப் பயன்படுத்தி குட் பாஸ் தரின் நோய்த் தொகுப்பு எனும் நோய் உள்ளவர் களின் நுரையீரல்களில் ஏற்படும் இரத்த ஒழுக்கைக் நண்டறியும் விதத்தை ஈவான் என்னும் மருத்துவ ரும் அவர்தம் இணை ஆய்வாளர்களும் 1976 ஆம் ஆண்டு கண்டுபிடித்து வெளியிட்டனர். கார்பன் விண்மீன்கள் இவை மு. துளசிமணி லித்தியம். ஆக்சிஜனைவிட மிகையான கார்பன், மிகவும் குறைந்தளவு வெப்பம், சிலப்பு நிறம் ஆகியவற்றைக் கொண்ட மிகப்பெரும் விண் மீன்கள் (carbon stars) ஆகும். இவை c-விண்மீன்கள் (e-stars) என்றும் குறிப்பிடப்படும். எண்ணிக்கையில் குறைந்தளவே உள்ள 'Z காசியோப்பியா (wZ cassiopeia) இவ்வகையைச் சார்ந்த விண்மீனாகும். நிறமாலைக் கருவி மூலம் நோக்கும்போது C, CN CH ஆகிய தொகுதிகளுடன் கார்பன் சேர்மங்கள் அழுத்தமான நிரல்களாகத் தோன்றுவதைக் காண சிவப்பு லாம். விண்மீன்களின் குறைந்த வெப்பம், நிறம் ஆகியவற்றைக் கொண்டு மிகக்குளிர்ச்சி யுடையது. அதிக சிவப்பு நிறமுடையது எனப் வகையாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. நிறமாலை வகைகளில் R. N வகைகளைச் சார்ந்த விண்மீன் களாக வை உள்ளன. கா பல பங்கஜம் கணேசன் இது கார்பனேட் உட்செறிவுடைய ஒரு தொகுதிப் பாறையாகும். கார்பனோடைட் (carbonatite) காரப் பாறைக் குழம்போடு (alkaline magma) தொடர் புடையது. 1921ஆம் ஆண்டு பிராக்கர் என்பார் தெற்கு நார்வேயில் பென் என்னும் இடத்திலுள்ள கார்பனோடைட்டை ஆராய்ந்தறிந்து, கார்பனோ டைட் என்னும் பெயரைச் சூடான நீர்மம் அல்லது பாய்மத்திலிருந்து உருவாகும் அனைத்துக் கார்பனேட் செறிவு மிகுந்துள்ள படிவுகளையும் குறிக்கப் பயன் படுத்தினார். பெ கோவ் சூடான கார்பனேட் செறிவுமிக்க நீர்மத்திலிருந்து உருவான கார்பனோ டைட் பாறை வழியாகச் சில பாறைக் குழம் பாக்க முறைகளின் {magmatic process) மூலமாக உருவானது என்றும், மேலும் காரப் பாறை ஆக்க முறைகளுடன் தொடர்புடையது என்றும் விளக்கி னார். ஹென்ரிச் என்பார் கார்பனோடைட் என்ப தைக் கார்பனேட் செறிவுமிக்க தோற்றப் பாறைக் குழம்பாக்க உருவப் பாறைகளைக் (apparent magmatic derivation) குறிக்கப் பயன்படுத்தினார். கார்பனோடைட் பாறை, பாறைக் குழம்பி லிருந்து மிக அரிதாகத் தோன்றும் பாறையாகும். ஆனால் அவை அறிவியலில் முக்கிய இடம் பெறுகின் றன. ஏனென்றால் கார்பனோடைட்டைப்பற்றி ஆரா யும் போது, பாறைக் குழம்பு குறித்துச் சில தகவல் களை அது அளிக்கிறது. கார்பனோடைட்டோடு சேர்ந்து காணப்படும் குறை சிலிக்கா காரப் பாறை யின் பிறப்பிடத்தை அறிவிக்கிறது (நெஃபீலீன் சயனைட்); வெடிக்கும் எரிமலைச் செயலைப் {explosive volcanism) பற்றி அறிவிக்கிறது; குறை சிலிக்கேட் அல்லது சிலிக்கேட் அல்லாத பாறைக் குழம்பின் பிறப்பிடத்தை அறிவிக்கிறது; கிம்பர்லைட் அல்லது அபிரக பெரிடோடைட்டின் பிறப்பிடத் தையும் உணர்த்துகிறது; கவசப்பரப்பு அல்லாத பகுதியில் (crator) ஏற்படும் நகர்வுகளைப் (tectonics) பற்றிய தகவல்களையும் தெரிவிக்கிறது. கார்பனோடைட் பொருளாதார வகையில் மிகவும் முக்கியமானது. நியோபியம் என்னும் மூலகம் பைரோகுளோர் என்னும் கனிமமாக இப்பாறையில் காணப்படுகிறது. இப்பாறை அரிதில் கடத்தும் தனிமங் களைக் கொண்டுள்ளது. பாஸ்ஃபேட், பேரியம், தோரியம், மக்னீசியம். டைட்டேனியம் போன்ற வற்றின் பிறப்பிடப் பாறையாக அமைகிறது. தென் ஆஃப்ரிக்காவில் தாமிரப் படிவுகள் கார்பனோடைட் பாறையில் காணப்படும். பால்பாரா கார்பனோடைட் முழுதும் கார்பனேட்டுகளால் ஆனது. பெரும்பாலும் கால்சைட் (CaCO₂). டோலமைட் (CaMg (CO,}], அல்லது சில சமயங் களில் ஆங்கெரைட், சிடரைட், ராடோகுரோசைட், கார்பனேட் கனிமங்கள் காணப்படும். ஏறக்குறைய 170 முதன்மைக் கனிமங்களும், 20 துணைக் கனிமங் களும் இப்பாறைகளில் காணப்படுவதாகக் கூறப் படுகிறது. முக்கிய முதன்மைக் கனிமங்கள் கார்போ னேட்கள் ஆகும். சிலிக்கேட்டுகள் துணைக் கனிமங்க ளாகக் காணப்படும். காரஃபெல்சுபார்கள் (ஆர்த்தோ கிளேஸ், சானிடின், மைக்ரோகிளைன்) நெஃபீ லின், பைராக்சின் (டயாப்சைடு, ஏஜிரின் பயோ டைட், பார்ஸ்டிரைட்) முதலான சிலிக்கேட் கனிமங் கள் காணப்படும். இரும்பு. டைட்டேனியம் ஆக்சைடுகளும், சில சல்ஃபைடு லகைகளும் இப்பாறையில் சேர்ந்து