பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பாக்சிலிக்‌ அமிலங்கள்‌ 381

கார்பாக்சிலிக் அமிலங்கள் 381 காணப் காணப்படும். கார்பனோடைட்டுகளில் அரிதாக அதிக அளவில் அரிய தனிமங்களான பேரியம், ஸ்ட்ரான்சி யம், நியோபியம் போன்றவற்றோடு, பாஸ்ஃபரஸ், ஃபுளூரின், சல்ஃபர் போன்ற தனிமங்கள் படுகின்றன. அதாவது ஃபுளோர் அப்படைட், மோனோசைட், பேஸ்நேசைட், பேரைட், ஸ்ட்ரான் சியோனைட், புளூரைட், பெரோஸ்கைட், பைரோ குளோர் போன்ற கனிமங்கள் காணப்படும். உள்இடச் செறிவாக (local concentration) QuguлT GÖT EN LA யாகக்காணப்படும் அப்படைட், ஃபுளூரைட், பேரைட், பைரோகுளோர் போன்ற கனிமங்கள் பாறைக் குழம் பின் செயலாக்கத்தினாலோ மேலோட்ட இயக்கத் தாலோ பாஸ்ஃபரஸ், பேரியம், நியோபியம் மேலும் அரிய உலோகங்கள் நிறைந்த படிவுகளை ஏற்படுத்தும். கார்பனோடைட், முழுதும் படிகங்களைப் பெற்ற (holo crystalline), பொதுவாக நடுத்தர முதல், பெரும் பரல் வரையான துகள்களைக் கொண்ட பாறை யாகும். கால்சைட் படிகங்களின் பக்கங்கள் முற்றி லும் ஒழுங்கற்றவையாகக் (anhedral) காணப்படும். டோலமைட் படிகங்களும் அவ்வாறே காணப்படு கின்றன. ஆனால் துணைக் கனிமங்கள் முற்றிலும் சம பக்கங்களைப் (euhedral) பெற்றுக் காணப்படும். இப்பாறை, தோற்றத்தில் உருமாறிய பாறை வகையைச் சார்ந்த சலவைக்கல் (marble) வகையை ஒத்ததாகக் காணப்பட்டதால் நீண்ட காலமாக சலவைக்கல் என்றே தவறாகக் கருதப்பட்டது. இதைப் பொதுவாக ஒரு நுழைவு அனற் பாறையாக அறுதியிட்டுக் கூறமுடியும். அவை பெரும்பாலும் மத்திய கரணைகளாகவும் (central plugs). மேலும் ஒழுங்கற்ற செம்பாளங்களைாகவும் (irregular dykes), அரிக்கப்பட்ட எரிமலை மையங்களில் (eroded volcanic centre) காணப்படுகின்றன. இப்பாறை களுடன் தொடர்புப் பாறைகளாக அமையும் கார மிகு காரப் பாறைகள் குறிப்பாக இஜோலைட் அல்லது கார பைராக்சினைட் ஆகும், மிக அரிதாக மேலும் ஒரே வகையான பாறையாக்கச் சூழ் நிலை யில் (pctrogenic environment), சோடியம் கார்பனோ டைட் பாறைகள் வெளி உமிழ் வடிவுகளாகப் fextrusive flows) ஃபகூகூ (pahoehoe) என்னும் அமைப்புடன் காணப்படும். எடுத்துக்காட்டாக. டோரோ-ஆங்கோல் பகுதியில் வெளி உமிழ் படிவு களாகச் சோடியம் கார்பனோடைட் பாறைகள் காணப்படும். 1956 ஆம் ஆண்டு வரை 35 வகைக் கார்பனோ டைட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1968 ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை அனைத்துக் கண்டங் களிலும் சேர்த்து 350 வகையாக உயர்ந்தது. கார்ப னோடைட் அமெரிக்கா, ரஷ்யா, ஆஃப்ரிக்கா. ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படு கிறது. பாறைத்தோற்றக் குறிப்புகள். கார்போனைட் உட் செறிவு மிக்க பாறைக் குழம்பிலிருந்து கார்பனோ டைட் பாறைகள் தோன்றின என்று பவன். கிரிக்ஸ், கார்க்கர், டட்டில் போன்ற பாறையியலார் கணிக்கின்றனர், பிராக்கர் என்பவர் மடுப்புப் பாறை (metasomatic) மாற்றத்தால் கார்பனோடைட் தோன்றியதாகக் கூறுகிறார். இதன் கனிம, வேதி ஆய்வுப் பண்புகள் பாறைக் குழம்பிலிருந்து தோன்றிய காரப் பாறைகளுடன் தொடர்புடையவையாக மெய்ப்பிக்சுப்பட்டுள்ளன. பெரும்பாலான கார்பனோடைட் பாறை, பாறைக் குழம்பிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றனர். இவை புவியில் மிகவும் ஆழத்திலிருந்து தோன்றிய மூலப் பாறைக்குழம்பில் (primary magma) காணப் படும் சிலவகை நீர்ம கார்பனோடைட் பாறைக் குழம்பாகும். அல்லது பெரிடோடைட், பைராக்சி னைட் இஜோலைட், சான்கினைட் குழம்பிலிருந்து வேற்றுமைப்படுத்தப்பட்ட னோடைட் செறிவுமிக்க குழம்பு ஆகும். பாறைக் கார்ப பிராக்கர் என்பார். எஸ்ஸக்சைட் செறிவுமிக்க பாறைக்குழம்பு, சுண்ணப் பாறைகளை (lime stone) உருக்கி, கார்பனோடைட் பாறைக்குழம்பாக மாற்றும் என்று குறிப்பிட்டார். அ.வே. உடையனபிள்ளை நூலோதி: L.Krishnasamy, India's Mineral Resources, Second Edition, Oxford & IBH publi- shing Co, New Delhi. 1979. கார்பாக்சிலிக் அமிலங்கள் கார்பாக்சில் கரிமச் ட்ரை கொண்ட தொகுதிகளைக் சேர்மங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் (carboxylic acids) ஆகும். கார்பாக்சில் தொகுதியில் கார்போ னைல் தொகுதியும் (c=0 ) ஹைட்ராக்சில் தொகு தியும் (- OH) இணைந்திருத்தாலும் அவை தனித் தனியே தமக்குரிய வினைகளில் ஈடுபடுவதில்லை. கார்பாக்சில் தொகுதியின் எண்ணிக்கைக்கேற்ப இவை மோனோ கார்பாக்சிலிக், டைகார்பக்சிலிக், கார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படுகின்றன. கரிம வேதியியலில் ஒரு தனிப்பெரும் பிரிவாக அமைந்துள்ளன. இவை நீரில் பிரிகையுறுகையில் புரோட்டானை வெளிப்படுத்துகின்றன. கார்பாக்சிலிக் அமிலங்களின் பொது வாய்பாட்டை R(CXY)nCOOH என எழுதலாம்; இதில் R, X, Y என்பன ஹைட்ரஜன், நிறைவுற்ற அல்லது நிறைவுறா அரோமாட்டிக் தொகுதிகள், ஹாலோஜன், கார்பாக்சில் தொகுதிகள் அல்லது வேறு தொகுதிகளாக இருக்கலாம்.n இன் வை