பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 கார்பாக்சிலிக்‌ அமிலங்கள்‌

382 கார்பாக்சிலிக் அமிலங்கள் மதிப்பு பூஜ்யத்திலிருந்து (எ.கா. ஃபார்மிக் அமிலம்) நூறு வரை இருக்கும். CH COOH அசெட்டிக் அமிலம் CH,(COOH), மலானிக் அமிலம் CH=CH - COOH - அக்ரிலிக் அமிலம் அபிஃபாட்டிக் வரிசையில் அமையும் நிறைவுற்ற மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் பெரும்பாலும் கொழுப்புகளினின்றும் பெறப்படுவதால் அவை கொழுப்பு அமிலங்கள் (fatty acids) எனப்படுகின்றன. சில பெயரிடுதல்: IUPAC முறைப்படி கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றையொத்த ஹைட்ரோகார்பன் களின் பெயருடன் ஒயிக் (-oic) அமிலம் என்னும் பின்னொட்டுச் சேர்த்துக் குறிப்பிடப்படுகின்றன. அமிலங்களுக்குப் பெயரிடும் முறையை ருவாக்கு வதற்குப் பல் ஆண்டுகளுக்கு முன்னரே அமிலங்கள் பழக்கத்தில் இருந்தன. ஃபார்மிக் அமிலம், அசெட்டிக் அமிலம், பியூட்ரிக் அமிலம், வாலெரிக் அமிலம், பால்மிட்டிக் அமிலம், லாரிக் அமிலம் போன்றவை அவற்றில் சில, லத்தீன் மொழியில் ஃபார்மிக்கா (fornica} என்பது எறும்பு களைக் குறிக்கும். அக்காலத்தில் ஃபார்மிக் அமிலம் எறும்புகளைக் காய்ச்சி வடித்துப் பெறப்பட்டதால் அதற்கு அப்பெயர் நிலைத்துவிட்டது. இதன் வேதிப் பெயர் மெத்தனாயிக் அமிலம். இதேபோல் பெலார் கோனியம் ரோசியம் ( Pelargonium roseun) என்னும் தாவர இலைகளிலிருந்து பெறப்பட்ட அமிலம் பெலார்கோனிக் அமிலம் (CH, (CH,), COOH எனப் பெயரிடப்பட்டது. இதன் வேதிப்பெயர் நோநானா யிக் அமிலம். கார்பாக்சில் தொகுதி மூலக்கூறில் எந்த இடத்தில் அமைந்துள்ளது எனக் குறிக்க 1,2,3... என்னும் எண்கள் குறிப்பிடப்படும். பழைய முறை யில்,நீ. என்னும் கிரேக்க எழுத்து கார்பாக்சில் தொகுதியை அடுத்துள்ள கார்பன் அணுவிலிருந்து 449 குறிக்கப்பட்டு வந்தது. HOCH, CH, CHBrCHBrCH, COOH 8 Y 3 2 1 6 5 4 3,4- டைபுரோமோ-6-ஹைட்ராக்சி ஹெக்சனா யிக் அமிலம் அல்லது , -டைபுரோமோ- -ஹைட்ராக்சி கேப்ராயிக் அமிலம் பண்புகள். ஒற்றைக் கார்பாக்சிலிக் அமிலத்தின் முதல் மூன்று அமிலங்கள் அருவெறுக்கத்தக்க நெடியும், அரிக்கும் தன்மையுமுடை யவையாகவும் உயர் கொதிநிலை கொண்ட நீரில் கரையும் நீர்மங் களாகவும் உள்ளன. இவற்றின் ஒப்படர்த்தி ஏறக் குறைய ஒன்றாக உள்ளது (ஃபார்மிக், அசெட்டிக் அமிலங்களுக்கு இது மிகுதி). பத்துக் கார்பன் அணுக் களுக்கு மேற்பட்ட அமிலங்கள் நெடியற்ற, நீரில் கரையாத மெழுகு போன்ற திண்மங்களாக உள்ளன. உருகுநிலை, கொதிநிலைகள் படிப்படியாக அதிகரிக் கின்றன. ஒப்படர்த்தி அவற்றின் மூல ஹைட்ரோ கார்பன்களைப்போல் குறைகிறது. அனைத்து டைகார் பாக்சிலிக் அமிலங்களும் படிக உருவம் கொண்ட திண்மங்கள். இவற்றின் உருகுநிலைகள் அவற்றை யொத்த கொழுப்பு அமிலங்களின் உருகுநிலையை விட மிகுதி. இவை நீரில் எளிதில் கரைகின்றன. மூலக்கூறு எடை மிகும்போது கரைதிறன் குறைகிறது. அரோமாட்டிக் அமிலங்களைவிட உயர் உருகு நிலையைக் கொண்டுள்ளன. இவை குளிர்ந்த நீரில் குறைவாகவும் வெந்நீரிலும், கரிமக் கரைப்பான் களிலும் பெருமளவில் கரைகின்றன. அயனியாதல். நீரில் கார்பாக்சிலிக் அமிலங்கள் பின்வருமாறு பிரிகையுறுகின்றன. R(CXY), COOH + H,O R(CXY),COO- + H, O+ இதன் அயனியாகும் தன்மை கரைப்பானின் காரத் தன்மையைப் (basicity) பொறுத்து நேரடியாகவும் கார்பாக்சிலிக் தொகுதியில் அமைந்திருக்கும் பிணைப் பின் வலிமைக்கு எதிராகவும் மாறுபடுகிறது. எனவே இதன் பிரிகை மாறிலியைக் (dissociation constant கீழ்க்காணுமாறு எழுதலாம். Ka [H3O+] [R(CXY), COO-1 [H₂O+ [k (CXY),COOH} குறைந்த எண்ணிக்கை கார்பன் அணுக்களைக் கொண்ட நிறைவுற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் Ka அளவு குறைவாக உள்ளது. (ஏ.கா.) அசெட்டிக் அமிலம் Ka 175×10-5.இவ்வமிலம் குறைவாகப் பிரிகையுறுவதையே இது குறிக்கிறது. ஆனால் எலெக்ட்ரான் ஈர்ப்புத்தன்மை கொண்ட பதிலிகள் (substituents) கரிமத் தொடரில் அமிலத் தொகுதிக் கருகில் (2 அல்லது & கார்பன் அணு) இருந்தால் பிரிகை மாறிலி அதிகரிக்கிறது. (எ.கா.) ட்ரை குளோரோ அசெட்டிக் அமிலம், Ka=1.3x101, சில நிறைவுற்ற ஒற்றைக் கார்பாக்சிலிக் அமிலங்களின் பெயர்கள், வாய்பாடுகள், உருகுநிலைகள், கொதி நிலைகள் ஆகியன அட்டவணை - 1இல் கொடுக்கப் பட்டுள்ளன. இவை கொழுப்புகளிலிருந்தும் எண் ணெய்களிலிருந்தும் செயற்கைத் தொகுப்பு முறை களாலும் தயாரிக்கப்படுகின்றன. அமைப்புகளும் பண்புகரும். அயனியாகாத நிலை யில் கார்பாக்சிலிக் அமிலம் கீழ்க்காணும் அமைப் பைப் பெற்றுள்ளது. இதில் கார்பாக்சில்