கார்பானிஃபெரஸ் காலம் 387
கார்பானிஃபெரஸ் காலம் 387 களைப் பெற்றிருப்பினும் அவற்றை நீராற்பகுக்கும் போது அவறறையொத்த கார்பாக்சிலிக் அமிலம் கிடைக்கிறது. கார்பாக்சில் தொகுதியிலிருக்கும் ஹைட்ரஜனுக்கு மாற்றாக உலோகங்கள், காரங்கள் சேர்ந்து உப்புகள் உண்டாகின்றன. கார்பாக்சில் தொகுதி கார்போனைல் தொகுதி யைக் கொண்டிருந்தாலும் அதற்குரிய வினைகளைக் கொடுப்பதில்லை. இருப்பினும் கார்போனைல் தொகுதியை -CH, தொகுதியாக ஹைட்ரஜனேற்றம் செய்யலாம். மிகு கார்பன் அணுக்களைக் கொண்ட கொழுப்பு அமிலங்களை நிக்கல் உடனிருக்க அழுத்தத் துடன் ஹைட்ரஜன் வளிமத்தைச் செலுத்தி ஹைட் ரஜனேற்றம் செய்யலாம். ஃபார்மிக் அமிலம் தவிர ஏனைய அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை. கார்பாக்சிலிக் அமிலத்தின் சோடியம் உப்பைச் சோடா சுண்ணாம்புடன் சேர்த்து உருக்கும்போது அல்க்கேன்கள் உண்டாகின்றன. பென்சோயிக் டொலுயீக் போன்ற அரோமாட்டிக் அமிலங்களைக் கார்பாக்சில் நீக்கவினைக்குட்படுத்தி ஹைட்ரோ கார்பன்களைப் பெறலாம். பயன்கள், கார்பாக்சிலிக் அமிலங்கள் சோப்புத் தயாரிப்பிலும், தோல் பதனிடும் தொழிலிலும். நெகிழியைக் கெட்டிப்படுத்துவதிலும், கரித்தாள். மை, செயற்கை அல்லது இயற்கை ரப்பரை மேம்படு துவதிலும் நிறம் ஊன்றுவதிலும் துணிகளில் ஏற்படும் கறையை அகற்றுவதிலும் பயன்படுகின்றன. பகுப் பாய்வுகளின்போது இந்த அமிலங்கள் பயன்படுத்தப் படுகின்றன. கரித்தாள், மை முதலியன தயாரிக்க கார் பாக்சிலிக் அமிலங்கள் பயன்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஆக்சிஜனேற்றமடைவதில்லை யாதலால் ஆக்சிஜனேற்ற வினைகளை இவ்வமிலக் கரைப்பான் களில் மேற்கொள்ளமுடிகிறது. (காண்க, கொழுப்பு எண்ணெய்களும், அமிலங்களும்). பா.குற்றாலிங்கம் நூலோதி.I.L. Finar, Organic Chemistry, vol I, ELBS, London, 1974. கார்பானிஃபெரஸ் காலம் 9 இது தொல்லுயிரூழியில் (palaeozoic era உள்ள ஒரு காலப்பகுதி ஆகும். டிவோனியக் காலத்தை அடுத்து, கார்பானிஃபெரஸ் காலம் (carboniferous) தோன்றியது. கார்பானிஃபெரஸ் கரிபடிவுக்காலத்தை அடுத்துப் பெர்மியன் காலப் பாறைகள் தோன்றின. கீழ்ப் பெர்மியனுக்கும் கரிப்படிவுக் கார்பானிஃபெரஸ் படிவுகளுக்கும் இடையே உள்ள புவி அடுக்கு அமைப்பு இயலிலிருந்து(stratigraphy) தொல்லுயிரியல் வேறு அ. 8. 8- 25 அ பாடுகளை எளிதில் காண முடிகிறது. அமெரிக்காவில் கார்பானிஃபெரஸ் படிவுகள் மிஸிசிபியன், பெனிசில் வேனியன் என இருபகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. தொல்லுயிர்க்காலம் கார்பானி ஃபெரஸ் முன்கேம்பிரியன் கேம்பிரியன் ஆர்டோவிஷியன் சைலூரியன் டிவோனியன் மிசிசிப்பியன் பென்சில்வேனியன் பெர்மியன்' படம் 1 சோயிக் டிரையாசிக் 'ஜுராசிக் கிரிட்டேசியஸ் டெர்சியரி செனோ குவார்ட்டனரி சோயிக் . பென்சில்வேனியன் படிவுகளை அடுத்து நில அடுக் சியல் தடை (stratigraphical break) ஏதுமின்றிப் பெர்மியன் படிவுகள் காணப்படுகின்றன. உலகத்தின் பல இடங்களில் மத்திய பெர்மியன் காலத்தில் நில அடுக்கியல் தடை காணப்படுகிறது. ஆனால் கார் பானிஃபெரஸ் காலத்து நில அடுக்கியல் தடை குறிப் பிடக்கூடியதாக இல்லை. இந்தப் பரந்த மத்திய பெர்மியன் காலத்துத் தகஅமையா நிலை (unconfor mity) ஹெர்சீனியன் மலை தோன்றிய அசைவுகளால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. ஹெர்சீனியன் மலையின் தோற்றம் தொடர்ச்சி யாகக் கார்பானிஃபெரஸ் பெர்மியன் காலத்தில் ஏற் பட்டது. முதல் குறிப்பிடத்தக்க நிலையை மேற்குப் பேலியன் (west phalian stage) காலநிலைக்குச் சற்று மேலும் அல்லது சற்றுக் கீழும் உள்ள காலங்களில் காண முடியும். மேற்கு ஐரோப்பாவில், ஹெர்சீனியன் மலை ஆக்கம் தென்மேற்கு இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனியின் ஆர்மோரிக்கன் தொடரின் வடமேற்கு தென் கிழக்கு கிடைநீட்டம் செல்லுகின்ற பகுதி களைப்பாதித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் உள்ள மலைகள் வாரிஸ்கள் அல்லது ஹெர்சீனியன் தொடர் (ஹார்ஸ்மலைகளுக்குப்பிறகு)வடகிழக்குதென்மேற்கு கிடைநீட்டத்தைக் (NE-SW strike) கொண்டு காணப் படும். டிவோனியன் தொகுதிக் காலமுடிவில் ஐரோப்பாவில் இரண்டு பகுதிகளில் ஒப்பிடக்கூடிய அளவில் நிலப்படிவுகள் தோன்றின. ஒன்று வடக்கே உள்ள ஸ்காண்டிநேவியன். பால்டிக், பிரிட்டிஷ் பகுதியை உள்ளடக்கிய பழைய சிவப்பு மணற்பாறையாகும். மற்றொன்று மத்திய தரைக்கடல் ஆழ்நிலச் சரிவு (geosyncline) ஆகும். இது