களைகள் 21
பயிர்களும் பயிரிடும் முறைகளும். ஏற்ற பருவத்தில் பயிர் செய்வதால், பயிர்கள் விரைவாக வளர்ந்து களைகள் முளைப்பது ஓரளவு தடுக்கப்படுகிறது. மிகுதியான இலைப்பரப்புடனும், கிளைகளுடனும், விரைவில் வளரக் கூடிய. குறைந்த காலப் பயிர் வகைகள், களைகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதில்லை. சரியான விதை அளவைப் பயன் படுத்துதல், தகுந்த ஆழத்தில் நடுதல், சிறப்பான விதைப்பு முறை, குறைந்த ஆழமான வேர் கொண்ட பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்தல் போன்றவற்றில், புவியிலிருந்து களைகளின் விதைகள் முளைக்காமலும், பரவாமலும் செய்யலாம். பயிர்கள் களைகளுடன் போட்டியிடும் திறனை அறிந்து களைத் தடுப்புப் பயிர்களைத் தேர்ந்தெடுத்துச் சாகுபடி செய்யலாம். தீவனப் பயிர்களின் விதைகளை நெருக்கி விதைப்பதால் களைகள் குறைய வாய்ப் புண்டு. மிகு இடைவெளி கொண்ட பயிர்களுக் கிடையே குறுகிய காலப் வகைகளை ஊடு பயிராகப் பயிரிட்டால் பயிர் வளர்ந்து நிலத்தை மூடு முன் தோன்றக்கூடிய களைகளைக் கட்டுப் படுத்த முடியும். பயறு தாவர நோய்க்காரணிகள். நோய்கள் பயிர் களுக்குப் பேரழிவை விளைவிக்கின்றன. நோய்க் காரணிகளைக் களைச் செடிகளின் திசுக்களில் வளர்க்கும்போது, அத்திசு கொல்லப்பட்டு, களையும் மடிகிறது. பூசணம் போன்ற உயிரிகள் சிதல்கள் (spores) மூலமாக விரைவிலும், எளிதிலும் பரவுவ தால், களைச் செடிகள் விரைவில் அழிகின்றன. சில பூசணங்கள் குறிப்பிட்ட களை இனங்களில் விரைவில் னப்பெருக்கமடைவதால், களைகள் அல்லாதபர்த் தாவரங்களைப் பாதிப்பதில்லை, ஆல்ட்டர்நேரியா மேக்ரோஸ்போரா (Alternaria macrospkara) என்னும் பூசணம் அநோடா கிரிஸ்டேடா (Anda cristata) என் னும் களையைத் தாக்கி அழிக்கிறது. நீர் வாழ் களைகளைக் கட்டுப்படுத்த, பூசணங்கள் முழு அளவில் பயன்படுகின்றன. ஆகாயத் தாமரையைக் கட்டுப் படுத்த செர்க்கோஸ்போரா ரோட்மானி (Cercospora rodmanii) என்னும் நோயூக்கி பயன்படுகிறது. இது மனித இனத்திற்கோ விலங்கினங்களுக்கோ தருவதில்லை. கேடு பூச்சிகளும் மீன்களும். களைகளின் உயிர் வழிக் கட்டுப்பாட்டில் பூச்சி இனங்கள் பெருமளவில் பங்கு கொள்கின்றன. வெப்பி டாப்பீரா, ஹெமிப்ட்டீரா, கோலியோப்ட்டீரா, ஹைமெனோப்ட்டீரா போன்ற இனங்களில் உள்ள பூச்சி இனங்கள் உயிர் வழிக் கட்டுப்பாட்டில் பெரும்பங்கு பெறுகின்றன. சப்பாத்திக் கள்ளியைக் சுட்டுப்படுத்த டேக்டை லேபியஸ் இண்டிகஸ் Dactylapius indicus) என்னும் பூச்சி பயன்படுகிறது. பூச்சிகள், களைச் செடிகளின் இலை, தண்டுப் பகுதிகளை விரைவில் உண்பதால், களைகள் விரைவில் அழிகின்றன. காக்டோ களைகள் 2/ பிளாஸ்டிஸ் கேக்டோரம் (Cacloblastis cactorum) என்னும் புழு களைகளின் தண்டுப் பகுதியைக் குடைந்தும்,வேர்களைத் தாக்கியும், இளந்தளிர்களை உண்டும் களைகள் அழிக்கின்றது. டிலாபியா மொசாம்பிகா (Tilapia mossamhica) என்னும் மீன், நீர் வாழ் களைகளின் வேர்ப்பகுதியையும், பச்சை யத்தையும் உண்டு களைகளை அழிக்கிறது. உயிர் வழிக் கட்டுப்பாட்டில் சில காரணிகள். களைகளின் உயிர் வழிக் கட்டுப்பாடு சிறப்பாகச் செயல்பட அதன் எதிரியைத் தேர்ந்தெடுத்துப் புகுத்த வேண்டும். களைகளின் எதிரிகள் குறுகிய காலத்தில் எண்ணிக்கையில் பெருகும் தன்மை, புதுச் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளும் தன்மை, உயர் இனப்பெருக்கம் செய்யக்கூடிய திறன் முதலிய வற்றைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளால் தாக்கப்பட்ட பின்பு செயல்படும் திறனைப் பொறுத்துக் களைகள் ஓரளவு தாக்கம் அடைகின்றன. மீண்டும் வளர்ச்சியடையாமலும், பரவாமலும் இருக்க வேண்டும். களைகளைத் தாக்கும் பூச்சியினம், ஓரிடத்தில் நிலைத்து வாழ தட்பவெப்ப நிலையும் ஏற்றவாறு இருக்க வேண்டும். சுளைகளின் வகைப்பாடு. வாழுங் காலத்தைப் பொறுத்துக் களைகளை மூன்று வகையாகப் பிரிக்க லாம். ஒரு பருவக்களைகள் (annual) தம் வாழ் நாளை ஒருபருவம் அல்லது ஓர் ஆண்டிற்குள் முடித்துக் கொள்கின்றன. இவ்வகைக் களைகள் பெரும்பாலும் விதைகளின் மூலம் பரவுகின்றன. விதைகள் பெருமளவில் பெருகிப் பயிர்த் தாவரங் களுடன் போட்டியிடுகின்றன. சில ஒருபருவக் களை கள் வெப்பக் காலத் தொடக்கத்தில் முளைத்து, அது முடியும் தறுவாயில் பூத்து, விதைகளைப் பெருக்கி அழிக்கின்றன. சில ஒருபருவக் களைகள் குளிர்காலத் தொடக்கத்தில் முளைத்து, பூத்து. வெப்பக்காலத் தொடக்கத்திற்குள் விதைப்பெருக்கம் செய்து அழிகின்றன. இவற்றின் விதைகள் வெப்பக் காலத்தில் வளர்வடக்கம் (dormancy) கொண்டு மண்ணில் தங்குகின்றன. (Argemone mexicana). எ.கா. பிரம்மந்தண்டு இருபருவக் களைகள் (biennials) முதற் பருவத் தில் வளர்ந்து அடுத்த பருவத்தில் விதைப் பெருக்கம் செய்து மடிகின்றன. முள் பொன்னாங்கண்ணி Alternanthera echinata) போன்ற களைகள் இவ் வகையைச் சாரும். பல பருவ அல்லது நீண்ட காலக் களைகள் (perennials) தொடர்ந்து நீண்ட காலம் நிலைத்து வாழக் கூடியவை. இக்களைகள் சிக்கலான சூழ்நிலையிலும், வேறுபட்ட வெப்பநிலையிலும் வளரக்கூடியவை. விதைகள் மூலமும், மண்ணிற்குக் கீழ் உள்ள தண்டு, கிழங்கு, வேர்ப்பகுதிகள் மூலமும் இனப்பெருக்கமடைகின்றன. இவை உணவை வேர்ப் பகுதியில் தேக்கி வைத்துத் தேவையான பருவத்தில்