390 கார்பானிஃபெரஸ் காலம்
390 கார்பானிஃபெரஸ் காலம் படம் 4.240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் உருவான கார்பானிஃபெரஸ் நிலம் தென்மேற்கு இங்கிலாந்திலிருந்து பரவி, பிரான்சு, மத்திய ஐரோப்பா வழியாக மத்திய தரைக்கடலில் முடிவடைகிறது. பழைய சிவப்பு மணற்பாறைப் பகுதி நிலப்பகுதியாக மாறியது. இந்நிலப்பகுதி பின்னர் ஆழம் குறைந்த கடலாலும், பரந்த ஏரிகளாலும் சூழப்பெற்றது. இதில் மக்னீசீயச் சுண்ணப்பாறைகள் (dolomitic rock) படிந்தன. இந்த அடுக்கு (strata) டைநான்சியன் காலநிலையைக்கொண்டுள்ளது. இதில் பவளம், பிராக்கியோபோடா புதைபடிவங்கள் (fossiis) பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. வடமேற்கு இங்கிலாந்து, பிரான்ஸ் பகுதிகளில் மணற்பாறையும், களிமண்பாறையும் கலந்து பிளைஸ் எனப்படும் ஒருவகைப் பாறை காணப்படுகிறது. இதற்குக் கம் பாறைத்தொகுதி (culm facies) என்று பெயர். இந்தப் பாறைத்தொகுதி களிமண், குறை ஆழப்படிவு மணற்பாறைகளைக் கொண்டுள்ளது. இதில், ஏரிகளில் காணப்படும் தொல்லுயிரிகள், மேலும் சுனிமப்பொருள்கள் காணப்படுகின்றன. மத்தியதரைக் கடல் ஆழ்நிலச்சரிவுப் பகுதி மிகுந்துள்ள அம்மோ னாய்டுகள் கொண்ட களிமண் பாறையாகும். டைநான்சியன் கால முடிவில் ஐரோப்பாவின் பெரும் பாலான பகுதி பரந்த நிலப்பகுதியாக உருவானது. இதில் சதுப்பு நிலப்படிவுகளோடு, களிமண் பாறை களும், கரிப் பாறைப்படிவுகளும், மிகக் குறைவான படம் 5.கார்பானிஃபெரஸ் காலத்து விலங்கின் புதை படிவம் (பிராக்கியோபோடா)