கார்பீன்கள் 393
புலத்தின் திசையிலேயே அமைந்து அதற்கு வலிமை யூட்டுகிறது. இதனால் காந்தத்தடை மிகுதியாகிறது. சுருளை வட்டுக்கு இணையாக இணைத்தால் இந்தக் கருவி ஒரு திசையில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிரின மின்தடைப் பண்பைக் காட்டுகிறது. - கே.என். ராமச்சந்திரன் நூலோதி. Donald G. Fink, H. Wayne Beaty, Standard Handbook For Electrical Engineers, Eleventh Edition, McGraw - Hill Book Company, 1978. கார்பினோ வட்டு இக்கருவி காந்தத் செய்ய உலோகங்களில் தோன்றும் தடையை (magneto resistance) ஆய்வு உதவுகிறது. இதை ஓ. கார்பினோ என்பார் கண்டு பிடித்தார்.கார்பினோ வட்டு (corbino disk) ஒரு மின் கடத்தும் பொருளாலான வட்டு ஆகும். அதில் வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் இரண்டு, ஒரே மைய வட்ட வடிவமான முனைகள் அமைந் திருக்கும். வட்டின் தளத்திற்குச் செங்குத்தாக ஒரு காந்தப் புலத்தை ஏற்படுத்தும்போது வெளி வளையத் திற்கும் உள் வளையத்திற்கும் இடையில் மின்னோட் டம் தோன்றி ஒருசுருள்வடிவப் பாதையில் பாய்கிறது. இதன் காரணமாகக் காந்தத் தடை ஏற்படுகிறது. -கே.என்.ராமச்சந்திரன் நாலோதி. Donald G. Fink, H. Wayne Beaty, Standard Hand Book for Electrical Engineers, Eleventh Edition, McGraw -Hill Book Company, 1978. கார்பீன்கள் வே! ஈரிணைதிறன் (divalent) கார்பன் அணுக்களைப் பெற்ற கரிம மூலக்கூறு வகைச் சேர்மங்கள் கார் பீன்கள் (carbenes) எனப்படுகின்றன. இவை வினைகளில் இடைநிலைப் பொருள்களாக அமை மந் திருந்த போதும் வேதி வினைகளைப் பற்றியும், மூலக்கூறு அமைப்பைப் பற்றியும் அறிவதற்குப் பயன் படுகின்றன. தவிர, சிறு வளையமாக அமையப் பெற்ற கார்பன் அணுக்களைக் கொண்ட மூலக்கூறு களைத் தயாரிப்பதற்கும் கார்பீன்கள் பயன்படு கின்றன. எலெக்ட்ரான் பிணைப்புக் கொள்கைப்படி அணுக்களுக்கிடையில் எலெக்ட்ரான்கள் பங்கிடப் படுவதால் பிணைப்புகள் உண்டாகின்றன. இக்கொள் கைப் படி, கார்பீன்களில் உள்ள கார்பன் அணுக்களில் மொத்தமுள்ள நான்கு இணைதிறன் எலெக்ட்ரான் கார்பீன்கள் 393 களில் இரண்டு மட்டுமே பிணைப்பில் ஈடுபட்டுள்ளன. மாறாக,ஒன்றுக்கு மேல் பிணைப்புக் சொண்ட ஹைட்ரஜன் சயனைடு போன்ற சேர்மத்தில் அனைத்து நான்கு எலெக்ட்ரான்களும் பிணைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கார்பீன் மூலக்கூறுகளில் எலெக்ட்ரான் மிகையோ எலெக்ட்ரான் குறைவோ காணப்படாமையால் அவை மின்சுமையற்று உள்ளன. தொடக்க ஆய்வுகள். கார்பீன்களின் மிகுவினை புரியும் தன்மையால் அவற்றின் நிலைப்புத்தன்மை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இவ வற்றைப் பற்றி முரண்பாடில்லாத நேரடிச் சான்றுகள் ஏறக் குறைய அண்மைக்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. ஆனாலும் ஈரிணைதிறன் கார்பன் சேர்மங் களைப்பற்றி ஏறக்குறைய 1879 ஆம் ஆண்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. குளோரோஃபார்மை, கார வினையூக்கியால் நீராற்பகுக்கும்போது டைகுளோ ரோகார்பீன் என்னும் இடைநிலைப் பொருள் உண்டாவதாகக் குறிக்கப்பட்டுள்ளது. பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இறுதியில் ஈரிணைதிறன் கார்பன் சேர்மங்களைப் பற்றியும், அவை பல வேதி வினை களில் இடைநிலைப் பொருள்களாக விளங்குவதைப் பற்றியும் ஆராய்ந்து விரிவான கொள்கை உருவாக்கப் பட்டது. ஆனால் பின்னர் நடைபெற்ற விரிவான ஆய்வின் பயனாக முன்னர்க் குறிப்பிடப்பட்ட கொள்கையின் பெரும்பாலான கூற்றுகள் தவறு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1950 இல் தான் கார்பீன் வேதியியலில் சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப் பட்டுத் தெளிவான சான்றுகளும், பல்வேறு முறைகள் மூலம் கார்பீன்களின் அமைப்புப் பற்றிய செய்திகளும் அறியப்பட்டன. எலெக்ட்ரான் அமைப்பு மற்றும் மூலக்கூறு அமைப்பு. வேதிப் பிணைப்புக் கொள்கைகள் இரு அமைப்புக் களைக் கார்பீன்களுக்கு அளிக்கின்றன. அவற்றில் ஒன்று கார்பீன் மூலக்கூறின் தரை ஆற்றல் மட்டத் தைக் (ground state) குறிக்கிறது. இது ஈரிணைதிறன் கார்பன் அணுவுடன் இணைந்துள்ள அணுக்களையும். மூலக்கூறுகளையும் பொறுத்துள்ளது. இதற்குக் காரணம் கார்பன் அணுவிலுள்ள நான்கு இணைதிறன் ஆர்பிட்டால்களில் ரு இணைதிறன் ஆர்பிட்டால் களே பிணைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சி யிருக்கும் இரு ஆர்பிட்டால்களும் இரண்டு பிணை வுறா எலெக்ட்ரான்களைப் கொள்ள பெற்றுக் ஏதுவாக இருக்கின்றன. பொதுவாக ஒவ்வோர் ஆர்பிட்டாலுள் ஒன்றிற்கொன்று எதிர்ச் சுழற்சி கொண்ட இரு எலெக்ட்ரான்களை இரு வழிகளில் ஆர் ஆர்பிட்டாவில் நிரப்ப முடியும். அவற்றில் ஒன்றில் இரு எலெக்ட்ரான்களும் எதிர்ச் சுழற்சியுடன் ஓர் ஆர்பிட்டாலில் இருக்கலாம் அல்லது இரண்டு ஆர்பீட்டால்களிலும் ஒரு திசையில் சுழற்சி கொண்ட எலெக்ட்ரான்கள் நிரப்பப்படலாம். இவ்வாறு ஒரே திசைச் சுழற்சி கொண்ட ஆர்ப்பிட்டால் சேர்மங்கள்