பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 கார்பீன்கள்‌

394 கார்பின்கள் காந்தத் தன்மையுடன் உள்ளன. எனவே, காந்தப் புலத்தில் வைக்கும்போது திருப்புத்திறன் (moment) இணையாகவோ (parallel), செங்குத்தாகவோ (perpendicular), எதிர் ணையாகவோ (anti parallel) அமையலாம். இம் மூன்று நிலைகளும் சிறிதளவு மாறுபாடான ஆற்றல்களுடைய மூன்று அமைப்புகளைக் கொடுக்கின்றன. இதனால் பிணை வுறா எலெக்ட்ரான்களைக் கொண்ட பொருள்கள் மேற்கூறிய மூன்று அமைப்புகளில் அமையும் வாய்ப்பு ஏற்படுகிறது. (triplet state) இது மும்மைநிலை எனப்படும். மாறாக, அனைத்து எலெக்ட்ரான்களும் பிணைவுற்ற நிலையில் இருக்கும் சேர்மங்களில் காந்தத் திருப்புத்திறன் காணப்படுவதில்லை. இது ஒற்றைநிலை (singlet) எனப்படுகிறது. கார்பீன்கள் மேற்கூறிய ஒற்றை நிலை அல்லது மும்மை நிலைகளில் ருக்கலாம். பெரும்பாலான கரிமச்சேர்மங்களில் ஒற்றைநிலை மும்மைநிலையைவிட அதிக நிலைப்புத் தன்மை யுடையதாக உள்ளது. எனவே, இம் மூலக்கூறுகளின் சாதாரண அல்லது தரைமட்டநிலை ஒற்றை நிலை யாக அமைந்துள்ளது. இச்சேர்மங்களில் மும்மைநிலை என்பது கிளர்வுற்ற நிலை அல்லது உயர் ஆற்றல் நிலையாக இருக்கின்றது. கார்பீன்களில் மாறாக. இரு பிணைவுறா எலெக்ட்ரான்கள் மற்றும் இரு நிறைவுறா ஆர்பிட்டால்களினால், கொள்கைப்படி கண்டால், மும்மைநிலையே ஒற்றை நிலையைவிட மிகுதியான நிலைப்புத்தன்மை மிக்கதாக இருத்தல் வேண்டும். மேலும், இக்கொள்கை கார்பீன் கார்பன் அணுவும், அதனுடன் சேர்ந்திருக்கும் இரு அணுக் களும் நீள் அமைப்பைப் போல் அல்லாமல் V போன்ற அமைப்பால் இணைந்திருக்கவேண்டும் என்று கூறு கிறது. அதாவது, மும்மைநிலை. ஒற்றை லை ஆகிய இரு நிலைகளிலும் பிணைப்புக் கோணம் 180 க்குக் குறைவாக இருக்க வேண்டும். ஒற்றை நிலைப் பிணைப்புக் கோணம். மும்மை நிலை பிணைப்புக் கோணத்தைவிட அதிகமாக உள்ளது என அறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்புகள் ஆய்வு மூலம் நிறுவப்பட்டுள்ளன. சான்றாக, மெத்திலீன் எலெக்ட்ரான் காந்த உடனிசைவு நிரலியல் (electron magnetic resonance spectroscopy) மும்மைநிலையில் இருப்பதாகவும் கார்பன் ஹைட்ரஜன் அணுக்களுக் கிடைப்பட்ட கோணம் 136° ஆகவும் உள்ளன. ஒளியியல் நிரலியல் (optics spectroscopy) மூலம் சில வேளைகளில் அரிதாக இருக்கும் மெத்திலீனின் ஒற்றை நிலைப் பிணைப்புக் கோணம் 1040 இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெத்திலீன் கார்பீனின் அமைப்புகளும், பிணைவுறா எலெக்ட் ரான்கள் ஒற்றை மற்றும் மும்மை நிலைகளில் இருக்கும் அமைப்பும் படத்தில் காட்டப்பட்டுள்ளன. கார்பீன் மூலக்கூறில் ஒற்றை அல்லது மும்மை ஆகிய இரண்டில் மிசுக் குறைவான நிலை ஆக 136° H 104° DD மும்மை நிலை ஒற்றைநிலை ஆற்றலைக் (lowest energy state } குறிக்கிறது என்பதைச் சில விதிவிலக்கத்துடன் பின்வருமாறு விதி யாகக் குறிப்பிடலாம். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்ட கார்பீன்கள் மும்மை நிலையி லும். ஹாலோஜன் பதிலிடப்பட்ட கார்பீன்கள் ஒற்றை நிலையிலும் அமைகின்றன.மும்மை நிலைக் கார்பீன்களுக்கு மெத்திலீன் (H-C-H), ஃபீனைல் மெத்திலீன் (C,H,--C-H), டைஃபீனைல் மெத்திலீன் (C,H;-C-C H;), புரோபார்ஜைலீன் (HC=C-C-H) போன்றவற்றையும், ஒற்றை நிலைக் கார்பீன்களுக்கு மெத்தாக்சிமெத்திலீன் (CH,O-(-H), குளோரோ ஃபீனைல் மெத்திலீன் (CI--C--H), குளோரோ மெத்திலீன் (C H,-C--(I) ஆகியவற்றையும் சான் றாகக் கூறலாம். B உருவாதல். கார்பீன்கள் மிகுதியான ஆற்றல் மூலக்கூறுகளாக இருப்பதால் அவற்றை மிகுதியான ஆற்றல் முன்னோடிகளைக் கொண்டோ வெளிப்புற மிகை ஆற்றலைக் கொண்டோ உருவாக்கலாம்.ஒளி யினால் தூண்டப்படும் வேதிப் பரிமாற்ற வினைகள் (ஒளிவேதி வினைகள்), சாதாரணமாகக் கார்பீன்களை உருவாக்கப் பயன்படுகின்றன. டைஅசோ தொகுதி யைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் கார்பீன்கள் உரு வாக்கலில் முன்னோடிகளாகச் செயல்படுகின்றன. டைஅசோ சேர்மங்களின் மூலக்கூறு அமைப்பைப் பின்வரும் பொது அமைப்பால் குறிப்பிடலாம். R R C=N=N R,R' என்பன கரிமத் தொகுதிகள். இவை ஒன்றாகவோ மாறுபட்டோ இருக்கலாம். ஒளியாற்பகுப்பு (photolysis) அல்லது வெப்பத்தாற் பகுப்பிற்கு (pyrolysis) டைஅசோ சேர்மங்களை உட் படுத்தும்போது அவை பிளவுபட்டுக் கார்பீனையும்