கார்பீன்கள் 395
நைட்ரஜன் வளிமத்தையும் கொடுக்கின்றன. டைஅசீரின்கள் என்ற டைஅசோசேர்மங்களை ஒத்த வளையச் சேர்மங்கள். டைஅசோ சேர்மங்களைப் போலவே பிளவுறுகின்றன. இவை கார்பீன்கள் உரு வாதலில் முன்னோடிகளாக உள்ளன. டைஅசோ சேர்மத்திலிருந்து கார்பீன் உருவாதலைப் பின்வரு மாறு விளக்கலாம். R R + C=N=N R-C-R' + N குறைந்த வெப்பநிலையில் வினையுறாத திண்ம ஊடகத்தில் டைஅசோ சேர்மங்களை ஒளியாற் பகுக்கும்போது உண்டா டாகும். கார்பீன் மேலும் பிளவுறுவது குறைக்கப்படுகிறது. எனவே, குறிப்பிடத் தக்க அளவு கார்பீன் திண்ம ஊடகத்தின் அணிக் கோவையில் தங்கியிருக்கிறது. சான்றாக கார்பீன் களில் அதிசு வினைபுரிதிறன் மிக்க மெத்திலீன். திண்ம செனான் ஊடகத்தின் அணிக்கோவையில் உறிஞ்சப்படும்போது அது ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் நிலைப்புத்தன்மை கொண்டதாக அமை கிறது. இதைப்போலவே பெரும்பாலான கார்பீன் களும் ஆய்விற்காகப் பெறப்படுகின்றன. கீட்டின் களை (C = C 0) உளியாற்பகுத்தால் கார்பீன் களும் கார்பன் மோனாக்சைடும் உண்டாகின்றன. R R' c=c=0. → R-C-R' + CO சில வேளைகளில் மூன்று உறுப்புக் கார்பன் வளையங் களைக் கொண்ட வளையப் புரோப்பேன்கள் ஒளி வேதியியல் வினைகளில் கார்பீன் உருவாக்க முன் னோடிகளாக விளங்குகின்றன. காட்டாக 1,1,2.2- டெட்ராஃபீனைல் சைக்ளோபுரோப்பேன் மூலக்கூறு டைஃபீனைல் கார்பீனாக மாற்றப்படுவதைப் பின் வரும் வினை விளக்குகிறது. HH (C,H,),C-C(C,H,), (C,H,),C=CH, + C,H,-C-C;H; அயனி வினைகளில் கார்பீன்கள் உருவாதலைக் குளோரோஃபார்ம் பொட்டாசியம் t - பியூட்டாக்சைடு போன்ற வீரியமிக்க காரத்துடன் வினைபுரிவதிலிருந்து விளக்கலாம். இவ்வினையின் முதல் நிலையில் புரோட் டான் அல்லது ஹைட்ரஜன் அயனி (HF) குளோரோ ஃபார்ம் மூலக்கூறிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் விளையும் பொட்டாசியம் ட்ரைகுளோரோ கார்பீன்கள் 395 மெத்தைடு,பின்னர் பொட்டாசியம் குளோரைடு மூலக்கூறை வெளியேற்றுவதால் டைகுளோரோ கார்பீன் சேர்மம் உண்டாகும். இதுபோலவே ஏனைய ஹாலோன்பார்ம் சேர்மங்களும் வினைபுரிந்து டை ஹாலோகார்பீன்களைக் கொடுக்கின் றன. வினைகள். மெத்திலீன் எல்லா மூலக்கூறுகளையும் ஒப்பிடும்போது மிகுதியும் வினைபுரி திறன் பெற்றது. மிகக் குறைந்த பொருள்களே மெத்திலீனை எதிர்க்கும் திறன் பெற்றவையாக அமைந்துள்ளன. உடனிசைவு விளைவினால் கார்பீன்களின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கும்போது அவற்றின் வினைத்திறன் குறைகிறது. டைஃபுளூரோகார்பீன் மற்றும் மெத் போன்றவற்றின் தாக்சி கார்பீன் வினைதிறன் மெத்திலீனைவிடக் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் அவை உடனிசைவினால் நிலை பெறுவ தாகும். + F-C-FF-C-FF-C-F CH,O-C-H, CH,O=C-H கார்பீன்கள் வினைகளை, மூலக்கூறிடை (intermo- lecular)வினைகள் என்றும் மூலக்கூறுள்(intramolecular) வினைகள் என்றும் வகைப்படுத்தலாம். மூலக்கூறுள் அல்லது அமைப்பு மாற்ற வினைகளில் (rear- rangement reactions) கார்பின் மூலக்கூறு மட்டுமே ஈடுபடும்; வெளிப்பொருள் எதுவும் இதில் பயன் படுத்தப்படுவதில்லை. இதற்கு மெத்தில் கார்பீன் எத்திலீனாக அமைப்பு மாற்றமடையும் வினையைச் சான்றாக்கலாம். CH,- C - H -- H,C-CH, த்தகைய அமைப்பு மாற்ற அணுக்களை மட்டுமே கொண்ட வினைகள் மூன்று கார்பீன்களில் (அதாவது மெத்திலீன் அல்லது ஹாலோமெத்திலீன் களில்) ஏற்படுவதில்லை. மூலக்கூறிடைக் கார்பீன் வினைகளில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை, இருபடியாதல் (dineris- ation). சேர்க்கை (addition), உள் நுழைத்தல் (inser- tion) ஆகியன ஆகும். இருபடியாதல் வினையில் இரு கார்பீன் மூலக்கூறுகள் இணைந்து ஒலிஃபீன்களை அளிக்கின்றன. இவற்றின் மூலக்கூறு வாய்பாடு மூலக் கார்பீன்களின் இரு மடங்காக உள்ளது. காட்டாக, டைமெத்தாக்சி கார்பீனிலிருந்து டெட்ரா மெத்தாக்சி எத்திலீன் பெறுதலைக் குறிப்பிடலாம். (CH,O),C=C(OCH,), 2CH,O-C-OCH, கார்பீன்களை ஒலிஃபீன்களாக அல்லது அசெட்டி லீன்களாக மாற்றும் வினை பயனுள்ள வினையாகும். னெனில் இவை வளையப் புரோப்பேன்கள் அல்லது வளையப் புரோப்பீன்கள் போன்ற வேறுபட்ட அமைப்புகளையுடைய சேர்மங்களை எளிதாகத்