பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பைடுகள்‌ 397

கார்பெனிசிலின் இது பெனிசிலின் வகையைச் சார்ந்த நுண்ணுயிர் எதிர் மருந்தாகும். இது 1967இல் ஒரு பரந்த இலக் குடைய (wide spectrum) பெனிசிலினாக அறிமுகப் படுத்தப்பட்டது. குறிப்பாக இது சூடோமோனஸ் அருஜினோசா (Pseudomonas aeruginosa), வகையைச் சார்ந்த புரோட்டியஸ் (proteus) ஆகிய நுண்ணுயிரிகளை அழிக்கவல்லது. மேலும், ஆம்பிசிலினுக்கு எதிர்ப்புணர்ச்சியைத் (resistance) தோற்றுவிக்கும் சில பாக்டீரியாக்களையும் எதிர்க்க து பயன்ப படுகிறது. இது டைசோடியம் & -கார்பாக்சி பென்சைல் பெனிசிலின் ஆகும். இயங்கும் விதம். இது பெனிசிலினைப் போன்றே பாக்டீரியாக்களின் செல் சுவரைத் தகர்த்துப் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இம்மருந்து பயன்படும் நோய்நிலைகள். இது. சூடோமோனஸ் அருஜினோசாவால் ஏற்படும் நிமோ னியா இரத்தத்தில் பாக்டீரியா பெருக்கம் மூளை யுறை அழற்சி ஆகிய நோய்நிலைகளில் பயன்படுகிறது. இந்நிலைகளில், இதை ஜென்ட்டாமைசினுடன் சேர்த்துச் செலுத்தும்போது மிகு பயன் கிடைக்கிறது. சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றிலும் இம்மருந்தைப் பயன்படுத்தலாம். உள்ளேற்பும் வெளியேற்றமும். வாய்மூலம் தரும் போது இம்மருந்து உள்ளேற்பு அடைவதில்லை. தசைமூலம் செலுத்தும்போது கிடைக்கும் அளவை விடச் சிரை வழியே செலுத்தும்போது, இரத்தத்தில் பல் மடங்கு மிகுதியாகக் கிடைக்கிறது. எனவே இது பெரும்பாலும் சிரை வழியாகச் செலுத்தப் படுகிறது. இத்துடன் புரோபெனசிடை (probenecid) வாய்மூலம் சேர்த்துத் தரும்போது இம்மருந்தின் பிளாஸ்மா அளவு இருமடங்கு மிகுதியாகும். இம் மருந்து பெரும்பாலும் சிறுநீர் மூலம் வெளியேற்றப் படுகிறது. மருந்தளவு கடும் நோய்த்தொற்று உள்ளவர் சுளுக்கு, இது நாள் ஒன்றுக்கு 30-40 கிராம் அளவில் 4-6 மணிக்கு ஒரு முறையாகப் பங்கிட்டுச் சிரை வழியே செலுத்தப்படவேண்டும். குழந்தைகளிடத்தில் நாள் ஒன்றுக்கு கிலோ எடைக்கு 200-400 மி.கி. என்னும் அளவில் இரண்டு அல்லது மூன்று வேளை யாகப் பங்கிட்டுச் செலுத்த வேண்டும். வேண்டாத விளைவுகள். மிகச் சிலரிடம் இது பெனிசிலினைப் போன்று உடனடி ஒவ்வாமையை amphylactic shock) ஏற்படுத்துகிறது. இம்மருந்தும் பெனிசிலின் வகையைச் சேர்ந்ததால், பெனிசிலினுக்கு ஒவ்வாமையுடையவர்களிடம் இதையும் பயன்படுத்தக் கூடாது.இது தோல் பொரிப்பையும் (skin rashes) ஏற்படுத்தக்கூடும். மிகு ளவில் தரும்போது, சார்பைடுகள் 397 இரத்தத் தட்டணுக்கள் ஒன்று சேர்வதை (platelet aggregation) இது ஒடுக்கி இரத்த ஒழுக்கை (bleeding) ஏற்படுத்தக்கூடும். கார்பெனிசிலின் இன்டனைல் (carbenecillin indanyl). இது கார்பெனிசிலின் எஸ்ட்டர் ஆகும். இது இரைப்பை அமிலத்தால் அழிக்கப்படுவதில்லை. எனவே, வாய்மூலம் தரும்போது கார்பெனிசிலினாக இது உடலில் மாற்றம் அடைகிறது. சிறுநீரக நோய்த் தொற்று மருத்துவத்தில் இது பயனளிக்ககக்கூடும். மாத்திரைகளாக இது 500 மி.கி. அளவுள்ள கிடைக்கிறது. கார்பைடுகள் வை -மு. துளசிமணி சேர்மங்களாகும். இருதனிமச் இவற்றில் கார்பன் மற்றொரு தனிமத்துடன் இணைந்து காணப் படுகிறது. பொதுவாக, இணையும் மற்ற தனிமங்கள் கார்பனைவிட மிகு நேர்மின் தன்மை பெற்றவையாக இருக்கும். கார்பைடுகளை அவற்றின் அமைப்பு. பண்பு வேறுபாடுகளின் அடிப்படையில், அயனிக் கார்பைடுகள் (ionic carbides) சகபிணைப்புக் கார் பைடுகள் (covalent carbides) உலோகக் கார் பைடுகள் (metallic or interstitial carbides) என வகைப்படுத்தலாம். அயளிக்-கார்பைடுகள். இக்கார்பைடுகள் தனிம வரிசை அட்டவணையில் I, II, III ஆம் தொகுதியி லுள்ள உலோகங்களுடன் ணைந்து உண்டாகின் றன. இவை படிசு வடிவமுடையன: திண்ம நிலை யில் மின்கடத்தாத் தன்மையுடையன; நீருடன் வினை புரிந்து ஹைட்ரோகார்பன்களைத் தருகின்றன. இவற்றிலிருந்து வெளிப்படும் ஹைட்ரோகார்பனைப் பொறுத்து, இவை மெதனைடுகள், அசெட்டிலைடு கள், அலிலைடுகள், ஹைட்ரோகார்பனைடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. மெதனைடுகள். இக்கார்பைடுகள் நீருடன் வினைபுரியும்போது மெத்தேன் வளிமத்தை வெளிப் படுத்துகின்றன. எ.கா. அலுமினியம் கார்பைடு (AI,C,), பெரிலியம் கார்பைடு (Be,C). Al,C, + 12H,O → 4A(OH), + 3CH, அசெட்டிலைடுகள். நீராற்பகுப்பின் போது அசெட்டிலீனைத் தரும் கார்பைடுகள், அசெட்டி லைடுகள் எனப்படும். பெரிலியம், தாமிரம் (I) ஆகிய உலோகங்களைத் தவிர மற்ற கார, காரமண் உலோ கங்கள் இவ்வகைக் கார்பைடுகளைத் தருகின்றன. .