கார்போக அரிசி 399
கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் விதைக்கு மணமும் மருத்துவக் குணமும் உண்டு. புதர்போன்ற ஒருபருவச்செடியாகிய செடி. து 0.6-1.2 மீ. உயரமுள்ளது. விதைகளில் ஒளி புகும் எண்ணெய்ச் சுரப்பி, புள்ளிகளாக இருக்கும். கிளைகளில் உள்ள முண்டுகள் முட்டை வடிவமாக 4,5-6, 3-4.5 செ. மீ. அளவில் உள்ளன. இலைகளின் இரு புறங்களிலும் மயிர் காணப்படும். இலையோரம் பற்களுடன் காணப்படும். நுனி கூரானது. இலைக் காம்பு 0.6-2.5 செ.மீ. நீளமுடையது. இலைக்காம் பில் மயிரும் சுரப்பிகளும் காணப்படும். சிற்றிலைக் காம்பு 2 மி.மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் ஈட்டி வடிவில் 3 மி.மீ. அளவில் இருக்கும். மஞ்சரி கள் ரெசீம்களாக இலைக்கக்கத்தில் 2.5 செ.மீ. நீளமுடையவை, மஞ்சரி 10-30 பூக்கள் உடைய கொத்தாகவோ மலராகவோ இருக்கும். மலர்கள் தலைபோன்றவை எனினும் சற்று ரெசீம் போலவும் தோன்றும். மஞ்சரிக் காம்பு 7 செ.மீ. நீளத்திலிருக் கும். இதன் மீதும் மயிர் இருக்கும். கார்போக அரிசி 399 பூவடிச் செதில்கள் 4 மி.மீ. நீளமுடையவை. பூக்கள் 4 மி.மீ, குறுக்களவுடனும் 1.5 செ.மீ. நீளக்காம்புடனும் காணப்படும். புல்லிவட்டக்குழல் மணி வடிவமானது. 3-4 மி.மீ. நீளமுடையது. இதன் கதுப்புகள் ஈட்டி வடிவிலிருக்கும். இணைந்தே இருக்கும் மேலுள்ள 1 16. 18. கதுப்பு நீள முடையது. கீழுள்ள கதுப்பு 3 மி.மீ. நீளமுடையது. இவற்றின் வெளிப் பகுதியில் மயிர் இருப்பதைக் காணலாம். அல்லி இதழ்கள் நீண்டு ஊதா அல்லது கருநீல நிறமாயிருக்கும். கொடி அல்லி இதழ்கள் தலைகீழ் முட்டை வடிவிலோ, நீள்சதுர வடிவிலோ 6×4 மி.மீ. அளவிலிருக்கும். இறகு அல்லிகள் நீள் சதுரமாக 6×2 மி.மீ. அளவில் இருக்கும். படகு அல்லிகள் இணைந்தும் 4. மி. மீ. அளவில் மழுங்கி யும் இருக்கும். இவை சற்றே இணைந்திருக்கும். மகரந்தத்தாள்கள் இருகற்றைகளாக 0.5-1.5 மி.மீ. நீளமுடையவை, மகரந்தப்பைகள் சிறியவை; ஒரே சீரானவை. சூல்பையில் சூல் ஒன்றுதான் இருக்கும். சூல்தண்டு 4 மி.மீ. நீளத்திலிருக்கும். இது வழவழப்பாகவும் உள்பக்கம் வளைந்தும் இருக்கும். மலர் புல்லிவட்டம் கிளை கார்போக அரிசி