400 கார்போரண்டம்
400 கார்போரண்டம் காய்கள் சூல்முடி விதையில்லாமல் இருக்கும். காய்கள் முட்டை அல்லது நீள்சதுரமானவை. சுறுப்பு நிறத்தில் பளப்பளப்பாகத் தோன்றும். ஒவ் வொரு காயிலும் விதையே காணப்படும். இது வெடி யாக்கனி; விதைகள் சிறுநீரக வடிவானவை. இவை 3.5மி.மீ. அளவிலிருக்கும். கனி உறை வழக்கமாக விதையோடு ஒட்டிக் கொண்டிருக்கும். இச்செடியின் பூவும் கனியும் மார்ச் மாதத்தில் தோன்றுகின்றன. மருத்துவப் பண்புகள். கார்போக அரிசி குளிர்ச்சி யைத் தரும்: காய்ச்சலைக் குறைக்கும்; புழுக்களைக் கொல்லும்; சளியைப் போக்கும்; இதய நோய் களைக் குணப்படுத்தும். சீழ்ப்புண்களை ஆற்றுவதற் கும் உதவுகின்றன. காமவிருப்பை மிகுவிக்கும். வடக்கு அமெரிக்காவில் இதன் விதைகளைப் பொடித் துச் சாராயத்தில் கரைத்து வாதவலியைப் போக்கப் பயன்படுத்துவர். படர் தாமரைக்கு விதைகளைப் பொடித்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சேர்த்துக் குழப்பித் தடவலாம். விதையிலுள்ள எண்ணெய்க்குத் தான் இம்மருந்துக் குணம் சேரும். இச்செடியி லிருந்து கிடைக்கும் அரிசிக்கு மலத்தை இளக்கும் குணமுண்டு; குட்டத்தைப்போக்கும்; சுறுசுறுப்பையும் தரும்; தோல் நோய்களுக்கு உதவும்; இரைப்பைக்கு வலிவைத் தரும். வெண்குஷ்டத்திற்கு இதன் விதை களைப் பொடித்து உள்ளுக்குத் தரலாம். இவ்வரிசியி லிருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் சால்மோகரா எண்ணெயைக் கலந்து வெண்குஷ்டத்திற்குப் பூசலாம். இதனால் புதிய புள்ளிகள் உண்டாகா. யானைக் கால் நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது. நமைச்சல், ஆனைச்சொறி, கரப்பான், இரணம், தேள்கடி ஆகியவற்றிற்கும் உதவும். இதற்கு விதை களைப் (அரிசியை) பசும்பாலில் அரைத்து மேலே தேய்த்துக் குளிக்க வேண்டும். கார்போக அரிசி, நீரடிமுத்து, கசகசா, பாதாம்பருப்பு, கொப்பரை, கருஞ்சீரகம், காட்டுச் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துப் பொறுக்குமளவுக்கு வெந்நீரில் குளித்துவரச் சொறி, சிரங்கு, படர் தாமரை, அழுக்குப்படை ஆகியவை மறையும். இதன் காய்கள் கசக்கும். சிறுநீரை வெளியேற்றும். சோரலியா பின்னேட்டா தென்னாப்ரிக்கா வைச் சேர்ந்த குறுஞ்செடி. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இதைக் காணலாம். இது நீலநிறப் பூக்களையும் மிகக் குறுகிய சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். கார்போரண்டம் கோ. அர்ச்சுணன் இதன் வேறுபெயர் சிலிக்கான் கார்பைடு என்பதாகும். அக்கீஸன் என்னும் அமெரிக்க அறிவியலார் 1891 ஆம் ஆண்டு செயற்கை வைரம் தயாரிக்கும் முயற்சி யின்போது தற்செயலாக இச்சேர்மத்தைக் கண்டு பிடித்தார். மிகக் கடினமான இச்சேர்மம் கரடுமுர டான பரப்புகளைத் தனது தேய்ப்பாற்றலால் மெரு கூட்டச் செய்ய மிகவும் பயன்படுகிறது. 54% மணல், 34% கல்கரி, 10% மரத்தூள், 2% சாதாரண உப்பு கொண்ட கலவையை மின் உலையில் ருக்கும்போது கார்போரண்டம் கிடைக்கிறது. மின் உவையில் கார்பன் தண்டுகளின் மூலம் மின்சாரம். செலுத்தப்பட்டு, 36 மணி நேரம் வினை நடைபெற வேண்டும். மின் உலையில் ஏறத்தாழ 3275K வெப்ப நிலை உருவாகிறது. இவ்வுயர் இவ்வுயர் வெப்பநிலையில் கீழ்க்காணும் வினைகள் நிகழ்கின்றன. றது. SiOs + 2C Si + 2CO Si + C SiC இவ்வினையில் உப்பு ஓர் இளக்கியாகச் செயல்படு கார்போரண்டம் மரத்தூள் இறுகாமல் இருக்கவும், கார்பன் மோனோ ஆக்சைடு எளிதில் வெளியேறவும் துணைபுரிகிறது. தூய சிலிக்கான் கார்பைடு நிறமற்றது. ஆனால் வணிகத்தில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் கார்பைடு மஞ்சள் அல்லது பச்சை நிறமாக உள்ளது. இது சக பிணைப்பு கார்பைடு வகையைச் சேர்ந்தது. சக பிணைப்பில் இது முப்பரிமாண நான்முகி அமைப் பைக் கொண்டுள்ளமையால் மிகவும் கடினத் தன்மை யுடன் உள்ளது. கார்போரண்டம் வைரத்தையடுத்த மிகுகடினத் தன்மையைக் இதன் அடர்த்தி எண் 3.2. இது மிகுந்த நிலைப்புத் தன்மை வாய்ந்தது.உயர்ந்த வெப்பநிலையில் ஆக்சிஜனாலும், அமிலங்களாலும், ஆக்சிஜனேற்றங்களாலும் தாக்க மடைவதில்லை. சோடியம் ஹைட்ராக்சைடுடன் காற்றில் உருக்கும்போது கார்போனேட்டாகவும், சிலிக்கேட்டாகவும் மெதுவாக மாறுதல் அடைகிறது. கொண்டது. பயன்கள். கண்ணாடியை அறுக்கவும், பொடி செய்யவும் இது பயன்படுகிறது. உலோகங்களை உருக்குவதற்குப் பயன்படும் கலன்களைத் தயாரிக்க வும் அரைக்கும் சக்கரங்களைத் தயாரிக்கவும் பயன் படுகிறது. மேலும் இது அமில அரிமானங்களைத் தடுக்கும் பூச்சுகளாகவும், மிகு வெப்ப மின் உலைச் சுவர்களின் உட்பக்கப் பூச்சுகளாகவும் கடினமான பரப்புகளைக் கொண்ட பொருள்களைத் தேய்த்து மென்மையாக்கவும் பயன்படுகிறது. சாணைச் சக்கரங் கள் கார்போரண்டத்தால் ஆனவை, கார்போரண்டம் ஒரு சாதாரண மின்கடத்தியாகும். இது மின் உலை செய்யப் பயன்படுகிறது. பா.குற்றாலிங்கம் நூலோதி.J.R Fartington, A Text Book of A of Inorganic chemistry, Macmillan & Co Ltd., London, 1957.