404 கார்போனேட்டுகள்
404 கார்போனேட்டுகள் B B B B B B B படம் 3. B கூறின் மேல்பகுதியிலுள்ள மூன்று போரான் அணுக் களும், இரண்டு கார்பன் அணுக்களும் ஒவ்வோர் ஆர்பிட்டாலைச் செலுத்துகின்றன. இந்த ஆர்பிட் டால்களின் மொத்த எலெக்ட்ரான் ஆறாகும். கரிம-உலோக அணைவு எண்ணிக்கை சேர்மங்கள் (metallocenes) வளையப் பெண்டாடையீனைடு அயனி யின் I அமைப்பிலுள்ள P ஆர்பிட்டால்களை ஒத்திருப்பவையாதலின், B,C,H,12- அயனியும் வளையப் பெண்டாடையீனைடு அயனியும் சம எலெக்ட்ரான் எண்ணிக்கை கொண்டனவாக இருத் தல் தேவை. இதை நிறுவும் பொருட்டு ஹாதார்ன் என்பார் B,C,H,,- அயனியை இரும்பு (II) குளோரைடுடன் வினைப்படுத்தி ஃபெர்ரோசினை ஒத்த சேர்மத்தைத் தயாரித்தார். 1 2C,B,H,]*- + FeCl, → [(C, B,H,,), Fe) 1 - + 2C17 H1 இதேபோன்று, C,B,H,,- + C,H,+FeC1, 11 [C,B,H]|Fe C,H,] + 2C1 C,B,H,- + Br Mn (CO), → C,B,H,, Mn (CO); + Br +2CO ஃபெர்ரோசினை ஒத்த இச் சேர்மங்கள் ஃபெர்ரோசினைப் போன்றே ஆக்சிஜனேற்றமும் மற்ற வினைகளும் நிகழ வாய்ப்பு உடையவை. கார்போரேன்களின் வேதிப்பண்பு பரந்த அடிப் படையில் அமைவதற்குக் காரணமாக விளங்குவது: பல்முதி அமைப்பில் B-H அல்லது C-H தொகுதி களுள் ஏதோவொன்றைத் தனிம அட்டவணையில் இடம்பெறும் தனிமங்களில் பெரும்பாலானவற்றால் பதிலீடு செய்யலாம். குறிப்பாக, இடைநிலைத்தனிமங் களான இரும்பு, கோபால்ட், நிக்கல், தாமிரம், குரோமியம், பல்லேடியம், பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோசுங்களைக் கொண்டு இரு பன்முகி அமைப்புகளை இணைக்கலாம். இவற்றின் பொது வாய்பாடு: (C,B,H,,), M(n-4) இங்கு n என்பது உலோகத்தின் (M) ஆக்சிஜனேற்ற எண். இருபன் முகிகளுக்குப் பொதுவாக (பாலமாக) அமைந்த உலோக அணுவைக் கொண்ட மூலக்கூறுகளைத் தவிர, ஒரு பன்முகியில் மட்டும் உலோக அணு இடம் பெறும் அமைப்புகளும் உண்டு. உலோக அணு வின் துணைநிலை இணைதிறன்களை நிரப்பு வதற்கு மற்றவகை ஈனிகள் பயனாகின்றன. C, H, MC, B H₁₁ (M = Cr, Fe, Co, Ni); C, B, H,, Rh(CO),C,B,H,,M {Co),*- (M = Cr, Mo, W) ஆகியன இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும். B 513 18 11 மட்டு (C,H,},P), HRh C,BgH எனும் மூலக்கூறு ஒரு படித்தான வினையூக்கியாகப் (homogeneous catalyst) பயன்படுத்தப்பட்ட முதல் கார்போரேன் வகை அணைவாகும். இடைநிலை உலோகங்கள் ன்றி, Al, Sn, Pb, Be போன்ற முதனிலை வகைத் தனிமங்களும் (typical elements) சில உலோக கார் போரேன் (metallocarborate) அணைவுகளில் பெறுகின்றன. வினையுறு டம் வளிமங்களின் சேர்மங்களில் எட் டெண் கூட்டத்தை மீறிய எண்ணிக்கையில் எலெக்ட் ரான்கள் உள்ளன. போரேன்களிலும், கார்போ ரேன்களிலும் எட்டெண் கூட்டத்தை விடக் குறைவான எண்ணிக்கையில் எலெக்ட்ரான்கள் உள்ளன. இரு வகைச் சேர்மங்களுமே வேதிப் பிணைப்புத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளன. மே.ரா.பாலசுப்ரமணியன் நூலோதி. James E. Huhcey, Inorganic Chemistry, Third Edition, Harper and Row, Philadelphia, 1983. கார்போனட்டுகள் கார்பன் - டை ஆக்சைடு நீரில் கரையும்போது கார் போனிக் அமிலம் உண்டாகிறது. கார்போனிக் அமிலம் காரங்களுடன் வினைபுரியும்போது, கார் போனேட் உப்புகள் உண்டாகின்றன. கார்போனேட் உப்புகளில் CO,- என்னும் எதிர் மின்னேற்றம் கொண்ட தொகுதி (anion) உள்ளது. சலவைச் எனப்படும் கார்போனேட், சோடியம் சோடா