பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 கார்போஹைட்ரேட்‌ ஆக்கச்சிதை மாற்றம்‌

ஆக கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் மாற்றப்படும் முறையாகும். முதல்நிலை யில் ஹெக்சோகினேஸ் என்னும் நொதியால் குளூக் கோஸ் குளூக்கோஸ்-6 பாஸ்ஃபேட்டாக மாற்றப்படு கிறது. இவ்வேதிவினைக்கு வேண்டிய ஆற்றலை ATP (அடினோசின்டிரை ஃபாஸ்பேட்) அளிக்கிறது. இரண்டாம் நிலையில் ஃபாஸ்ஃபோ குளூகோமியூட் டேஸ் என்னும் நொதியால் குளூக்கோஸ்-6 பாஸ்ஃ பேட், குளூக்கோஸ்-1 பாஸ்ஃபேட்டாக மாற்றப்படு கிறது. இறுதியாக மூன்றாம் நிலையில் இது பாஸ்ஃ போரிலேஸ் என்னும் நொதியால் கிளைகோஜென் னாக மாற்றப்படுகிறது. குளூக்கோஸ் ஹெச்சோகினேஸ் குளூக்கோஸ்-6-பாஸ்ஃபேட் பாஸ்ஃபோசளூகோமியூட்டேஸ் குளூக்கோஸ்-1-பாஸ்ஃபேட் பாஸ்ஃபோரிலேஸ் கிளைகோஜென் ஃபிரக்டோஸ், கேலக்டோஸ் போன்ற ஏனைய ஒற்றைச் சாக்ரைடுகளும் கிளைகோஜெனாக மாற்றப்படுகின்றன. இவற்றைத் தவிர லாக்ட்டிக் அமிலம். கிளிசரால் மற்றும் பல அமினோ அமிலங்களும் கிளைகோஜென் ஆக்கத்திற்குப் பயன் படுகின்றன. கிளைகோஜென் சிதைவு. இது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது கல்லீரலில் கிளைகோஜென் சிதைவுற்று, குளுக்கோஸாக மாறும் வினையாகும். இதற்குப் பல நொதிகள் பயன்படு கின்றன. முதல் நிலையில் கிளைகோஜென், பாஸ் ஃபோரிலேஸ் என்னும் நொதியால் குளுக்கோஸ்-1 பாஸ்ஃபேட்டாக மாற்றப்படுகிறது. இரண்டாம் நிலையில் இது பாஸ்ஃபோ குளுகோமியூட்டேஸ் என்னும் நொதியால் குளுக்கோஸ்-6-பாஸ்ஃபேட்டாக மாற்றப்படுகிறது. இறுதியாக மூன்றாம் நிலையில் இது கல்லீரல் பாஸ்ஃபட்டேஸ் நொதியால் குளுக் கோஸாக மாற்றப்படுகிறது. கிளைகோஜென் பாஸ்ஃபோரிலேஸ் குளுக்கோஸ்-1-பாஸ்ஃபேட் பாஸ்ஃபோகுளுகோ மியூட்டேஸ் குளுக்கோஸ் 6 - பாஸ்ஃபேட் சுல்லீரல் பாஸ்ஃபட்டேஸ் குளுக்கோஸ் + களிம பாஸ்ஃபேட் குளுக்கோஸ் கிளைகோஜெனாகவும் கிளைகோஜென் குளுக்கோஸாகவும் மாற்றப்படும் வேதிவினைகளை கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் நுண்திட்டுச் செல்களால் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் கட்டுப்படுத்தி இரத்த குளுக்கோஸ் அளவைச் சீரான மாறிலி நிலையில் வைத்துக் கொள்ளுகிறது. இரத்த குளுக்கோஸ் அளவு குறைந் தால், கல்லீரல் செல்கள் கிளைகோஜெனை குளுக் கோஸாக மாற்றும் வினையை ஊக்குவிக்கும். இதேபோன்று இரத்த குளுக்கோஸ் அளவு அதிக மானால், தேவைக்கு மேற்பட்ட குளுக்கோஸை கிளைகோஜெனாக மாற்றவும் இன்சுலின் உதவுகிறது. சர்க்கரைச்சிதைவு (glycolysis). இது குளூக்கோஸ் அல்லது கிளைகோஜெனிலிருந்து லாக்ட்டிக் அமிலம் உண்டாகும் முறையாகும். இது கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதைமாற்றத்தின் ஆக்சிஜன் பங்கு கொள் ளாத (anaerobic) இடைநிலையாகும். இவ்வினையின் போது உண்டாகும் வேதி ஆற்றலின் ஒரு பகுதி மற்ற வேதி வினைகளுக்குப் பயன்படுகிறது. பின்னர் லாக்ட்டிக் அமிலம் சிதைந்து கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகிய துணைப்பொருள்கள் உண்டாகின் ன்றன. வை உண்டாகும்போதும் ஆற்றல் வெளிப்படு கிறது. இவ்வேதி வினை மாற்றம் எம்ப்டன் மேயர் ஹாஃப் முறை ( Embden-Meyerhof pathway } என்று குறிக்கப்படுகிறது. இவ்வேதி வினை முறையில்-PO, தொகுதியைப் புகுத்துவதால், பெரிய மூலக்கூறுகளிலிருந்து 6- கார்பன் குளுக்கோஸ் அலகுகள் பிரிக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட நொதிகளால் ஃபாஸ்ஃபேட்டுகளி லிருந்து - PO, தொகுதிகுளுக்கோஸ் அலகுக்கு மாற்றப் படுகின்றன. இதனால் ஒரு குளுக்கோஸ்-1-பாஸ் ஃபேட் மூலக்கூறு உண்டாகிறது. கார்பன் தொடரில் PO, தொகுதி 1 ஆம் கார்பனுடன் சேர்ந்திருப்பதால் 1 - பாஸ்ஃபேட் எனப்படும். மீதமுள்ள கிளைகோ ஜெனில் தொடர் பாஸ்ஃபாரிலேற்றங்களால் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. குளூக்கோஸ்-1 பாஸ்ஃபேட்டிலுள்ள -PO, தொகுதி மற்ற முனையி லுள்ள அதாவது 6ஆம் கார்பனுடன் இணைந்து குளுக்கோஸ் - 6 - பாஸ்ஃபேட்டாகிறது. மற்ற வினை கள் நான்கு நிலைகளில் நடைபெறுகின்றன. நிலை 1. இந்தத் தொடக்க நிலையில் A1P ஆல் 2-PO, தொகுதிகள் குளுக்கோஸில் இணைந்து ஃபிரக்டோஸ்-1, 6 -டைபாஸ்ஃபேட்டாக மாறுகிறது. முதலில் குளுகோகினேஸ் என்ற நொதியால் குளுக் கோஸ், பாஸ்ஃபாரிலேற்றம் பெற்று குளுக்கோஸ்-6- பாஸ்ஃபேட்டாகிறது. இரண்டாவதாக இது குளுக்கோஸ் பாஸ்ஃ பட்டேஸ் இ சோமெரேஸ் என்னும் நொதியால் மீண்டும் கூட்டுப் பொருள்கள் சீராக்கப் (internal rearrangement) Guin ஃபிரக்டோஸ் - 6 - பாஸ்ஃ பேட்டாக மாறுகிறது.