410 கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம்
410 கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் நிலை 4. ஆக்சிஜனேற்றம் பெற்ற 3 - பாஸ்ஃ போகிளைசிரிக் அமிலம் பல மாறுதல்களடைந்து இறுதியாகப் பைருவிக் அமிலமாகிறது. இம்மாற்றங் களில் ஒரு வினையின்போது மூலக்கூறிலிருந்து நீர் பிரிக்கப்படுகிறது. ஆற்றல் வெளிப் படுகிறது. இது ஒரு ATP மூலக்கூறை உண்டாக்கப் பயன்படுகிறது. அப்போது தசையில் லாக்ட்டிக் டிஹைட்ரஜனேஸ் நொதி யால் 3-கார்பன் பைருவிக் அமிலம் ஹைட்ரஜனேற்றம் பெற்று லாக்டிக் அமிலமாகிறது. ஒவ்வொரு குளுக் கோஸ் - 6 - பாஸ்ஃபேட் மூலக்கூறிலிருந்தும் 2 லாக்ட்டிக் அமில லாக்ட்டிக் அமிலம் ஆக்சிஜனேற்றமடையும்போது உண்டாகும் 4 ATP மூலக்கூறுகளில் ஒன்று ஹெக்சோஸ்டைபாஸ் ஃபேட் உண்டாக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இவ்வேதிவினையில் 3 ATP மூலக்கூறுகள் மிகையாகக் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து நிறைய ஆற்றல் வெளிப்ப படுகிறது. மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஈஸ்ட்டுகளால் சர்க்கரை நொதிக்கும் வினைகளி லும் 6-கார்பன் சர்க்கரைப் பொருள்கள் பாஸ்ஃபாரி லேற்றம் பெறுகின்றன. இவை ஆக்சிஜனேற்றம், ஹைட்ரஜனேற்றம் ஆகியவை அடைந்து நீரும் வெளி யேற்றப்படுகிறது. இதனால் ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறிலிருந்தும் 2 பைருவிக் அமில மூலக்கூறுகள் உண்டாகின்றன. இந்தக் குறிப்பிட்ட வினைமாற்ற நிலையில்தான் சர்க்கரைச் சிதைவிலிருந்து (glycolysis) ஈஸ்ட் நொதித்தல் வேறுபடுகிறது. ஈஸ்ட்டில் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும் பைருவிக் கார்பாக் சிலேஸ் என்னும் நொதி உள்ளது. இது பைருவிக் அமிலத்துடன் வினைபுரிந்து கார்பன் டைஆக்சைடை வெளியேற்றி அசெட்டால்டிஹைடை உண்டாக்கு கிறது. பைருவிக் அமிலம் உண்டாகும் வரையில் சர்க்கரைச்சிதைவும் நொதித்தல் வினையும் ஒன்று போலவே உள்ளன. பின்னர்சர்க்கரைச் சிதைவு லாக்ட் டிக் அமிலத்திலும், நொதித்தல், எத்தேனால், கார்பன் டைஆக்சைடிலும் முடியும். கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதைமாற்றத்தில் குளுக்கோஸ் குளுக்கோஸ்-6- பாஸ்பேட் ஃபிரக்டோஸ் - 6 - பால் ஃபேட் ஃபிரக்டோஸ்16- டைபாஸ்ஃபேட் -ATP DPN ADP DPNH- -ATP →ADP பைருவிக் அமிலம் ஒரு முக்கியமான கூட்டுப்பொருள். சிக்கலான பல வேதி வினைகளால் இது அசெட்டைல் COA உண்டாக்குகிறது. 0 CH,-C-COOH + COA பைருவிக் அமிலம் மற்ற காரணிகள் 0 CH–C–S-CoA + CO, அசெட்டைல் CoA கார்போஹைட்ரேட்டுகளுக்கும் கொழுப்புப் பொருள்களுக்கும் ஒரு தொடர்பாக அசெட்டைல் CoA உள்ளது. உயிரிகளில் நடைபெறும் பெரும் பாலான வேதிவினைகளில் இது பங்கேற்கிறது. லாக்ட்டிக் அமிலத்தின் முடிவு ஆக்சிஜன் பங்கு கொள்ளும் வேதிவினையில் கிளைகோஜென், கார்பன் டைஆக்சைடாகவும் நீராகவும் மாற்றப்படும்போது உண்டாகும் ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறுக்கும் 688,000 கலோரி வெப்பம் வெளிப்படுகிறது. சர்க்கரைச்சிதைவில் குளுக்கோஸ் லாக்ட்டிக் அமில மாக மாறும்போது 58000 கலோரி வெப்பம் மட்டுமே வெளிப்படுகிறது. இதனால் லாக்ட்டிக் அமிலத்தில் பெருமளவு ஆற்றல் தேங்கியுள்ளது எனத் தெரிகிறது. மூச்சு உள்ளிழுக்கும்போது கிடைக்கும் ஆக்சிஜனால் லாக்ட்டிக் அமிலம் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. ஆக்சிஜன், இரத்தத்தில் ஆக்சி ஹீமோகுளோபினாகத் தேவைப்படும் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. சர்க்கரைச் சிதைவின்போது உண்டாகும் லாக்ட்டிக் அமிலத்தில் 20-30% கார்பன் டை ஆக்சைடு நீராக மாற்றப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆற்றல் ADP மூலக்கூறுகளை ஆற்றல்மிகு ATP மூலக்கூறுகளாக மாற்றப்பயன்படுகின்றன. ஆக்சிஜனேற்றம் அடையாத லாக்ட்டிக் அமிலம் மீண்டும் கிளைகோஜெனாக மாற்றப்படுகிறது. தசை லாக்டிக் அமிலம் ATP ADP- பைருவிக் அமிலம் பால் ஃபோஈனால் பைருவிக் அமிலம் டிரையோஸ்பாஸ் ஃபேட் 3-பாஸ்ஃபோகிளைசரிக் அமிலம் H3 PO4 1 ATP- ADP--- 1. 3-டைபாஸ்ஃபோகிளைசரிக் அமிலம் லாக்டிக் அமில நொதித்தலில் கிளைக்காலாற் பகுப்பு