24 களைகள்
24 களைகள் களைகளைத் தாக்கி அழிக்கின்றன. தாவர நோய்க் சூரிய உயிரிகளைக் கொண்டு (plant pathogens) களைச் செடிகளில் நோயை உண்டாக்கியும், பூசணங்கள்.பாக்ட்டீரியா போன்றவற்றைப் பயன் படுத்தியும் களைகளை நன்முறையில் கட்டுப்படுத்த லாம். இது போன்று தாவர உணவுண்ணும் மீன் வகைகளை வளர்த்து நீர்வாழ் களைகளை அழிக்க லாம். தகுந்த உழவியல் முறைகளைப் பயன்படுத்து தல், களை - தாவரப் பயிர்களில் போட்டித் தன்மையை உண்டாக்கல், ஊடுபயிர் செய்தல், கலப்புப் பயிர் செய்தல், பயிர்ச் சுழற்சியைக் கடைப்பிடித்தல் போன்ற வேளாண் நுணுக்க முறைகளால் களைகளை வளராமல் தடுத்துக் கட்டுப்படுத்தலாம். நம்மை தரும் வகையில் பூச்சி மற்றும் நோய்க் காரணிகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த உயிர் வழிக் கட்டுப் பாட்டு முறையின் செயல் திறனை அறிவதற்கு ஆய்வு கள் செய்யப்படுகின்றன. 250 வேதி வழிக் களைக்கட்டுப்பாடு. வேதிக் களைக் கொல்லிகளைத் தேர் திறன் கொண்டவை, தேர் திறன் அற்றவை என்று இருவகைகளாகப் பிரிக்க லாம். 2,4-D என்னும் களைக் கொல்லி. இருவிதை யிலைத் தாவரக் (dicotyledon) களைகளைத் தீவிர கட்டுப்படுத்துகிறது. மாகக் ஊடுருவிப் பாயும் தன்மையுடையவை (systemic) களைக்கொல்லி நச்சு மருந்தைக் களையின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று களையை அழிக்க உதவுகின்றன. வேளாண் நிலங்களுக்கும் தரிசு நிலங்களுக்கும் விளை யாட்டு மைதானங்களுக்கும் ஏற்ற ஏறக்குறைய களைக்கொல்லிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள் ளன களைகளைக் களைக்கொல்லிகள் மூலம் கட்டுப் படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. உழவியல் முறைகளுடன் வேதிக் களைக் கொல்லிகளையும் பயன்படுத்தி,களைகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத் தலாம். வேலை ஆள் பற்றாக்குறையுள்ள இடங் களில், களைக்கொல்லியைப் பயன்படுத்தி நேரத்தை யும், பொருள் அழிவையும் தவிர்த்துச் சாகுபடிச் செலவைக் குறைக்கலாம். வளர்ந்த நிலையிலுள்ள பயிர்களில் உள்ள களைகளை எவ்வித இடர்ப்பாடும் இன்றி எளிதில் கட்டுப்படுத்தலாம். களைக் கொல்லி களால் பல நீண்டகாலக் களைகளையும், நச்சுத் தன்மை கொண்ட களைகளையும் எளிதில் கட்டுப் படுத்தலாம். மூலமாக களை விதைகள். பெரும்பாலான களைகள் விதை இனப்பெருக்கமடைகின்றன. விதைகள் பல்வேறு விதங்களில் தாய்ச் செடியிலிருந்து வேறு இடங்களுக்குப் பரவி முளைப்பதால் வாழ்க்கைச் சுற்றுத் தொடர்கிறது. ஒருபருவக் களைச்செடிகள் பெரும்பாலும் விதை மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. விதையில்லா இனப்பெருக்க முறை களான, மொட்டுகள் கிழங்குகள், கணுவிடைப் பகுதிகள் மூலமாக. நீண்ட காலக் களைகள் தொடர்ந்து வாழ்கின்றன. களை விதைகளின் எண்ணிக்கை, முளைப் புத்திறன் (germinability) அளவில் சிறிய விதைகள் போன்றவற்றைப் பொறுத்துக் களைகள் ஓரிடத்தில் தொடர்ந்து வாழும் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. ஒருபருவக் களைகள் (annual weeds) எண்ணற்ற களைகளை உற்பத்தி செய்கின்றன. அவ்விதைகள் ஏற்ற பருவத்தில் முளைத்துச் செடிகளாகின்றன. சாகுபடி செய்யப்படும் பயிர்களைவிடக் களைச் செடிகளில் விதைகள் மிகுதியாக உற்பத்தியாகின்றன. எடுத்துக்காட்டாக, கீழ்க்காணும் அட்டவணையைக் குறிப்பிடலாம். சில தாவரம் குதிரைவாலிப்புல் சுடுமல்லி பிரம்மந் தண்டு சாரனை விதைகளின் எண்ணிக்கை 42,700 30,000-75,000 20,000-30,000 10,000 புகையிலைக் காளான் 1,00.000 பார்த்தீனியம் 10,000 நாயுருவி 500-1500 றன. விதை களை விதைகள் ஒரே பருவக் காலத்திற்குள் முதிர்ச்சியடைகின்றன. வேறு சில களைகளின் விதைகள் பல்வேறு பருவங்களில் முதிர்வடைகின்ற பல பருவக் களைகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்கின்றன. மெலண்டிரியம் Melandrium) என்னும் களை ஒரு பருவ, இரு பருவ பல பருவக் களைகளாக விதைப் பெருக்கமடைகிறது. சிர்சியம் ஆர்வென்சி (Cirsium arvense) என்னும் களையில் ஆண், பெண் பூக்கள் வெவ்வேறு செடி களில் காணப்படுகின்றன. சினாபிஸ் ஆர்வென்சிஸ் போன்ற களைகளில் விதை உற்பத்திக்கு அயல் மகரந்தச் சேர்க்கை இன்றியமையாததாகிறது. ஏபென்ஸ் ஆர்வென்சிஸ் (Aphanes arvensis) என்னும் களையில் இனச் சேர்க்கையின்றிக் கன்னியினப் பெருக்கம் (Parthenogenesis) மூலம் விதைகள் உற்பத்தி யாகின்றன. கம்பாஸிடே (Compositae) குடும்பத்தைச் சார்ந்த களைகளின் விதைகள் முழு வளர்ச்சியடையு முன் மிகுமுளைப்புத் திறன் கொண்டுள்ளன. செனே சியோ பல்கேரிஸ் ( Senecio bulgaris) என்னும் களைச் செடியில் பூக்களாக இருக்கும்போதே அவற்றிலுள்ள விதைகள் முளைக்கும் தன்மை கொண்டுள்ளன. களைவிதை பரவுதல். களைச் செடிகள் எண்ணற்ற விதைகளை உண்டாக்குகின்றன. விதைகள் தாய்ச் செடியிலிருந்து மிகுதொலைவு தள்ளப்பட்டுத் தனியே நிலத்தில் விழுந்து முளைக்கின்றன. லெகுமி