பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 கார்னேஷன்‌ மலர்ச் செடி

422 கார்னேஷன் மலர்ச்செடி இதை கார்னுசுருளி (Cornu spiral) எனப்படும். ஆயிலர் என்பார் கண்டுபிடித்தமையால் இவ்வளை வரை ஆயிலர் சுருளி (Euler spiral) என்றும் குறிப் பிடப்படும். வில்லின் நீள விகிதத்திற்கு ஏற்ப வளை வரை பெரிதாகிக் கொண்டே போகும். இதைக் கலாட்டாயிடு (Clothoid) என்றும் கூறுவர். கார்னேஷன் மலர்ச்செடி பங்கஜம் கணேசன் ஐரோப்பா, இம்மலர்ச்செடி கேரியோஃபில்லேசி இருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவர வியல் பெயர் டையான்தஸ் கேரியாஃபில்லஸ் (Dianthus caryophyllus) என்பதாகும். இக்குடும்பத் தாவரங்கள் பெரும்பாலும் வட துருவ, மித வெப்பப் பகுதிகளில் காணப்படுகின்றன. சில பேரினங்கள் தென் துருவப் பகுதிகளிலும் வெப்பமான மலைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆசியா, ஆஃப்ரிக்கா கண்டங்களிலும், மத்திய தரைக் கடற்கரைப் பகுதிகளிலும் உலர் கோடைப் பருவச் சூழலில் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில், இக்குடும்பத் தாவரங்கள் மலைப்பகுதி களிலும், மழைக்காலங்களில் சமவெளிப் பகுதிகளிலும் வளர்கின்றன. டையான்தஸ் பேரினம், மேல் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. இப் பேரினத்தின் தாவரங்கள் அழகுக்காசு மலர்த் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களின் மலரில் அல்லி இதழ் அமைவுச் சிறப் புடையதாகும். ஐந்து அல்லி இதழ்கள், அடிப்பகுதி யில் விரல் போன்று நீண்டும், நுனிப்பகுதி, அடிப் பகுதிக்கு நேர்கோணத்தில் பரந்தும் விரிந்தும் அமைந் துள்ளன. இந்த அமைப்பிற்குக் கோரியாஃபில்லேஷி யஸ் அல்லி இதழ் அமைப்பு என்று பெயர். டையான்தஸ் மலர்ச்செடி: டையான்தஸ் என்பது 350 சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகும். த்தாவரச் சிற்றினங்கள் எங்கும் பரந்து காணப்படுகின்றன. இத்தாவரங்கள் பெரும்பாலும் அழகுக்காசுப் பயிரிடப்படுகின்றன. எடுத்துக் காட்டாக டையான்தஸ் கேரியோஃபில்லஸ் என்னும் கார்னேஷன் மலர்ச்செடி, சைனன்சிஸ் என்னும் சீனபிங்க் டையான்தஸ் பார்பேட்டஸ் என்னும் ஸ்வீட் வில்லி யம் மலர்ச்செடி, டையான் தஸ் புளூமேரியஸ் என்னும் கிராஸ் பிங்க் மலர்ச்செடி, டையான்தஸ் ஸைனென் சிஸ் என்னும் இந்தியன் பிங்க் மலர்ச்செடி ஆகிய வற்றைக் கூறலாம். டையான்தஸ் கேரியோஃபில்லஸ் சிற்றினத்தின் பல வகைத் தாவர மலர்கள் பல் வேறான அளவுகளில் அமைந்துள்ளமையால் மலர் களின் அழகுக்காகவும். மலர்களின் எண்ணற்ற வண்ணங்களுக்காகவும் தோட்டங்களில் வளர்க்கப் படுகின்றன. எனவே டையான்தஸ் கேரியோஃபில்லஸ் என்னும் கார்னேஷன் மலர்ச் செடி. முக்கியமான அழகுத் தாவரமாகக் கருதப்படுகிறது. டையான்தஸ் கேரியோஃபில்லஸ் தாவரத்தில் ஆணி வேர்த் தொகுதி மிகுந்து கிளைத்துள்ளது. இச் செடி பசுமை நிறம் கொண்டதாகவும், சொரசொரப் பாகவும் இருக்கும். இலை தனியிலையாகக் குறுக் கெதிர் இலையடுக்கத்தில் அமைந்திருக்கும். காம்பற்ற இலையடிச் செதில் கொண்ட இலையின் அடிப்பகுதி பிளவுபட்டு இணைந்திருக்கும். இலைப்பரப்பு நீண்டு, ஈட்டி போன்றும், முழுமையாகவும் காணப்படும். நுனி கூராக உள்ளது. மஞ்சரி-நுனிவளரா ணைக் கிளைத்தல் (cymose) வகையைச் சேர்ந்தது. காம்பு டைய, முழுமையான, ஒழுங்கான ஆரச் சமச்சீருடைய, எண்ணற்ற ஐந்தங்க மலரடிச் செதில்கள்: புல்லிதழ் வட்டத்திற்குக் கீழே புறப்புல்லி வட்டம் போன்று அமைந்துள்ளன. புல்லிதழ்கள் ஐந்து குழல் போன் றும், பற்கள் போன்று நுனி பிளவுபட்டும் காணப் படும். இவை அல்லி இதழ்களைவிட நீளமானவை. அல்லி இதழ்களின் நுனிப்பகுதி பற்கள் போன்று பிளவுபட்டுள்ளது. அல்லி இதழ், கேரியோஃபில்லே ஷியஸ் அமைப்பும் பல வண்ண நிறமும் கொண்டது. . பத்து மகரந்தத் தாள்கள் வரிசைக்கு ஐந்தாக இரு வரிசைகளில் அமைந்துள்ளன. வெளிவரிசை மகரந்தத் தாள்களும், அல்லி இதழ்களுக்கு நேராக அமைந்துள்ளன (obdiplostaminous). மகரந்தத் தாள் கள் மென்மையானவை. ஈரறை மகரந்தப் பை