கார்னேோடைட் 423
செடி கார்னோடைட் 423 மலர் நீளவாக்கில் பிளக்கும். சூலகம் சூலிலை இணைந்த ஒரு சூலறை கொண்ட சூலகப்பையாகும். சூல்கள், சூலறையின் மையத்தில் தன்னிச்சை யாக அமைந்துள்ளன. இரண்டு சூலகத் தண்டுகள், சூலகத்தின் அடியிலிருந்தே தனித்துக் காணப்படு கின்றன. சூலகமுடி எளிய அமைப்புடையது. கனி. வெடிகனி வகையைச் சேர்ந்தது. விதை ஊட்டத்திசு கொண்டது. கரு, நேரான அமைப்புடையது. டையான்தஸ் பேரினத்தைச் சேர்ந்த சில சிற் றினங்கள், மருத்துவப் பயன்களைப் பெற்றுள்ளன. டையான்தஸ் அனடோலிகஸ் தாவரம் பால்வினை நோய்க்கும். சிறுநீர் மிகுதியாகச் சுரப்பதற்கும். வெளியேறுவதற்கும் பயன்படுகிறது. டையான்தஸ் சைனன்சிஸ் தாவரம், குடற்புழு நீக்கத்திற்குப் பயன் படுகிறது. டையான்தஸ் கேரியோஃபில்லஸ் தாவர மலர்கள், இதயத்திற்கு வலிவூட்டவும், வியர்வை சுரக்கவும், நரம்புகளுக்கு வலிவூட்டவும், நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. ந. வெங்கடேசன் நூலோதி. H.M. Lawrence George, Taxonomy y Vascular plants, Oxford 1BH publishing Co., New Delhi, 1978. கார்னோடைட் பொட்டாசியம் மற்றும் யுரேனியம் ஆகியவற்றின் நீர்ம வனேடிய கனிமமே கார்னோடைட் (carnotite) ஆகும். இதன் உட்கூறு K, (UO,), (VO,), n H,O ஆகும். வெப்பநிலையைப் பொறுத்து ஒன்றிலிருந்து மூன்று அணுக்கள் வரை இதன் நீர்க்கொள்ளளவு மாறுபடுகிறது. இது தூளாக அல்லது நுண்படி கப் பொதிவு களாகக் (micro crystalline aggregate) காணப்படு கிறது. இதன் நிறம் ஒளிரும் மஞ்சளிலிருந்து எலு மிச்சை மஞ்சள், பச்சை கலந்த மஞ்சள் வரை காணப் படுகிறது.