பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கார உலோகங்கள்‌

426 கார உலோகங்கள் உட்புகுந்து ஓடும் நீரின் அரிக்கும் திறனால் குகைகள் உண்டாகின்றன. பாறைகளில் உள்ள படுசைப் பிரிவுகள். இணைப்புகள் மற்றும் வலிமை குறைந்த தளங்களில் நீர் தாக்கிக் குகைகளை உருவாக்குகின் றது. நிலத்தடிநீர் ஓடுகின்றாற் போல எங்கெங்கு நீரோட்டப் பாதைகள் அமைந்துள்ளனவோ அங் கெல்லாம் குகைகள் அதிகமாகத் தோன்றுகின்றன. பிற இடங்களில் நீர் ஓடாமல் தேங்கி நிற்பதால் அரிக்கும் திறன் குறைந்து குகைகளின் அளவும் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படும். பெரும் பாலான குகைகளில் ஒற்றை அறையே உண்டு. சிற்சில இடங்களில் பல அறைகள் இருப்பதும் உண்டு. பல அறைகள் உள்ள குகைகளில் அவை ஒன்றோடொன்று இணைந்து ஒர் அறையிலுள்ள நீர் வேறோர் அறைக்குச் செல்வதும் உண்டு. இக்காரணத்தால், சிற்சில கண்ணம்புப் பாறைப் பகுதிகளில் நீர்வளம் உள்ள கிணறுகளில் தீடீரென நீர் இல்லாமல் போவதும் உண்டு. குகைகளின் உட்பக்கம், பதற்கு ஓர் அரிய காட்சியாகும். அழகான வடிவமும் புதுமையான தோற்றமும் கார்ஸ்ட் குகைகளின் தனிச் சிறப்பாகும். உலகிலேயே மிகப் பெரிய அரிமானக் குகை சுமார் 250 கிலோ மீட்டர் நீளமுடையது. இக்குகை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கெண்டக்கி மாநிலத்தில் உள்ள 'மாமத்' குகையாகும். . காண் நீரில்லாப் பள்ளத்தாக்குகள் கார்ஸ்ட் இட அமைப்பு நிலப் பகுதியில் ஆற்று நீர் புவிக்குக் கீழே செல்லும்போது மேலே உள்ள பள்ளத்தாக்குகள் நீரில்லாமல் வெற்றிடங்களாகின்றன. இவையே நீரில்லாப் பள்ளத்தாக்குகள் (Blind valleys) எனப் படும். இவை உண்டாவதற்குக் காரணம், நீர் சிறிது சிறிதாகப் பாறைகளை அரித்து, துளைகள் வழியே உட்புகுந்து குகைகள் மற்றும் சிறு வாய்க்கால்கள் வழியே புவிக்குக் கீழே ஓடுவதேயாகும். சில மென்பாறைப் பகுதிகளில் ஆற்று நீரோட்டம். ஆர வடிவில் பல ஆறுகள் ஒரு மையப் பகுதியை நோக்கி அடைந்திருக்கும். அப்பகுதியில் கார்ஸ்ட் அமைப்பால் உருவான நிலத்தடி ஆறுகளைக் காணலாம். கார்ஸ்ட் அமைப்புகளுக்குப் பெருமை சேர்ப்பன குகைகளின் உள்ளே காணப்படும் ஸ்டாலக் சைட், ஸ்டாலக்மைட் சுண்ணாம்புப் படிவுகள். பாறைகள் நீரில் கரைந்து கரைசலாக ஓடி வந்து தேங்கி நிற்கும்போது, அதற்குக் கீழே உள்ள குகை களில் சொட்டுச் சொட்டாக விழத் தொடங்கும். அவ்வாறு விழும் துளிகள் தரைப்பகுதியிலும் கூரைப் பகுதியிலும் வளரத் தொடங்கும். கூரைப் படிவுகள் ஸ்டாலக்சைட் என்றும் தரைப் படிவுகள் ஸ்டாலக் மைட் என்றும் பெயர் பெறும். இராம. இராமநாதன் நூலோதி. Billings, Structural Geology. Third Edition, Prentice Hall of India, New Delhi. கார உலோகங்கள் தனிம வரிசை அட்டவணை IA தொகுதியில் ஹைட்ரஜனைத் தவிர ஏனைய தனிமங்களான லித்தியம் (Li), சோடியம் (Na), பொட்டாசியம் (K). ருபிடியம் (Rb), சீசியம் (Cs), ஃபிரான்சியம் (Fr) ஆகியவை கார உலோகங்கள் (alkali metals எனப்படுகின்றன. சோடியமும் (2.6%) பொட்டா சியமும் (2.4%) புவி மேல் தோட்டில் (earth crust) அதிகமுள்ள தனிமங்களில் ஆறு, ஏழாம் இடங்களைப் பெற்றுள்ளன. பிற கார உலோகங்கள் முறையே 0.03% : 0.007%. 0.0007% என்னும் அளவில் புவி மேல்தோட்டில் உள்ளன. கதிரியக்க ஐசோடோப் பான ஃபிரான்சியம் கிடைப்பது அரிது. இது கி.பி. 1939ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனி மங்கள் யாவும் மிகு வேக வினைபுரியும் தன்மை கொண்டவை. எனவே இவற்றைப் பிரித்தெடுப்பது எளிது. ஹாலைட் (halite, NaCl) சில்வைட் (sylvite KCI), கார்னலைட் (karnalite, KCI. MgC) 6 H,O) போன்றவை கார உலோகங்களின் தாதுப் பொருள் களாகும். . கார உலோகங்கள். இவை உலோகங்களுக்குத் தேவையான இயல்புகளான வெள்ளி போன்ற பளப்பளப்பான தோற்றம், வெப்பத்தையும் மின் சாரத்தையும் நன்கு கடத்தும் திறன். கம்பியாக நீட்டக்கூடிய திறன் போன்றவற்றைக் கொண்டுள் ளன. கார உலோகங்களில் லித்தியம் மிகவும் இலேசான உலோகம். இவை குறைந்த உருகு நிலையைக் கொண்டவை. இவற்றின் உருகுநிலை 28.5°C (சீசியம்) இலிருந்து 179°C (லித்தியம்) வரை உள்ளன. இவ்வுலோகங்களின் உலோகக் கலவைகள் -78°C போன்ற குறைந்த உருகு நிலையைக் கொண்டுள்ளன. இவை மிகு கு வேக வினைபுரியும் தன்மை பெற்றிருப்பதால் பல பொருள்களுட எளிதில் வினைபுரிகின்றன. இவை நீருடன் தீவிரமாக வினை புரிந்து ஹைட்ரஜனை வெளியேற்றித் தொழில் துறையில் பயனுள்ள எரிகாரங்களைக் கொடுக் கின்றன. ஹாலோஜன்கள், கந்தகம், பாஸ்ஃபரஸ் போன்ற அலோகங்களுடனும் வினைபுரிகின்றன. மேலும் எளிதில் விலக்கப்படுகிற லஹட்ரஜனைக் கொண்ட கரிமச் சேர்மங்களுடன் எளிதில் புரிகின்றன. வினை கார உலோகங்களில் சோடியம் உலோகமே மிகவும் பயனுள்ளது. கரிமச் சேர்மங்களை ஒடுக்கு வதற்கும், சோடியம் பெராக்சைடு, சோடியம் சயனைடு, டெட்ராஎத்தில் லெட் போன்றவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. தனித்த உலோகமாக இது அணுக்கரு உலைகளில் (nuclear reactors) வெப்பத்தைக் கடத்தும் பாய்மமாக உதவ