பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள்‌ 25

னேசி (Leguminosae) குடும்பத்தைச் சார்ந்த களை களின் நெற்றுகள் (pods) இரண்டாகப் பிளவுபடுவ தால் விதைகள் விசையுடன் தொலைவில் எறியப் படுகின்றன. சில களைகளின் விதைகள் தாய்ச்செடி களுக்குக் கீழே விழுந்தாலும், வெவ்வேறு உழவியல் முறைகளால் ஏற்றவாறு நீண்ட தொலைவு எடுத்துச் செல்லப்படுகின்றன. கடினமான விதையுறையுடைய களை விதைகள் வளர்வடக்கத்திற்கு உள்ளாகின்றன. இவ்வாறான விதைகள் நிலத்தில் நீண்ட காலம் தங்கி மலுறை நலிந்து, காற்றும் நீரும் உட்புகும் போது முளைத்துச் செடிகளாகின்றன. மே களை விதைகளின் மேலுறையில் (seed coat) நீரில் கரையும் சில நச்சுப் பொருள்கள் உள்ளமையால், விதைகள் வளர்வடக்கத்துடன் முளைக்காமலிருக்கும். மழை நீர் மற்றும் பாசன நீர் அந்த நச்சுப் பொருள் களைக் கரைப்பதால், விதைமுளைத்தல் விரைவாக் கப்படுகிறது. சில களை விதைகள் முளைப்புத் திறன் கொண்டிருப்பினும், வறண்ட நிலை போன்ற சூழ் நிலைக் காரணிகளால் வளர்வடக்கம் கொண்டு முளைத்தல் தடைப்படும். புரோமஸ் ஸ்டெரிலிஸ் (Bromus sterilis) என்னும் களை விதைகள் வறண்ட காலங்களில் செடியிலிருந்து நிலத்தில் வீழ்ந்து, மழை வரும் வரை வளர்வடக்கம் கொண்டு நிலத்தில் ஈரத் தன்மை வந்தபின் முளைக்கின்றன. போதுமான சூரிய ஒளியின்மை சில களைவிதைகளின் வளர்வடக்கத்திற் குக் காரணமாக உள்ளது. வேறு சில களை விதைகள் (எ.கா) வயோலா ஆர்வென்சிஸ் (viola arvensis) சூரியெஒளி படும் காலங்களில் வளர்வடக்கத்துடன், நிலத்தில் புதைந்து ஒளியற்ற காலங்களில் முளைத் துச் செடிகளாகும் தன்மையும் பெற்றுள்ளன. ஒரு பருவக் களைகளின் விதைகள் மிகுதியாகக் காணப்படுவதால், அவற்றைத் தகுந்த உழவியல் முறைகள் (agronomic practices) மூலம், நிலத்தின் மேற்பரப்பிற்குக் கொணர்ந்து, தகுந்த முறையில் களைக்கட்டுப்பாடு செய்ய வேண்டும். சில களை விதைகளின் மேற்பரப்பில் பசைபோன்ற ஒட்டும் நீர்மம் இருப்பதால் அவை எளிதில் விலங்குகளின் மேல் ஒட்டிச்சென்று வேற்றிடங்களில் விழுந்து முளைக்கின்றன. சில களை விதைகளின் மேற் பரப்பில் முள்கள் போன்ற அமைப்புகள் இருப்பதால் அவை கால்நடைகளிலும் மனிதர்களின் ஆடை களிலும் சிக்கி எளிதாக வேற்று இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. எருக்குப் போன்ற களைகளின் மெல்லிய இழைபோன்ற அமைப்பு களால் காற்றின் மூலம் விதைகள் ஓரிடத்திலிருந்து வேற்றிடங்களுக்குப் பரவுகின்றன. வெள்ளம், மழை நீர். மனிதர்கள் மூலமாகவும் களை விதைகள் பரவு கின்றன. களை விதைகளின் வளர்வடக்கம். களை விதைகள் வளர்வடக்கம் கொண்டு நீண்ட காலம் உயிர் . களைகள் 25 வாழ்ந்து தகுந்த சூழ்நிலையில் முளைத்துச் செடிகளா கின்றன. களை விதை முளைத்தலுக்கு ஏற்ற காரணிகள் தகுந்த பருவத்தில் குறிப்பிட்ட அளவு இல்லாவிடில் விதைகள் வளர்வடக்கம் கொள் கின்றன. விதைகள் தாய்ச்செடியில் தோன்றும் போது நிலவும் பல்வேறு சூழ்நிலைக்' காரணிகளைப் பொறுத்து விதைகளின் வளர்வடக்கம் தீர்மானிக்கப் படுகிறது. சில இனக் களைகளில் ஒரே செடியிலுள்ள களை விதைகள் பல்வேறு காலம் வரையில் வளர் வடக்கம் கொண்டுள்ளன. அட்ரிப்ளக்ஸ் (Atriplex) என்னும் களைச் செடியின் விதைகள் வெவ்வேறு வளர்வடக்கக் காலங்களைக் கொண்டுள்ளன. சில களை விதைகள் குறைந்த வெப்ப நிலைக்கு உட் படுத்தப்பட்டால், அவற்றின் வளர்வடக்கத் தன்மை குறைகிறது. பாபவர் (Papaver sps) பேரினக் களை விதைகள். நாள்தோறும் ஏற்படும் வெப்பநிலை மாறுபாட்டால் விதை முளைத்தலுக்கு வளர்வடக்கத் தன்மை கொள்ளும். கொண்ட களை ஸ்டெல்லேரிய மீடியா (Stellaria media) என்னும் களையின் விதைகளில் 95% நிலத்தின் மேற்பரப்பில் மீதமுள்ள விழுந்து முளைத்துச் செடிகளாகும் விதைகள் மண்ணிற்கடியில் ஏறக்குறைய 60 ஆண்டு களுக்கு வளர்வடக்கம் கொண்டு முளைப்புத் திறனுடன் உள்ளன. பெரும்பாலான களைக்கொல்லி கள் (herbicides) வளர்வடக்கம் களுக்கு எவ்விதத் தாக்கமும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இவ்வாறு வளர்வடக்கம் கொண்ட களை விதைகளைப் பல்வேறு உழவியல் முறைகளால், நிலத்தின் மேற்பரப்பிற்குக் கொணர்ந்து அவற்றை முளைக்கச் செய்து, பின் தகுந்த களைக்கட்டுப் பாட்டு முறைகளால் கட்டுப்படுத்தலாம். மிகுதி களைவிதைகளின் முறைப்பு (weed seed germina- ion). களை விதைகளின் முளைப்புத் தன்மை நிலத்தி லுள்ள நீர் மற்றும் ஆக்சிஜன், மண்ணின் வெப்ப நிலை ஆகிய காரணிகளைச் சார்ந்துள்ளது. கீனோ போடியம் ரூப்ரம் (Chenopodium rubrum) என்னும் களையின் விதைகள் மண்ணின் வெப்பநிலை யாக இருப்பின், மிகு முளைப்புத்திறன் கொண்டி ருக்கும். இதற்கு மாறாக, மூக்குத்திப் பூண்டின் (Vemonia Sps) விதைகள், மண்ணில் தாழ்ந்த வெப்ப நிலை நிலவும்போது மிகு முளைப்புத் திறனுடன் உள்ளன. ஒரு பருவக் களைகளின் விதைகளில் 0.1 - 0.5 மி.கி. எடையுள்ள விதைகள் மண்ணில் செ.மீ. ஆழத்தில் எளிதாக முளைக்கின்றன. பெரிய அளவு விதைகளான பாலிகோனம் கன்வால்வியூலஸ் (Polygonum convolvulus) நிலத்தில் 10 செ.மீ. ஆழத்தில் இருந்தாலும் முளைக்கும் திறன் படைத் உள்ளன. எந்திரக் கலப்பைகளால் உழுது இவ்விதைகளை நிலத்தின் மேற்பரப்பிற்குக் கொணர்ந்து முளைக்கச் செய்யலாம். விதைகள் மூலம் களைகள் இனப்பெருக்கம் செய்வதைப் போல, தவையாக 0.5