பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 காரட்‌ குடும்பம்‌

434 காரட் குடும்பம் இத் தாவரம் முழுதும் குறிப்பாகத் தழைப் பகுதி மட்டும் நறுமணத்துடன் காணப்படும். எப்போதும் தாவரங்களின் நடுத்தண்டில் அகன்ற பெரிய தக்கை (நெட்டி) இருக்கும். தாவரங்கள் முதிர்ந்தவுடன் இந்தத்தக்கைப் பகுதி (pith) உலர்ந்து காய்ந்துவிடுவ தால் கணுவிடைப் பகுதி குழிவாகிவிடும். இலைகள். மாற்றடுக்கத்தில் அமைந்திருக்கும் லைகள் தண்டின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும். சில சமயங்களில், இருவேறுபட்ட அமைப்புள்ள இலைகள் ஒரு தாவரத்தில் தோன்றும். பொதுவாக அதங்கை வடிவ (palmately lobed) அல்லது சிற றகு வடிவக் (pinnately compound) கூட்டிலைகள் தனி இலைகளே. சில சமயங்களில் தனி இலைகளே விரல் போன்று பள்ளங்களைக் கொண்டிருக்கும். லைக் காம்பு தண்டைச் சுற்றி ஓர் உை உறை போல் அமைந் திருக்கும். இலையடிச் செதில் இல்லை: அவ்வாறு இருப்பினும், மிகச் சிறியதாக ஒரு வெட்டுப் போல் காணப்படும். மஞ்சரி. சில சிற்றினங்களில் பூக்காம்பின் வளர்ச்சி குறைந்துவிடுவதால் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி யைக் கொண்ட குடை மஞ்சரி (umbel) உருண்டை யாகிவிடுகிறது. எளிமையான கூட்டு மஞ்சரியை வட்டப்பூவடிச் செதில் சூழ்ந்திருக்கும். நிலையான பூவடிச் செதில் கனியின் மீதே ஒட்டியிருக்கும் அல்லது கனி உருவாகும் வரை மலரைச் சுற்றியிருக்கும்; சில சமயங்களில் மலர் மலர்ந்தவுடனேயே விழுந்துவிடும். மலர்கள். ஒழுங்கான அல்லது ஒழுங்கற்ற இருபால் மலர்களும் சில சமயங்களில், குடை மஞ்சரியில் புதிதாக உருவாகும் சிறு குடை மஞ்சரிகளும் ஆண் மலர்களையே கொண்டிருக்கும். அஸ்ட்ரான்ஷியா எனும் பேரினத்தின் மஞ்சரியில் நீண்ட காம்பு கொண்ட சில ஆண் மலர்கள், குட்டையான காம்புடைய பல மலர்களினூடே இரு பால் அனைத்து மலர்களும் ஒருபாலானவை; மானோஷியஸ் (எ.கா. எக்கைனோஃபோரர்) பேரினம் இருபால்செடி வகையைச் (dioecious) சார்ந்தது. எ.கா.ஆர்க்டோபஸ். காணப்படும் அல்லது ஆனால் புல்லிவட்டம். புல்லி இதழ்கள் ஐந்தும் சூலகத் தோடு இணைந்து இருப்பதால் புல்லி இதழ்க் குழாயின் விளிம்பில் ஐந்து பல் போன்ற அமைப்புகள் தோன் றும். வட்டத் தட்டு இரண்டாகப் பிளவுபட்டுச் சூற் பையின் மேலிருந்து தோன்றுகிறது. அல்லிவட்டம். ஐந்து (சமமற்ற இரு பிளவு பட்ட அல்லி இதழ்களின் நுனி உட்புறம் வளைந்திருக்கும். மகரந்தத் தாள் வட்டம். சூற்பையின் மேலிருந்து தோன்றும் 5 மகரந்தத் தாள்கள் அல்லி இதழ்களுக்கு நேரெதிரே அமைந்திருக்கும். நீள்வாக்கில் வெடிக்கக் கூடிய இரண்டு மகரந்தப்பைகள் உள்ளன. மகரந்தப் பைகள் மகரந்தத் தாளுடன் அடிப்புறத்திலோ முன் புறத்திலோ இணைக்கப்பட்டிருக்கும். சூலக வட்டம் இரண்டு அறை கொண்ட கீழ் மட்டச் சூற்பையின் ஒவ்வோர் அறையிலும் ஓர் அன்ட்ரோபஸ் வகைச் சூல், அச்சுச் சூல் ஒட்டு முறை யில் இணைக்கப்பட்டுள்ளது. சூல்தண்டு 2; அடியில் பருத்துப் பரவிக் காணப்படும் (stylopod). ஒவ்வொரு சூல்தண்டின் நுனியிலும் உருண்ட சூல்முடி காணப் படும். களி. இரண்டு சம பிளவுடைய பகுதிகளை ஒன்றாகக் கொண்ட ஓர் உலர் வெடி கனியாகும். இக்கனி நேராகவோ பக்கவாட்டிலோ இறுக்கப்பட் டிருக்கும். இவ்வாறு இறுக்கப்பட்டிருக்கும் சம பகுதிக் கனிகளை ஓர் இணைப்பு வேறுபடுத்தும். இதி லிருந்து. ஒரு கிளைத்த கம்பி போன்ற கனிக்காம்பு (carpophore) தோன்றி வெடித்த மெரிகார்ப்பு களைத் தன் நுனியில் கொண்டு தொங்கிக் கொண்டி ருக்கும். ஒவ்வொரு பெரிகார்ப்பைச்சுற்றியும் 5 நீண்ட முதன்மை முகடுகள் இரண்டாம் நிலை முகடுகளோடு மாறி மாறி அமைந்திருக்கும். கனியின் வெளிப்புறச் சுவரில் குறுக்கு வாட்டாகப் பல எண்ணெய்க் வாய்கள் உள்ளன. தசை கால் விை த விதை. ஒவ்வொரு மெரிகார்ப்பிலும் ஒரு உள்ளது. சிறிய கருவைச் சுற்றிலும் உறுதியான ணக்கமுள்ள சவ்வினால் சூழப்பட்ட முளை சூழ் பெருமளவில் உள்ளது. படிமலர்ச்சி அடிப் படையில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் இக்குடும்பம் பெரும்பாலும் சிறுசெடி களையே கொண்டுள்ளது. மேலும், சைகோகார்ப் எனும் இவ்வகைக் கனி படிமலர்ச்சி நிலையில் உயர்ந்திருக்கும் இக்குடும்பத்தின் முக்கிய பண்பாகும். பொருளாதாரச் சிறப்பு. இக்குடும்பத்தைச் சார்ந்த பேரினங்கள் உணவில் சுவை உணவுக்காகவும் யூட்டவும் அழகுக்காகவும் பயன்படுகின்றன. தாவரங்களின் வேர் கனிகளில் உள்ள அல்கலாய்டு, ரெசின் ஆகியவை மனிதர்களைக் கொல்லுமளவிற்கு நச்சுத்தன்மை கொண்டவையாயுள்ளன. மேலும், பல சில B . சில தாவரங்கள் வீட்டில் அழகுக்காக வளர்க்கப் படுகின்றன. டாக்கஸ் கரோத்தா(Daucus carta). 2000 ஆண்டு களுக்கு மேலாக இதைக் கிரேக்கர்கள், ரோமானி யர்கள் பயிரிட்டு வருகின்றனர். ஒருபருவம் வளரும் இத்தாவரம் ஆணி வேரில் உணவைத் தேக்கி வைத் திருக்கும். இதனால் ஆணிவேர் பருத்துக் கிழங்கு போல் காணப்படும். இவற்றைச் சமைத்தோ பச்சை யாகவோ உண்ணலாம். இக்கிழங்கிலிருக்கும் மஞ்சள் நிறமிப் பொருளைப் பிரித்தெடுத்து வெண்ணெய்க்கு நிறமூட்டுவர். மேலும் இக்கிழங்கு சூப்புக்கு மண மூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. குதிரைகளுக்குச் சிறந்த உணவாகவும் இது உள்ளது.