பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரட்‌ குடும்பம்‌ 435

பாஸ்டினாகா சடைவா (Pastinaca sativa). இந்தக் காய்கறி ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டி ருப்பினும் மேற்கிந்தியத் தீவுகள், வர்ஜீனியா முதலிய பகுதிகளில் 1564 முதலே பயிரிடப்பட்டு வருகிறது. இத்தாவரத்தின் ஆணி வேரில் சர்க்கரை, கொழுப்புச் சத்து மிகுந்திருத்தலால் மனிதர் களாலும் விலங்குகளாலும் விரும்பி உண்ணப்படு கிறது. மது தயாரிக்கவும் இது பயன்படுகிறது, ஏபியம் கிராவியோலென்ஸ் (Apium graveolens) என்னும் செலரி, நீர், சாக்கடைச் சேறு நிறைந்த இடங்களில் வளரும். இத்தாவரம் சதைப்பற்றுள்ள வேரையும். நீளமான பெரிய கூட்டிலையையும் கொண்டது. இவ்விலைக் காம்புகள் உணவிற்குச் சுவையூட்ட மட்டுமன்றி மருத்துவத்திலும் பயன்படு கின்றன. இலைக்காம்புகள் மட்டுமல்லாமல் வேர்கள், விதைகள் யாவும் உணவிற்குச் சுவையூட்ட, சூப் தயாரிக்கப் பயன்படுகின்றன. பிம்ப்பினெல்லா அனிசம் என்னும் அனிஸ் 2 அடி உயரம் வளரும் ஒரு பருவத் தாவரம். சாம்பல் V காரட் குடும்பம் 435 கலந்த பழுப்பு நிறம் கொண்ட சிறிய விதை களை மயிர் சூழ்ந்திருக்கும். உணவு. கேக், மிட்டாய், இனிப்பு வகைப் பொருள்களுக்குச் சுவையூட்டப் பயன்படும் இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவம். சோப்பு, அலங்காரப் பொருள். மணப் பொருள், சுவைநீர் தயாரிக்கவும் உதவுகிறது. கேரம் கார்வி என்னும் கேராவே தாவரத்தின பழுப்பு நிறக் கனியும் விதையும் ரொட்டி, மணப் பொருள், மருந்து, சுவைநீர் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. கொரியான்ட்ரம் சடைவம் என்னும் கொத்த மல்லியின் கனி மஞ்சள் கலந்த பழுப்பு நிற விதை களை உருவாக்கும். இது பழங்கால முதலே இனிப்பு, காரம் முதலிய அனைத்து உணவு வகைகளுக்கும் சுவையூட்டப் பயன்பட்டு வருகிறது. இக்கனியின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மது வகை களுக்குச் சுவையூட்டப் பயன்படுகிறது. குமிளம் சைமினம் என்னும் கியூமின் நீண்ட க.8-28அ உட்புற மலர் வளர் இயல்பு கொத்து மல்லி வெளிப்புற மலர்