பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 களைகள்‌

26 களைகள் களைகள், வேர்கள், தண்டுப் பெரும்பாலான பகுதிகள், கிழங்குகள் முதலிய பகுதிகளால் எளிதில் இனப்பெருக்கமடைகின்றன. . களைக் கொல்லிகள். பயிர்ப்பாதுகாப்புத் திட்டத் தில் களைத்தடுப்பு ஒரு முக்கிய காரணியாகும். களைகளால் வீணாகும் நீர், உரம் ஆகியவற்றைத் தக்க களைத்தடுப்பு முறைகள் மூலம் பயிருக்குப் பயனாகுமாறு செய்யலாம். தொன்றுதொட்டு மனி தரைக் கொண்டு கைகளாலோ களைக்கொட்டாவோ களைகளைக் கட்டுப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இம்முறையில் காலமும், பொருளும் மிகுதி யும் வீணாவதால் புதிய வேதிக் களைத்தடுப்பு முறையே சிறந்ததாகத் தற்போது பரிந்துரைக்கப் படுகிறது. களைக்கொல்லிகள் பல வியத்தகு தேர் திறன் (selectivity) வாய்ந்தவை. பயிர்களின் மீது தெளிக்கும்போது பயிர் அழியாமல் இவை களை களை மட்டும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. மட்டும் களைக்கொல்லிகளின் வகை. தேர்திறன் ளவை தேர்திறனற்றவை எனக் களைக்கொல்லிகள் இருவகைப்படும். தேர்திறன் உள்ள களைக்கொல்லி கள் (டெல்குளோர், பாசலின்) பயிரைப் பாதிக்காமல் பயிர்களுக்கிடையே வளரும் களைகளை தாக்கி அழிக்க வல்லவை, தேர்திறனற்ற களைக் கொல்லிகள் (கிரமாக்சோன்) பயிரையும் களைகளை யும் பாகுபாடின்றி அழிக்க வல்லவை. இரண்டாம் வகைக் களைக்கொல்லிகள் பயிரிடப்படாத நிலங் களிலும் பருத்தி, கரும்பு, வாழை போன்ற மிகு இடை டவெளி கொண்ட பயிர்களிலும் பயன்படும். மேற்கூறிய இருவகைக் களைக்கொல்லிகளை. மண்ணில் தெளிக்கும் களைக்கொல்லிகள், லை களின் மீது தெளிக்கும் களைக்கொல்லிகள் (2,4-D, கிரமாக்சோன்) என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மண்ணில் தெளிக்கும் களைக்கொல்லிகள், களை கள் முளைக்குமுன் தெளிக்கப்படுபவை. களை விதைகளும், முளைத்துக் கொண்டிருக்கும் களைகளும் களைக்கொல்லி மருந்து பட்டு அழிகின் றன. களைக்கொல்லிகளை மண்ணின் மீது தெளிக் கும் முன் மண் சிறிது ஈரமுடன் இருக்க வேண்டும். தழைகளின் மீது தெளிக்கப்படும் களைக்கொல்லிகள் தொடு நஞ்சாக (contact poison ) உள்ளமையால் அவை செல்களினுள் சென்று களைகளை அழிக்கின் றன. ஊடுருவிப் பாயக்கூடிய களைக்கொல்லியான 2,4-D களைச் செடிகளின் ஒளிச்சேர்க்கை, புரதச் சத்து உற்பத்தி ஆகியவற்றைப் பாதித்தும் வினை யியல் மாற்றங்களை ஏற்படுத்தியும் களைகளை அழிக்கிறது. களைக்கொல்லிகள் கரையும் உப்பு, நனையும் தூள், பால்ம, குறுநொய் ஆகிய வடிவங் களிலும் கிடைக்கின்றன. களைக்கொல்லிகளைத் தெளிக்கும் முறைகள். கரையும் உப்பு, நனையும் தூள், நீர்மம் முதலிய வற்றை நீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். தேவையான சுளைக்கொல்லி மருந்தை 500-625 லிட்டர் நீரில் சுலந்து ஒரு ஹெக்டேர் நிலத்தில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி யைக் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட முறையில் தெளிப்பது மிகவும் இன்றியமையாதது. களைக் கொல்லியைத் தெளிக்கும் முன் மண்ணில் போதிய ஈரம் இருக்கவேண்டும். மருந்து தெளிக்கப்படும் பாத்திகள் சமமாக இருக்க வேண்டும். காலை வேளையில் தனியாக ஒதுக்கப்பட்ட தெளிப்பான் மூலம் மருந்தைத் தெளிக்க வேண்டும். களைக் கொல்லியை அதற்குரிய தெளிமுனை பொருத்திய தெளிப்பானைக் கொண்டு தெளித்தல் நன்மைதரும். களைக்கொல்லி மருந்தைத் தகுந்த பயிர்ப் பருவத் தில் தெளிக்க வேண்டும். பயிர் விதைக்கு முன் அல்லது நடுமுன் தெளித்தல். பயிரிடுவதற்கு முன், மண்ணில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த இம்முறை சிறந்ததாகும். குறைந்த உழவு நிலங்களில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. புன்செய் நிலப் பயிர்களின் நாற்றுகளை நடுமுன் பாசலின் போன்ற களைக்கொல்லிகளைத் தெளித்து, நீர் விட்டு நடு வதன் மூலம் சிறந்த முறையில் களையைக் படுத்தலாம். கட்டுப் களை முளைக்குமுள் தெளித்தல். இம்முறையில், பயிர் விதைத்து முதல் நீர் விட்ட மூன்று அல்லது ஐந்தாம் நாள் வரை களைகள் முளைக்குமுன் நிலத் தின் மீது சமமாகத் தெளிக்கப்படுகிறது. களை முளைத்த பின் தெளித்தல். இம்முறையில் பயிர்களும் சுளைகளும் நன்கு வளர்ந்த நிலையில் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. களைக்கொல்லி களைப் பயன்படுத்துவதால் சாகுபடியில் உள்ள பயி ரும் அடுத்துப் பயிரிட உள்ள முளைப்பும் பெரும் பாலும் பாதிக்கப்படுவதில்லை. மண்ணில் எஞ்சி யுள்ள களைக்கொல்லிகள் பல்வேறு வேதி மாற்றங் களுக்கு உட்படுத்தப்பட்டு ஏறக்குறைய 30-80% வரை மறைந்து விடுகின்றன. களைக்கொல்லிகளின் திறனைக் கட்டுப்படுத்தும் காரணிகள். களைச்செடிகளின் புற அமைப்பு ஒரு குறிப்பிட்ட களைக்கொல்லியின் செயலாற்றும் திற னையும் தேர் திறனையும் பொறுத்தது. இலைப் பரப்பின் மீது படியும் களைக்கொல்லியின் அளை வைப் பொறுத்தும் பாதிப்பு ஏற்படுகிறது. லை களின் வடிவமைப்பு, இலைகளின் மேல்தோலில் காணப்படும் மயிர். இலையின் பருமன் வற்றைப் பொறுத்தும், களைக் கொல்லியின் ஊடுரு விப்பாயும் திறன் நிர்ணயிக்கப்படுகிறது. முளைக்கும் தறுவாயிலுள்ள சிறிய களைகள் மண்ணில் இடப்படும் களைக்கொல்லிகளால் நன்கு கட்டுப்படுத்தப்படு கின்றன. பல்வேறு உளவியல் வழிமுறைகளால் வளர் முதலிய