பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 கார மண்‌ உலோகங்கள்‌

140 கார மண் உலோகங்கள் 3 இதில் m எனக் கொண்டால் 2 ) 3 2 -) = 5 √x-x² dx = ( } ! )³ 2 ! 2 2 காரணியப் பெருக்கம், காமாச்சார்பு, பீட்டாச் சார்பு ஆகியவை பின்வருமாறு தொடர்புபடுத்தப்படும். m,[ மிகை முழு எண்களாயின், {m) y (n) y (m+n) 8 (m, n)= (m- I)!(n-1)! (m + n - 1) ! ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி எழுதப்படும் மிகை முழு எண் அடுக்குக்குரிய விரிவுகளின் கெழுக்கள், காரணியப் பெருக்கங்கள் மூலமாக எழுதப்படுவதைக் காணலாம். நீளமான கோவை களைக் காரணியப் பெருக்கங்கள் மூலமாகச் சுருக்க மான வடிவில் எழுத முடிவதால் அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் வை பயன்படுகின்றன. அ.ரகீம் பாட்சா கார மண் உலோகங்கள் தனிம மீள்வரிசை அட்டவணையில் IIA தொகுதியைச் சார்ந்த பெரிலியம் (Be), மக்னீசியம் (Mg), கால்சியம் (Ca). ஸ்ட்ரான்சியம் (Sr), பேரியம் (Ba), ரேடியம் (Ra) ஆகிய எட்டுத் தனிமங்கள் கார மண் உலோ கங்களாம். 19 ஆம் நூற்றாண்டிற்கு முன், உலோக மல்லாத. தீயினால் மாறாத பொருள்கள் மண்கள் எனப்பட்டன, சுண்ணாம்பைப் போன்ற காரங்களை யொத்த சோடா சாம்பல், பொட்டாஷ் போன்றவை கார மண்கள் என்று கூறப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த ஆய்வுகளின் பயனாகத் தனிமங்களாகக் கருதப்பட்ட இவ்வகை மண்கள் ஆக்சைடுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இத்தனிமங்கள் ஆக்சைடுகளிலிருந்து கார மண் உலோகங்கள் கி.பி. 1869 ஆம் ஆண்டு பிரித் தெடுக்கப்பட்டு மெண்டலீவ் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணையில் ரண்டாம் தொகுதியில் வைக்கப்பட்டன. கார மண் உலோகங்கள் யாவும் அதிக நேர்மின் தன்மை கொண்டவை (எளிதில் எலெக்ட்ரான்களை நேரயனிகளாக மாற்றக்கூடியவை). எனவே இவற்றின் பல சேர்மங்கள் அயனிச் சேர்மங்களாக அமைந் துள்ளன. வை M* (M = காரமண் உலோகம்) என்ற நேரயனியாகப் பெரும்பாலான உப்புகளில் உள்ளன. வை நிறமுள்ள எதிரயனியைக் கொண்டிராத போது நிறமற்றவையாக உள்ளன. இவை ஒரே உலோ மாதிரியான இணைதிறனைக் கொண்ட கார கங்களைப் போல் எ.கா. (NaCl, Na,O) இருப்பதில்லை. எ.கா.CaCl, CaO இவற்றின் ஆக்சைடுகள் காரமாக விளங்குகின்றன. பெரிலியத்திலிருந்து ரேடியம் வரை செல்லச் செல்ல இவற்றின் நேர்மின் தன்மை மிகுதியா கிறது. எனவே பெரீலியம் ஆக்சைடு, பேரியம் அல்லது ரேடியம் ஆக்சைடுகளைப் போல் அல்லாமல் வலி குன்றிய காரங்களாகவே உள்ளன. இவ்வுலோகங்கள் ஆக்சிஜன் ஒடுக்கிகளாகச் செயல்படுகின்றன. வையாக இவ்வுலோகங்களில் பல (முக்கியமாக மக்னீசியம், கால்சியம் சேர்மங்கள்) தொழில்துறையில் பயனுள்ள விளங்குகின்றன. ரேடியம் அருந்தனிம மாகும்; இதன் எல்லா ஐசோடோப்புகளும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. வாலாறு. பழங்காலத்திலிருந்தே மக்களுக்குத் தெரிந்த கார மண் தனிமம் தற்போது கால்சியம் ஆக்சைடு எனும் சுண்ணாம்பு ஆகும். லத்தீனில் கால்க்ஸ் (calx) என்றால் சுண்ணாம்பு ஆகும். மக்னீசியா (மக்னீசிய ஆக்சைடு) என்ற பெயர் முற் காலத்தில் ஏசியா மைனர் என்ற நாட்டில் இருந்த மக்னீசியா என்னும் மாவட்டப் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.பி. 1755 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோசப் பிளாக் என்ற வேதியியலார் மக்னீசியா, சுண்ணாம்பி லிருந்து வேறுபட்டது என்று விளக்கினார். மக்னீசியா நீரில் கரையும் சல்ஃபேட்டையும், சுண்ணாம்பிலிருந்து பெறப்படும் சல்ஃபேட் நீரில் கரையாத தன்மை கொண்டிருப்பதையும் கூறினார். கி.பி. 1774 ஆம் ஆண்டில் கார்ல் வில்ஹெம் ஷீல் என்ற சுவீடனைச் சேர்ந்த வேதியியலார் கடினக்கட்டி அல்லது பேரிஸ் (கிரேக்கம்-கடினம்) என்ற கனிமத்தை ஆராய்ந்து அது புதிய உலோக மண்ணைக் கொண்டுள்ளதைக் கூறினார். பின்னர் இது பேரிட்டா எனப்படும் பேரியம் ஆக்சைடு என்று அறியப்பட்டது. ஸ்காட் லாந்தில், ஸ்ட்ரான்ஷியன் என்ற இடத்தில் உள்ள காரியச் சுரங்கத்திலிருந்து கிடைத்த சுனிமத்தை (ஸ்ட்ரான்சியம் கார்பனேட்) ஆராயும்போது அது புதியதொரு மண் உலோகம் கொண்டிருப்பதை கி.பி. 1790இல் அடொ கிரஃபோர்ட் என்பார் கண்டறிந்தார். இதுவே பின்னர் ஸ்ட்ரான்ஷியம் எனப்பட்டது. பெரிலியாவைப் - (பெரிலியம் ஆக்சைடு) பெரில் கனிமத்திலிருந்து கி.பி. 1770ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பகுப்பாய்வு வேதியியல் வல்லுந ரான லூயி நிக்கோலஸ் வாகுயிலின் பிரித்தெடுத்து அது புதிய தனிமத்தைப் பெற்றிருப்பதைக் கண்டறிந் தார். முதலில் அவர் அதை அலுமினா என்று குழப்பிக் கொண்டாலும் பின்னர் அவர்