442 கார மிகைப்பு
442 கார மிகைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியில், பெரிலியத்தின் காரக் கரைசலைக்கொதிக்கவைக்கும்போது அது அலுமினா போல் இல்லாமல் வீழ்படிவாகிறது என்று அறிந்தார். பெரிலியா முன்பு குலுசீனா என்று கூறப்பட்டது. கிரேக்க மொழியில் குலுசீனா என்றால் இனிமை என்று பொருள். இன்றும்ஃபிரான்ஸ் நாட்டில் பெரிலி யம் தனிமம் குலுசீனியம் என்றே குறிக்கப்படுகிறது. கதிரியக்கத் தனிமமான ரேடியத்தைப் பேரியத்தி லிருந்து கி.பி.1898 ஆம் ஆண்டில் சுதிரியக்கத்தின் மூலம் பியாரியும், மேரி கியூரியும் பிரித்தெடுத்தனர். பண்புகள். கார மண் தனிமங்கள் அதிக உலோகத் தன்மையையும் மின்சாரத்தை நன்கு கட த்தும் திறனையும் கொண்டவையாகவுள்ளன. இவற்றை வெட்டும்போது வெண் சாம்பல் நிறமும், காற்றுப் படப்பட நிறம் மாறுதலும் அடைகின்றன. பெரிலியம் கண்ணாடியைக் கீறும் அளவுக்குக் கடினமானதாக வும், காரீயத்தைவிடச் சற்றே கடினமானதாகவும் உள்ளது. கார மண் உலோகங்களின் உருகுநிலை களும், கொதிநிலைகளும் கார மண் உலோகங்களை விட அதிகமாக உள்ளன. ஆனால் இவற்றின் வேறு பாடு ஒரே சீராக இருப்பதில்லை. மக்னீசியம் தொகுதியில் மிகக்குறைந்த உருகுநிலையையும், அதற்கு முன் உள்ள பெரிலியம் அதிக உருகுநிலையை யும் கொண்டுள்ளன. இவை தீவிர ஆக்சிஜன் ஒடுக்கி கள் ஆகும். இவ்வுலோகங்கள் நீர்ம அம்மோனி யாவில் கரைந்து கருநீலமான கரைசல்களைக் கொடுக்கின்றன. கார மிகைப்பு க இத் த. தெய்வீகன் உடலிலுள்ள பாய்மங்களான இரத்தம், செல் வெளிப் பாய்மம் (extra cellular fluid),செல் உள் பாய்மம் (intracellular fluid), மூளைத்தண்டுவடப்பாய்மம்(cere. brospinal fluid) ஆகிய அனைத்துமே குறித்த அளவு கார அமிலச் சமநிலையில் (acid - base equilibrium) இருந்தால்தான் உடல் உறுப்புகள் சீராக இயங்கும். ரத்தத்தில் இந்நிலை 7.357.45 அளவில் ஹைட்ரஜன் அயனிகள் கொண்டிருக்க வேண்டும். இது குறைந்துள்ள நிலையைக் காரமிகைப்பு (alkalosis) எனலாம். காரமிகைப்பை மூச்சோட்டக் காரமிகைப்பு (respiratory alkalosis) ஆக்கச்சிதை மாற்றக் கார மிகைப்பு (metabolic alkalosis) என இரு வகையாகப் பிரிக்கலாம். இவை ஏற்படும் சூழ்நிலை, நோய்க் குறி, இவற்றை அறியும் முறை, மருத்துவ முறை ஆகிய வற்றைக் காண வேண்டும். மூச்சோட்டக் காரமிகைப்பு. விரைந்தும், ஆழ்ந்தும் போலி மூச்சிழுத்து விட்டால் உடலிலிருந்து அளவுக்கு மீறிக் CO. கார்பன் டைஆக்சைடு வெளியேறும். இந் நிலையில் இரத்தத்திலுள்ள co, அளவு குறைந்து கார அயனிகளின் அளவு கூடுவதால் காரமிகைப்பு ஏற்படுகிறது. இது பல சூழ்நிலைகளில் ஏற்படலாம். சிலர் மன நோய்களின் விளைவாகவோ. யாகவோ விரைந்து மூச்சிழுத்து விடலாம். காய்ச் சல்களின் போக்கிலும் முச்சிரைப்புப் போன்ற நுரை யீரல் நோய், இதயப் பணி குறைவுள்ள நோய் இவற்றின் போக்கிலும், மிக உயரமான இடங்களில் இருக்கும்போதும் மூளை நோய்கள் பலவற்றின் போக்கிலும், செயற்கை மூச்சுப் பொறிகளைத் தவறாகக் தையாள நேரும்போதும் இதே நிலை ஏற்படலாம். இவ்வேளைகளில் விரைந்து, ஆழ்ந்து மூச்சிழுப்பு ஏற்படுவதைத் தவிர, மனச்சோர்வு. மயக்கநிலை ஆகியவையும் ஏற்பட லாம். இந்நிலையில் பெரும்பாலும் கால்சியம் சத்து அளவு குறைபடுவ தால் நோயாளியின் கைகால்கள் கோணிக் குமைவ தோடு மூச்சுத் திணறலும், முகத் துடிப்பும் ஏற்படலாம். சில இரத்த ஆய்வின் மூலம் இந்நோயைக் கண்டறிந்து இந்நிலைக்கு அடிப்படை யான நோய் நிலையை நீக்கினால் மூச்சோட்டக் கார மிகைப்பு மாறும். ஆக்கச்சிதை மாற்றக் காரமிகைப்பு, மூச்சோட்டம் தவிர்த்த பிற உறுப்புகளின் பணிப் பிறழ்வாலும், ஆக்கச்சிதை மாற்றக் கோளாறுகளின் விளைவாலும் ஏற்படும் காரமிகைப்பை, ஆக்கச்சிதை மாற்றக் காரமிகைப்பு எனும் பெயரால் குறிக்கலாம். இரைப்பைப் புண் போன்ற நோய்களைத் தீர்க்க மருத்துவ அறிவுரைப்படியோ தாமாகவோ நோயாளி கள் அளவுக்கு மீறிச் சோடியம் பைகார்பனேட் போன்ற கார உப்புகளை உட்கொள்ளுதல்; மருத்து வர்களே சில வேளைகளில் அளவுக்கு மீறிச் சோடியம் பைகார்பனேட், சோடியம் சிட்ரேட், சோடியம் லாக்டேட், சோடியம் அசெடேட் போன்ற உப்புகளை மருந்தாக அளித்தல் என்பன இதன் காரணங் களாகும். வயிற்றுப்புண்ணுக்காக உண்ணும் லைகோரிஸ், கார்பீனாக்சோலான் போன்ற கனிம. கார்ட்டி காய்டுகள்: உடலெங்கும் தீப்புண் ஏற்படுதல், பரவலாக உள்ள எலும்பு நலிவு நோய்கள், பெரு மளவில் இரத்தம் ஏற்றப் பெறுதல், பெருமளவில் பெனிசிலின். கார்பெனிசில்லின், சல்ஃபேட்டுகள், பாஸ்ஃபேட்டுகள் போன்ற மருந்துகள் நீரிழிவு மருந்துகள் தருதல், பெருமளவில் வாந்தி எடுத்தல், பெருமளவிலும் நீண்ட நாளாகவும் உள்ள வயிற்றுப் போக்கு, பேதி முதலியன விளைவிக்கும் குடல் நோய்கள், பாரா தைராய்டு அட்ரீனல் ஆகியவற்றின் பணிப் பிறழ்வு நிலைகள், சிறுநீரகப் பணிப் பிறழ்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஆக்கச் சிதை மாற்றக் காரமிகைப்பு விளையலாம்.