காரல் 443
காரணமாக நோய்க்குறிகள். இந்நிலையில் தோன்றும் உடற் குறிகள் பெரும்பாலும் அடிப்படைக் வுள்ள நோய்களின் குறிகளேயாகும் அல்லது இந்நிலை களில் முன்னரே உள்ள பாய்ம மற்றும் அயனிகளின் சமன்பாட்டுச் சீர்கேட்டின் குறிகளாகும். காரமிகைப் பின் நேரடி விளைவுகளாகக் கவனக்குறைவு, சோர்வு, மனக்குழப்பம், மயக்சும் முதலிய நோய்க்குறிகள் தோன்றுகின்றன. மேலும் இந்நிலையில் இரத்தத்தில் கால்சியம் சத்துக்குறைவதால் டெட்டனி எனும் கை கால் கூம்புதல், முகத்துடிப்பு, குரல்வளை நெரிவு போன்ற நோய்க்குறிகளும் தோன்றக்கூடும். இரத்தத்தில் pH, CO, பைகார்பனேட் ஆகிய வற்றின் அளவை அறிவதன் மூலம் இந்நிலையை நுணுக்கமாகக் காணலாம், இந்நிலையைச் சீர் செய்ய, இதற்கு அடிப்படையாகவுள்ள காரண நிலை யையோ நோயையோ கண்டு ஆவன செய்ய மேலும் சோடியம், பொட்டாசியம், குளோரைடு ஆகிய அயனிகளின் சமநிலையையும் சீராக்க வேண்டும். பல்வேறு அயனிகள் கொண்ட உப்பு நீரை வாய் மூலமோ, சிரைகளின் மூலமோ தந்து சீராக்கலாம். காரல் 443 இம்முயற்சியின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் இந்நோய் நிலையை உப்பு நீருக்குக் கட்டுப்படும். காரமிகைப்பு (saline responsive alkalosis), உப்பு நீருக்குக் கட்டுப்படாக் காரமிகைப்பு (saline irrespon- sive alkalosis) என ரு வகைப்படுத்தலாம். சில வேளைகளில் இந்நிலையைப் போக்க, அம்மோனியம் குளோரைடு உப்பையும் மருந்தாகப் பயன்படுத்த நேரிடலாம். கா லோக முத்துக்கிருஷ்ணன் நூலோதி. Lawrence G. Wesson and George M. Fawelli, Recent advances in Renal Physiology and Pharmacology, MTP Medical and Technical publishing Co, Ltd., Lancaster, 1974; Arieff et. al, Fluid, Electrolyte and Acid Balance, Churchill Livingstone, New York. காரல் ம்மீன்கள் உலகில் பல பகுதிகளில் காணப்பட்டா லும் இந்தியக் கடற்சுரையில்தான் மிகுதியாகக் சலுவட்டக்காரல் (L. jonesi) சலுவட்டக் காரல்{L.(splendens) வரிக்காரல் (L. dussumieri) மண்டைக்காரல் (L: brevirostris)