பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 காரல்‌

444 காரல் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென் கிழக்குக் கடற்கரையான பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள அதிராம்பட்டினம், மண்டபம், இராமேஸ்வரம் தூத்துக்குடி முதலிய டங்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இந்தியக் கடற்கரைப்பகுதிகளில் மூன்று பேரினங் களில் (gerus) 18 இனக் காரல் மீன்கள் இருப்பன வாக அறியப்பட்டுள்ளது. சில காரல் வகைகள் சிறியனவாகவும், சில பெரியனவாகவும் இருக்கும். இவை தம் வாயின் தாடைப் பகுதியைக் குழாய் போன்று மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் நீட்ட வல்லவை. இவை பெரும்பாலும் கடலில் ஆழம் குறைந்த பகுதிகளில் கீழ் மட்டத்தில் உள்ள நீர்ப் பகுதிகளில் கூட்டமாக வாழக்கூடியவை. மேலும் வை நதியின் கழிமுகப்பகுதி, உப்பங்கழிகள் முதலியவற்றிலும் வாழ்கின்றன. காரல் பேரினங்களில் 18 இளக் காரல் மீன்கள் தமிழ்நாட்டில், குறிப்பாக மன்னார் வளைகுடாவில் கிடைக்கின்றன. இம்மீன்களின் ஒவ்வொரு வகையும் ஒவ்வோர் இடத்திற்கும், அங்குக் கடலில் நிகழும் தட்பவெப்ப நிலை, கடலில் ஏற்படும் மாற்றங் களுக்கும் தக்கபடிமாறுபடும். கிழக்குக்கடற்கரையான ஆந்திராவில், தீவெட்டிக் காரல் (Leiognathus bindus) காரல் (Secutor insidiator) மிகுதியாகக் கிடைக்கும். சென்னை மற்றும் கடலுார்க் கடற்கரையில் சலுவட்டக் காரல் (Leiognathus splendens) கானாக் காரல் (S.insidiator,) தீவெட்டிக்காரல் முதலியன பெரும்பான்மையாகக் கிடைக்கும். மண்டபம். இராமேஸ்வரம் கடற்கரைப்பகுதிகளில் சலுவட்டக் காரல் (L. jonesi), மண்டைக்காரல் (Leiognathus brevirostris), வரிக்காரல் (Leiognathus dussumieri), ஊசிக்காரல் (L. berbis) வகைகளும், மேற்குக் கடற் கரைப் பகுதியான கேரளாவில் தீவெட்டிக்காரல் (L bindus), சலுவட்டக்காரல் (L. splendens). குறிப் புக் காரல் (Gu220 spp) முதலியனவும், கர்நாடகக் கடற்பகுதிகளில் தீவெட்டிக்காரல், மண்டைக்காரல் முதலியனவும் பேரளவில் கிடைக்கின்றன. கடலின் ஆழமான பகுதிகளில் காணப்படும் இலைக்காரல் (Leiognathus equulus) மீன்கள் அனைத்துக் தீவெட்டிக்காரல் (L bindus) கானாக் காரல்{S Insidiator) இலைக்காரல் (L.equulus) குறிப்புக்காரல் (Gazza spp)