பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 காரல்‌

446 காரல் (ovary) 686-39, 806 வரை முதிர்ந்த முட்டைகள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சலுவட்டக்காரலின் மற்றொரு வகையான இக்காரல் (L. splendens) இந்தியாவில் அனைத்துக் கடற்கரைப்பகுதிகளிலும் காணப்படும். இவை குறிப் பாக மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும். மீன் பிடிப்பில் 50 மி.மீ.- 100 மி.மீ. வரை அளவுள்ள மீன்கள் பெருமளவில் காணப்படுகின்றன. இவை கூடுதலனவாக 150 மி.மீ. வரை வளர்ச்சி அடையக்கூடியனவாகும். இவை மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை இனப்பெருக்கம் செய்தாலும், பெரு மளவில் இனப்பெருக்கம் செய்யும் மாதங்கள் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதங்களாகும். ஒரு மீன் சராசரி யாக 7,500 மூட்டைகளைத் தன் சினையில் கொண்டி ருக்கும். ஆனால் உடல் அளவு மிகுந்துள்ள மீன்கள் 11,000 முட்டைகள் வரை கொண்டிருக்கும். வரிக்காரல் (Liognathus dussumleri). பெரும் பாலும் மன்னார் வளைகுடாவில்தான் இவை மிகுதி யாகக் காணப்படுகின்றன. இங்கு கிடைக்கும் காரல் வகைகளில் இவை 30-50% T GYT GOT. 93-117 மி.மீ. அளவுள்ள மீன்கள் மிகுதியாகக் கிடைக் கின்றன. இவ்வகை மீன் 161 மி. மீ வளரக்கூடியது என்பதும், இது 5 வயது வரை வாழும் என்பதும் அறியப்பட்டுள்ளன. முதிர்ச்சி அடையும் ஆண், பெண் மீன்கள் முறையே 78 மி.மீ, 83. மி. மீ. உடல் அளவு கொண்டிருக்கும். இவை பெரும்பாலும் ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் மாதங்களில் இனப் பெருக்கம் செய்யக்கூடியனவாகும். ஒரு மீன் சினையில் 805-41,685 வரை முதிர்ந்த முட்டைகள் இருக்கும். மண்டைக்காரல். கிழக்கு மேற்குப் பகுதிகளில் கிடைத்தாலும், பாக் கடலில்தான் பெருவாரியாகக் கிடைக்கின்றது. இது இரண்டு ஆண்டில் 120 மி.மீ. வரை வளரக் கூடியது என்றும் அறியப்படுகிறது. கிடைக்கும் மீன்களில் 38-142 மி.மீ. அளவுள்ள மீன்கள் முறையே ஒரு வயது இரண்டு வயது மீன்கள் என்றும், ஒரு மாதத்தில் 5மி.மீ. வரை வளரக் கூடியவை என்றும் கணக்கிடப்பட்டுள்ளன. 63 மி.மீ. உள்ள பெண் மீன்கள், 68 மி.மீ. உள்ள ஆண் மீன்கள் ஆகியவை பருவ முதிர்ச்சி அடை கின் றன. ஆண்டின் அனைத்துக் காலங்களிலும் அவை இனப் பெருக்கம் செய்தாலும் குறிப்பாக மே, ஜுன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு பெண் மீன் சினையில் 16,240 முட்டைகள் வரை ருக்கும். கட தீவெட்டிக் காரல். இது கிழக்கு மற்றும் மேற்குக் ற்கரைப் பகுதிகளில் பெரும்பான்மையாகக் கிடைக் கிறது. மேற்குக் கடற்கரைப் பகுதியில் 50-95 மி.மீ. உள்ள மீன்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. 7 மாதங்களில் இது 40 மி.மீ. வரை வளரக்கூடியது. வரை " கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் முதல் மற்றும் இரண் டாம் ஆண்டு ஆகும்போது இதன் உடல் அளவு - ஒரு மாதத்தில் 65 சராசரி 90 மி.மீ. ஆகும். மி.மீ. வரை வளரக் கூடியது. இரண்டு ஆண்டிற்கு மேல் வாழக்கூடியது. முதலில் இம்மீன் முதிர்ச்சி அடையும்போது அதன் உடல் அளவு 87 மி.மீ. ஆகும். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இனப் பெருக்கம் செய்தாலும், டிசம்பர் பிப்ரவரி மாதம் முடிய, ஆழ்கடல் பகுதியில் இனப்பெருக்கம் செய் கின்றன, ஒரு மீனின் சினையில் சராசரியாக 6.162 முட்டைகள் இருக்கும். 6 கானாக் காரல் (S. insidiator), லைக்காரல் (L. equulus), குறிப்புக் காரல் (Gozz spp) முதலிய காரல் வகைகளும் குறிப்பிடத்தக்க வகையில் சில டங்களில் கிடைக்கின்றன. சென்னைக்கடற்கரை கொச்சி மண்டபத்தில் மன்னார் வளைகுடாப்பகுதி களில் 10-35 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதிகளில், 21-100மி.மீ. வரை அளவுள்ள கானாக் காரல் மீன்கள் மிகுதியும் கிடைக்கின்றன. இவை ஆகஸ்ட், செப்டம்பர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இனப் பெருக்கம் செய்யும்: காரல் இனங்களில் இலைக் காரல் பெரிய அளவு வளரக்கூடிய வகையாகும். , வை கூடுதலளவாசு 242 மி.மீ. வரை வளரக் கூடியவை. இவை கிழக்கு, மேற்குக் கடற்கரை மன் னார் வளைகுடாப் பகுதியில் 10-25 மீட்டர் ஆழம் உள்ள பகுதியில் மிகுதியும் கிடைக்கும். இவை இனப் பெருக்கம் செய்யும் காலம் ஜனவரி-மார்ச் மாதங் களாகும். இந்தியாவில் அனைத்துக் கடற்கரைப் பகுதிகளிலும் 40-120 மி.மீ. வரை உடல் அளவுள்ள குறிப்புக்காரல் மீன்கள் பெருமளவில் கிடைக் கின்றன. இவை இனப்பெருக்கம் செய்யும் காலம் ஜனவரி, மார்ச் ஏப்ரல் மாதங்களாகும். . உணவு உணவுப் பழக்கங்கள். காரல் மீன்களின் பெரும்பாலும் மிதவை உயிரினங்களாகும். இவற்றில் தாவர மிதவை உயிரிகள் (Phytoplankton), விலங்கு மிதவை உயிரிகள் (zooplankton) என்று இருவகை உண்டு. காரல் மீன்கள் பெரும்பாலும் இவ்விருவகை நுண்ணுயிரிகளையும் உண்டு வாழும். தாவர மிதவை உயிரிகளில் டையாட்டம் (diatoms) என்னும் நிலப் பச்சைப் பாசி இனங்களில் புளூரோ சிக்மா (Pleuro- sigma spp), கோசினோ டிஸ்கஸ் (Coscinodiacus spp) முதலியனவும் விலங்கின நுண்ணுயிரிகளில் பொரா மினிபெரன், கோப்பிபாட் சிப்பி நத்தை பல்சுணைப் புழு (Polychaetes) ஆகியவற்றின் இளம் உயிரிகளும் உணவாகின்றன. குறிப்புக் காரல் மட்டும் உணவுப் பழக்கத்தில் பிற காரல் மீன்களை விட மிகவும் வேறு படுகிறது. இவற்றின் உணவு பெரும்பாலும் சிறிய மீன்களான நெத்திலி (Stolephorus spp), சிறிய ஓட்டு டலி (crustacean), இளம் இறால் முதலியனவாகும். காரல் மீன்கள் உருவில் சிறியவையாக உள்ளமை பால். இவ வற்றை மீன்களாகக் கொள்