களைதல் வினைகள் 27
வடக்கம் (dormancy கொண்ட களை விதைகள் மேல் மண்ணிற்குக் கொண்டு வரப்பட்டுக் களைக் கொல்லிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. களைக்கொல்லிகளின் ஊடுருவிப்பாயும் திறன், களைச் செடிகளின் புறத்தன்மையையும். வேதித் தன்மையையும் பொறுத்தமைகிறது. தொடு நச்சுத் தன்மை கொண்ட களைக்கொல்லியின் திறன், களை களின் இனம், வயது, வளர்ச்சிப் பருவம், சூழ்நிலைக் காரணிகள், செடிகளில் நடைபெறும் வேதிமாற்றங் கள், வேதித்தன்மை முதலியவற்றைப் பொறுத்தமை யும். களைக்கொல்லிகளும் பயிர்களும். நெற்பயிரில் தோன்றும் களைகளைக் களைக்கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்த, வயலில் நீரை வடித்து ஸ்டாம் எஃப் 34 (stam F.34) களைக்கொல்லியில் 3-5 கிலோவை 700 லிட்டர் நீரில் கலந்து நாற்று நட்ட 3 முதல் 5 நாளில் தெளிக்க வேண்டும். சோளத்திற்குப் பயிர் முளைக்குமுன் தெளிக்கும் முறை மூலம் அட்ரசின் 400 கிராம் மருந்தை 700 லிட்டர் நீரில் கலந்து மண்ணின் மீது இடைவெளியின்றித் தெளிக்க வேண்டும். பருத்திப்பயிருக்கு. முளைக்கு முன் தெளிக்கும் முறை மூலம் டொக்--25 (Tok-E-25) 2 லிட்டர் மருந்தை 750 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். நிலக்கடலையில் முளைக்குமுன் தெளிப்பு முறை மூலம் லாஸ்ஸோ 8 லிட்டர் மருந்தை 600 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மேற்கூறிய களைக்கொல்லிகளைத் தவிர, பல்வேறு களைக்கொல்லிகள், பயிர் வகைகளுக்கும். மலைப் பயிர்களுக்கும், நீர்வாழ் களைகளுக்கும் பரிந்துரைக் கப்படுகின்றன. ஆகவே, கூலி ஆள் கிடைக்காத போதும், எந்திர முறைகளில் களை எடுக்க முடியாத சூழ்நிலையிலும் மலைப் பயிர்களுக்கும், மிகுதியாகக் களை முளைக்கும் இடங்களுக்கும் களைக்கொல்லி களைப் பயன்படுத்துதல் சிறந்தமுறையாகும். கு.பத்மநாபன் தூலோதி. U.S.Rao, Principles of weed Science, Oxford and IBH Publishing Company, New Delhi, 1983. களைதல் வினைகள் ஒரு மூலக்கூறில் உள்ள இரண்டு அணுக்கள் அல்லது தொகுதிகள் நீக்கப்பட்டு அதன் விளைவாக ரட் டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு உண்டாகு மாயின் அது சுளைதல் வினை (elimination reaction) எனப்படும். களைதல் வினையில் பொதுவாக H,O, கனைதல் வினைகள் 27 X, (ஹாலஜன்), HX (ஹைட்ரஜன் ஹாலைடு) போன்ற சிறிய மூலக்கூறுகள் நீக்கப்படுகின்றன. 4 - களைதல் வினை. களைதல் வினையில் நீக்கப் படும் மூலக்கூறுகளின் இரு தொகுதிகளும் அல்வது அணுக்களும் ஒரே கார்பன் அணுவிலிருந்து நீக்கப் படுமாயின் து 8-களைதல் வினை (a - elimination reaction) எனப்படும். எ.கா. குளோரோஃபார்ம் வீரியமிக்க காரத்துடன் சேரும்போது டைகுளோரோ கார்பீன் என்ற பொருள் இடைநிலைப் பொருளாக உண்டாகிறது. CHCI, OH
- CCl + HCI
டைகுளோ ரோகார்பீன் இவ்வினையில் நீக்கப்படும் மூலக்கூறு. HCI ஆகும். இவ்வினை இரு படிகளில் நிகழ்கிறது. HỒ+ HCCI, விரைவாக H₂O +CCCI, மெதுவாக C1- + : CCI, டைகுளோரோ கார்பீன் நிலைப்புத் தன்மை குறைந்தது. அது விரைவாக நீருடன் இணைந்து முதலில் கார்பன் மோனாக்சைடையும் பின் காரத் துடன் சேர்ந்து ஃபார்மேட் அயனியையும் உண்டாக்கு கிறது. குளோரோஃபார்மில் உள்ள எலெக்ட்ரான் ஈர்க்கும் குளோரின் அணுக்களால் அதில் உள்ள ஹைட்ரஜன். அமிலத் தன்மையைப் பெறுகிறது. கவே அது OH- அயனியால் நீக்கப்படுகிறது. கனநீரில் இவ்வினையை நிகழ்த்தும்போது கன ஹைட் ரஜன் குளோரோஃபார்மில் பரிமாற்றம் அடைகிறது. இதன் மூல முதல் படி மீள்வினை (reversible reac- tion) என அறியப்படுகிறது. வினைக் கலவையில் அல்க்கீன் சேர்க்கப்படும்போது வளையப்புரோ பேனின் பெறுதிகள். கிடைக்கின்றன. இதிலிருந்து டைகுளோரோகார்பீன் இரண்டாம் படியில் உண்டா வதை அறியலாம். நீ - கனைதல் வினை. களைதல் வினையில் நீக்கப் படும் மூலக்கூறுகளின் இரு தொகுதிகளும் அல்லது அணுக்களும் அடுத்தடுத்த கார்பன் அணுவிலிருந்து நீக்கப்படுமாயின் அது நீ - களைதல் விை னை (s-elimi- nation reaction) எனப்படும். எ.கா. ஆல்ஹகாலில் நீர் நீக்கப்படும் வினை. RCH,CH,OH அமிலம் → RCH=CH, + H,O