பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 காரீய உலோகவியல்‌

450 காரிய உலோகவியல் கலவையில் ஆன்ட்டிமனி கலக்கப்பட்டால், அது அக்கலவையின் அரிமான எதிர்ப்பைச் சிறிதளவு குறைக்கிறது. அச்சு உலோகக்கலவை (type metal). இவ் வலோகங்கள் 21-12% வெள்ளீயம், 21-25% ஆன்ட்டிமனி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆன்ட்டிமனி கலவையின் கடினத் தன்மையை அதிகரித்து, கலவை திண்மமாகும்போது சுருங்கு வதைக் (shrinkage) குறைக்கிறது. வெள்ளீயம் பாய்மத்தன்மையை மேம்படுத்துகிறது. இவ்விரு தனிமங்களும் உலோகக் கலவையின் உருகுநிலையைக் குறைக்கின்றன. சாதாரண வகை அச்சு உலோகக் கலவைகள் 238-246°C வெப்பநிலையில் உருகு கின்றன. தாங்கி உலோகங்கள். காரீயம் கலந்துள்ள உலோகங்கள் (பாபிட் உலோகங்கள்) 10-15% ஆன்ட்டிமனியையும், 5-10% வெள்ளீயத்தையும், சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்குச் சிறிதளவு ஆர்செனிக் அல்லது செம்பு ஆகியவற்றையும் கொண் டுள்ளன. வெள்ளீயம், ஆன்ட்டிமளி ஆகிய இரு தனிமங்களும் சேர்ந்து தேய்மான எதிர்ப்புக் கொண்ட சேர்மத்தை உருவாக்குகின்றன. இச்சேர்மம் சரக்கு வண்டிகளில் (freight-car) காணப்படும் சுழல் தாங்கி களில் (journal bearing) பெருமளவு பயன்படுகிறது. சில வார்ப்பு வகை வெண்கலங்களில் காரீயத்தின் அளவு 25%க்கு மேல் காணப்படும். சூட்டிணைப்பிகள் (solders). காரீயத்தை அடிப் படையாகக் கொண்ட பல சூட்டிணைப்புப் பொருள் கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட உலர் தன்மையைப் பெறுவதற்கு இச்சூட்டிணைப்பி கள் பெருமளவு வெள்ளீயத்தையும் தேர்ந்தெடுக்கப் பட்ட பிற பொருள்களில் சிறிதளவையும் கொண் டுள்ளன. பித்தளையுடனும் வெண்கலத்துடனும் 1-25% காரீயம் சேர்க்கப்படுவதால் அவற்றின் பொறிவினைப் பண்புகள் மேம்படுத்தப்படுகின்றன. க்காரியம் சில கட்டுமான எஃகுடனும் சேர்க்கப் படுகிறது. வா.அனுசுயா நூலோதி. Baumeister, A. Avallone, Baumeister III. Marks* standard Handbook for Mechanical Engineers, Eighth Edition, Mc Graw Hill Book Company, 1978- காரிய உலோகவியல் காரீயத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்தல், தூய்மைப்படுத்தல் மற்றும் செயல்முறைப்படுத்தல் (processing), தேவையான பண்புகளைப் பெறும் பொருட்டுப் பிற உலோகங்களுடன் கலத்தல் ஆகிய வற்றைப் பற்றி அறிவதே காரீய உலோகவியல் lead metallurgy) ஆகும். மிகவும் பழவமயான உலோகமாகிய காரீயம், அக்கால உலோகவியல். வேதியியல் வல்லுநர்களால் தங்கமாக மாற்றக்கூடிய உலோகம் என்று நம்பப்பட்டமையால் அனைவரா லும் கவரப்பட்டது. காரீயத் தாதுக்களுள் மிகவும் முக்கியமானது கலீனா (Pbs) ஆகும். பிற தாதுக்கள் செருசைட் (PbCO) அங்கிலிசைட் (PbSO) ஆகியவை. காரியத் தாதுக்கள் பெரும்பாலும் துத்தநாகத் தாதுவுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. கலீனாவில் பெரும் பான்மையாக வெள்ளியும், தங்கமும் கலந்துள்ளன. செறிவூட்டல். தாதுவிலிருந்து காரீயத்தைத் துத்தநாகம் மற்றும் இரும்புப் பொருள்களிலிருந்து பிரித்தெடுக்கவும், காரீயத்தின் அளவை உயர்த்தவும் உதவும் முதல் நிலையே செறிவூட்டல் (concentrating ) எனப்படும். இச்செயல் முறையில் தாது முதலில் நொறுக்கப்பட்டு, பின்னர் ஈரமான நிலையில் அரைக் கப்படுகிறது. இதனால் விளைபொருள் மூலக்கூறு களின் அளவு 75% குறைந்துவிடுகிறது. கிடைக்கும் சேற்றுடன் (slurry)சில வினைப்பொருள்கள் சேர்க்கப் பட்டுத் தேவையான அளவு காரத்தன்மை பெறப் படுகிறது. மேலும் இச்சேற்றுடன் மிதக்கும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுக் காரீயம் நுரைவடிவில் பெறப்படுகிறது. பின்னர் இது வடிகட்டி நீக்கப்படு கிறது. இவ்வினையில் பயன்படும் வினைப்பொருள்கள் சோடியம் கார்பனேட், சுண்ணாம்பு, காப்பர் சல்ஃ பேட், பைன் எண்ணெய், கிரைசிலிக் அமிலம், சாந் தேட், சோடியம் சையனைடு ஆகியவை ஆகும். இவற்றின் எடை தாதுவின். எடையில் 0.25-2.5 கி மெட்ரிக் டன் வரை இருக்கும். காரிய மிதப்புச் செயல்முறையில் துத்தநாகப் பொருள்கள். இரும்புச் சேர்மங்கள், தாதுவுடன் கலந்து காணப்படும் பிற நிலப்பொருள்கள் (earth components) ஆகியவை மிதக்காமல் அடியில் தங்கு கின்றன. பின்னர் இவை பிரித்தெடுக்கப்படுகின்றன. செம்பு, வெள்ளி, தங்கம் போன்றவை அத்தாதுவில் இருந்தால் அவை காரீயத்துடனே நீக்கப்பட்டுப் பின்னர் அவை காரீயத்திலிருந்து தூய்மையாக்கப்படு கின்றன. எனினும் செம்பு ஓரளவு மிகுதியாக இருந் தால் அது சிறப்பு மிதப்பு முறை மூலம் பிரித்தெடுக்கப் படுகிறது. இத்தகைய செறிவூட்டல் முறைப்படி கிடைக்கும் காரீயச் செறிவிலுள்ள காரீய உலோகத் தின் அளவு 70% ஆகும். உருக்கிப் பிரித்தெடுத்தல். உருக்கிப் பிரித்தெடுக் கும் (smelting) செயல்பாட்டிற்கு முன்னர் காரீயச் செறிவு உயர்வகைத் தாதுவுடனோ,தூசி