பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரீய உலோகவியல்‌ 451

காரிய உலோகவியல் 45/ சுண்ணாம்புப் பாறை போன்றவற்றுட னோ அடிக் கடி கலக்கப்படுகிறது. இப்பொருள்கள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டப்படுவதால் சீரான முறையில் உருக்கிப் பிரித்தெடுக்க இயலும். பின்னர் இது சிட்டங் கட்டப்படுகிறது. சிட்டங்கட்டுதலால் (sintered) பெருப்பான்மையான கந்தகம் நீக்கப்படுகி றது. பொருள்கள் ஊதுலையிலிருந்து வெளியேறாமல் இருக்க இவை பெரிய அளவுகளில் வெப்பத் திரட்சி செய்யப்படுகின்றன. சிட்டங்கட்டும் எந்திரத்தில், அசையும் தட்டுகள் (pallets) கொண்ட சங்கிலித் தொடர் அமைப்பு உள்ளது. இதன் மேல் தாது உருண்டை வைக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. இத்தாதுவின் ஊடாகக் காற்றுச் செலுத்தப்படுகிறது. காற்று கந்தகத்தை எரித்து கந்தக டைஆக் சைடை உருவாக்குகிறது. அதேசமயம் அக்காற்று, பிற உலோகத்தனிமங்களையும் எரித்து அவற்றின் ஆக்சைடுகளை உருவாக்குகிறது. சிட்டங்கட்டிய பின் இதன் எடையில் 9% அள விற்குக் கல்கரி வடிவில் இருக்கும் கார்பனுடன் சேர்த்து அத்தாது ஊதுலையின் மேலிருந்து செலுத் தப்படுகிறது. இவ்வூதுலை 7.11 மீ உயரமும் 1.68 மீ விட்டமும் கொண்டதாகும். செலுத்தப்படும் கல்கரி தாதுப்பொருளை எரிக்க உதவும் எரி பொருளையும், காரீய ஆக்சைடுடன் வினைபுரிந்து உலோகக் காரீயத்தை உண்டாக்கும் ஒடுக்க வாயு வையும் (reducing gas) கொடுக்கிறது. இவ்வாறு தாதுப்பொருள் கலவை ஊதுலையின் மேற்புற மிருந்து கீழ்நோக்கி வரும்போது, உருகிய நிலையில் உள்ள உலோகம் கீழ்ப் பகுதியில் கிடைக்கிறது. அங்கிருந்து தனியே பிரிக்கப்பட்டு மேலும் பதப் படுத்தப்படுகிறது. ஊதுலையில் எஞ்சியுள்ள பொருள் கள் கசடாகக் காரீயத்தின் மேல் மிதக்கின்றன. ஊதுலையின் மேல் பகுதியிலிருந்தே இக்கசடு நீக்கப் படுகிறது. பழங்கால முறையில் இடைவிட்டு நீக்கப் பட்ட கசடு தற்போது தொடர்ச்சியாக நீக்கப் படுகிறது. காரீயக் கட்டி (bullion) என்பது வெள்ளி, தங்கம். செம்பு. பிஸ்மத், ஆன்ட்டிமனி, ஆர்செனிக், வெள்ளீயம், தாதுவில் சிறிய அளவில் கலந்திருக்கும் உலோகங்கள் ஆகியவற்றைக் கொண்டது. கசடு. துத்தநாகம், இரும்பு. சிலிக்கா, சுண்ணாம்பு மற்றும் உலோகக் கலவையுள்ள பாறைப் பகுதி ஆகிய வற்றைக் கொண்டது. தூசி, கேட்மியம், இண்டி யம், காரீயம். துத்தநாகம் ஆகியவற்றையும் கொண்டது. ஊதுலையில் நாளொன்றுக்கு 750டன் சிட்டங்கட்டப் பட்ட தாதுப் பொருள்செலுத்தப்பட்டு அதிலிருந்து 250 டன் காரியக் கட்டி பிரித் தெடுக்கப்படுகிறது. தூய்மையாக்கல். தூய்மையற்ற உலோகக்கட்டி, கலன்களில் இடப்பட்டு 350°C அளவிற்குக் குளிர் விக்கப்படுகிறது. இந்த உலோகக் கழிவில் (dross) க.8 29அ பெருமளவு காரீயமும், தாதுவில் இருந்த செம்பு முழுவதும் உள்ளன. காரீயத்தின் ருகுநிலைக்குச் சற்று மிகுதியான வெப்பநிலையில், செம்பின் கரை திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால் குறைந்த வெப்பநிலையில் பெரும்பான்மையான செம்பு கலனில் தனியாகப் பிரிகிறது. பின்னர் செம்பு தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. எஞ்சி யுள்ள செம்பு, கந்தகத்தைக் கலனிலிட்டுக் கலக்கு வதன் மூலம் நீக்கப்படுகிறது. இந்நிலையில் யத்தில் 0.01% அளவே செம்பு கலந்திருக்கும். இக் காரீயத்தில் வெள்ளீயம் குறிப்பிடத்தக்க அளவு கலந் திருப்பின் இக்காரீயக் கட்டி 600 C க்கு மீண்டும் சூடாக்கப்படுகிறது. பின்னர் இதன் ஊடாகக்காற்றுச் செலுத்தப்பட்டு வெள்ளீயம் நீக்கப்படுகிறது. பின்னர் இக்காரீயக் கட்டி தூய்மையாக்கப்படுகிறது. காரி கசடி ஊதுலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் லிருந்து துத்தநாகமும். எஞ்சிய காரீயமும் ஆவி யாக்கப்படுகின்றன. பயனற்ற கசடு நீக்கப்படுகிறது. சிட்டங்கட்டும் பகுதியிலிருந்தும் ஊதுலையிலிருந்தும் தூசி, பைகள் அல்லது வடிகட்டிகளில் சேகரிக்கப் படுகிறது. ஓரளவிற்கு வெள்ளி, தங்கம் மற்றும் பிற பொருள்களைக் கொண்ட செம்பு நீக்கப்பட்ட காரீயக் கட்டி. இரண்டு முக்கிய செயல்முறை களுள் ஒன்றின் அடிப்படையில் மீதூய்மை செய்யப் படுகிறது. உயர்வெப்ப உலோகவியல் தொழில் நுட்பத்தின்படியே பெருமளவில் தூய்மையாக்கப்படு கிறது.20% அளவிற்கும் குறைவான மின் முறை மேற்கொள்ளப்படுகிறது. காரீயக் கட்டியில் பிஸ்மத் தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளபோது மின் முறைப்படியே தூய்மையாக்கப்படுகிறது. உயர்வெப்ப உலோகவியல் முறையில் முதலில் ஆர்செனிக், ஆன்ட்டிமனி, வெள்ளீயம் ஆகியவை நீக்கப்பட்டு உலோகம் இளக்கப்படுகிறது. இது, 700- 750°C வெப்பநிலையில், இத்தனிமங்களை எதிர் அனல் உலையில் (reverberatory furnace) காற்றால் ஆக்சிஜனேற்றம் செய்வதால் நிகழ்கிறது. உயர் அளவு ஆன்ட்டிமனி மற்றும் காரீயம் ஆகியவற்றைக் கொண்ட கசடு கல்கரியால் குறைக்கப்படுகிறது. தன் விளைவாகக் கிடைக்கும் ஆன்ட்டிமனி கலந்த காரிய உலோகக்கலவை விற்பனை செய்யப் படுகிறது. ஹாரீஸ் செயல்முறையும் மாசுகளை நீக்கப் பெருமளவு பயன்படுகிறது. இம்முறையில் நீர்ம நிலையில் உள்ள காரீய உலோகம் உருகிய கார சோடா உருகிய சோடியம் நைட்ரேட் ஆகியவற்றின் வழியாகத் தெளிக்கப்படுகிறது. சோடியம் நைட்ரேட் ஆர்செனிக், ஆன்ட்டிமனி, வெள்ளீயம் ஆகியவற்றை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து அவற்றைச் சோடிய உப்புகளாக மாற்றுகிறது. பின்னர் ஆவை நீக்கப்படுகின்றன.