454 கால்சியம்
454 கால்சியம் வாய்பாடு தாது சலவைக்கல் (marble CaCO சுண்ணாம்புக்கல் CaCO3 ஐஸ்லாந்துப் படிகம் CaCO, கால்சைட் CaCO₂ டோலமைட் ஃபுளோர்ஸ்பார் CaF, கால்சியம் சல்ஃபேட் (நீரிலி, CaSO4 ஜிப்சம் CaSO,2H,O அப்படைட் Ca. (PO), F CaMg(SiO,), கல்நார் கு MgCO;CaCO, பிரித்தெடுத்தல். தொழில் முறையில் கால்சியம் குளோரைடை மின்னாற்பகுத்துக் கால்சியம் உலோ கம் பெறப்படுகிறது. கால்சியம் குளோரைடில் 16% கால்சியம் ஃபுளுரைடும் சேர்த்துக் கொள்ளப்படும். கால்சியம் குளோரைடை இரு வழிகளில் பெறலாம். கார்பனேட் தாதுவுடன் ஹைட்ரோ குளோரிக் அமி லத்தை வினைபுரியச் செய்தும், சால்வே முறையில் கழிவுப் பொருள் மூலமும் கால்சியத்தைப் பெறலாம். உட்புறம் கிராஃபைட் பூச்சுப் பூசப்பட்ட கலனில் மின்னாற்பகுப்பு நடைபெறுகிறது. இக்கலனை நேர் மின் முனையாகவும், நீரால் குளிர்விக்கப்பட்ட இரும் புத் தண்டை எதிர் மின்முனையாகவும் கொண்டு மின்னாற்பகுப்புச் செய்யும்போது கால்சியம் எதிர் மின்முனையில் ப்டிகிறது. இம்முறையில் தயாரிக்கப் படும் கால்சியம் செந்தூய்மையாக இருக்காது. எனவே வெற்றிடத்தில் 300°C இல் பதங்கமாதல் முறையில் தூய்மைப்படுத்த வேண்டும். சில நேரங் களில் சுண்ணாம்புடன் அலுமினியத்தைச் சேர்த்துக் காற்றில்லாச் சூழ்நிலையில் ஒடுக்கி, வடித்துப் பிரித் தும் கால்சியம் பெறப்படுகிறது. இயற்பண்புகள், கால்சியம், வெள்ளி போன்ற வெண்மையான பளபளப்பான உலோகம். காற்றுப் படும்போது இதன் நிறம் ஆக்சிஜனேற்றத்தால் மங்கு கிறது. இது சோடியம் உலோகத்தைவிடக் கடின மானதும், அலுமினியத்தை விட மென்மையானதும் ஆகும். கார உலோகங்களைப் போல் இது உட லில் பட்டால் தீக்காயங்களை உண்டாக்குவதில்லை. ஏனைய கார, காரமண் உலோகங்களைப்போல் அல் லாமல் இது மிகு வினைபுரியும் ஆற்றல் பெற்றதன்று. தூய கால்சியம் உலோகத்தைத் தகடாகவும், கம்பி யாகவும் மாற்றலாம். காற்றில் திறந்து வைக்கும் போது இவ்வுலோகத்தின் மேல் ஆக்சைடு, நைட் ரைடு படலம் படிகிறது. இது இவ்வுலோகம் மீண்டும் காற்றினால் தாக்கப்படுவதைத் தடுக்கிறது. உயர் வெப்பநிலையில் இது எரிந்து பெரும்பாலும் நைட் ரைடைத் தருகிறது. நீருடனும், அமிலங்களுட டனும் எளிதில் வினைபுரிந்து ஹைட்ரஜனை வெளிவிடுகிறது. இதில் அம்மோனியாவும், ஹைட்ரோகார்பன்களும் ம் மாசாகக் கலந்துள்ளன. தன் சில இயற்பியல் மாறிலிகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பண்புகள் அணு எண் அணு எடை ஐசோடோப்புகள் படிக அமைப்பு ணைதிறன் அயனி ஆரம்,க் கொதிநிலை C உருகுநிலை , 'C அடர்த்தி,கீ க.செ.மீ (20°C. இல்) ஆவியாதலின் உள்ளுறை வெப்பம். கொதிநிலையில், கி. ஜுல் கி. அணு எலெக்ட்ரான் அமைப்பு மதிப்பு 20 40.08 40,42,43,44, 46,48 முக மையக் கன சதுரம் (FCC) 2 0.99 1487<?> 810 (?) 1.55 399 2 8,8,2 இவ்வுலோகம், அலுமினியம் உலோகக் கலவை களில் உலோகக் கலவைக்காரணியாகவும், பிஸ்மத்தி லிருந்து காரியத்தைப் பிரித்தெடுக்கவும், இரும்பில் கிராஃபைட் கார்பனின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எஃகு உற்பத்தியில் ஆக்சிஜன் குறைப்பி யாகவும் குரோமியம், தோரியம், சிர்கோனியம், யுரேனியம் போன்ற உலோகங்கள் தயாரிப்பில் ஒடுக்கியாகவும், நைட்ரஜன் ஆர்கான் கலவையைத் தனிப்படுத்த உதவும் பொருளாகவும் இது உதவு கிறது. மக்னீஷியம் உலோகக் கலவையுடன் (0.25%) இதைச் சேர்க்கும்போது அக்கலவை எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மையைக் குறைத்து, அதன் வெப்ப ஏற்புத் திறனை அதிகரிக்கச் செய் கிறது. உருகிய பேரியம், கால்சியம் குளோரைடுகளை உருகிய காரீயம் வைக்கப்பட்டிருக்கும் கலனிலிட்டு மின்னாற்பகுக்கும்போது கால்சியம், பேரியம், காரீயம் உலோகக் கலவைகள் கிடைக்கின்றன. கால் சியத்தின் வளிமங்களை எளிதில் ஈர்க்கும் பண்பால் வெற்றிடக் குழாயில் எஞ்சியிருக்கும் ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வளிமங்களை உறிஞ்சி நீக்க உதவும் வளிம நீக்கியாக (getter) இது பயன்படு கி றது. r