பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 கால்சியம்‌

456 கால்சியம் ஹமி ஹைட்ரேட் டைஹைட்ரேட்டாக மாறு கிறது. அப்போது குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகி விரிவடைகிறது. இது கலைப்பொருள்கள் தயாரிப்பிலும், ஒட்டுப்பசையிலும் பயன்படுகிறது. பன் சிலிசைடு, கார்பைடு. கால்சியம், சிலிக்கா, கார் போன்றவற்றைச் சேர்த்து மின் உலையில் ஒடுக்கும்போது கால்சியம் சிலிசைடு ( CaSi) கிடைக் கிறது. இது எஃகு பொருள்களில் ஆக்சிஜன் குறைப்பி பயன்படுகிறது ஆக்சிஜனுடன் சேர்த்துக் யாகப் இதன் கால்சியம் சிலிக்கேட்டைக் கொடுக்கிறது. உருகுநிலை மிகக்குறைவு. கால்சியம் கார்பைடு ஓர் அசெட்டிலைடு ; இது அயனி அமைப்பைக் ((C=C)*-} து கொண்டுள்ளது. நீராற் பகுக்கும்போது அசெட்டில் னைக் கொடுக்கிறது. அசெட்டிலீன் முக்கிய கரிம பயன்படுகிறது. வேதிப் பொருள்கள் தயாரிக்கப் உயர் வெப்பத்தால் து வளிமண்டல நைட்ரஜனை உறிஞ்சிக் கால்சியம் சயனமைடைக் கொடுக்கிறது. கால்சியம் சயனமைடு யூரியா தயாரிக்கத் தேவைப் படும் மூலப்பொருளாகும். பாஸ்ஃபேட்டுகள். கால்சியம் பாஸ்ஃபேட்டுகள் பெரும்பாலும் உரங்களாகப் பயன்படுகின்றன. ட்ரை கால்சியம் ஆர்த்தோபாஸ்ஃபேட் (Ca,(PO),) இயற்கையில் அப்படைட் கனிமமாகக் கிடைக்கிறது. காரக் கரைசலில் கரைந்துள்ள பாஸ்ஃபேட்டை, கால்சியம் உப்புடன் சேர்க்கும்போது இது உண்டா கிறது. 2Na, HPO, + 2NH,OH + 2CaC1, 4NaCI + 2NH,CI + Ca,(PO,), + 2H,O கால்சியம் உப்பின் அமிலக் கரைசலைச் சோடியம் பாஸ்ஃபேட்டுடன் சேர்த்து டை கால்சியம் ஆர்த்தோ பாஸ்ஃபேட் பெறப்படுகிறது. இது நீரில் கரையாதது. மோனோ கால்சியம் ஆர்த்தோ பாஸ்ஃபேட் பெற ட்ரைகால்சியம் பாஸ்ஃபேட்டுடன் பாஸ்ஃபோரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. Ca,(PO,), +4H PO, 3 Ca(H,PO,), இது பிற பாஸ்ஃபேட்டுகள் போலன்றி நீரில் கரை கிறது. தூய கால்சியம் பாஸ்ஃபேட் பற்பசைகளில் பயன்படுகிறது. கால்சியம் சூப்பர் பாஸ்ஃபேட் ((Ca (H,PO) H,O + 2(CaS; 2H,0)) ஒரு பாஸ்ஃபேட் உரமாகும். இது கால்சியம் ஆர்த்தோபாஸ்ஃபேட்டும் ஜிப்சமும் கலந்த கலவையாகும். தாமஸ் கசடு ஒரு ட்ரை கால்சியம் ஃபாஸ்ஃபேட் (Caa{PO,),), கால்சியம் சிவிக் கேட் (CaSiO) ஆகியவை கலந்த இரட்டை உப்பா கும். இது எஃகு உற்பத்தியின்போது கசடாகக் கிடைக்கிறது. பிற சேர்மங்கள். கால்சியம் சல்ஃபேட்டைக் கார்ப னுடன் சேர்த்து ஒடுக்கிப் பெறப்படும் கால்சியம் சல்ஃனபடு நிறமும் மணமும் அற்ற பொடியாகும். துத்தநாக சல்ஃபைடைப் போலவே நின்றொளிரும் தன்மை வாய்ந்தது. தூய கால்சியம் சல்ஃபைடிற்கு இப்பண்பு இல்லை. எனவே கால்சியம் சல்ஃபைடுடன் பிஸ்மத், மாங்கனிஸ், செம்பு, டங்ஸ்ட்டன் போன்ற மாசு கலந்திருந்தால் மட்டும் நின்றொளிர்கிறது. கால்சியம் சல்ஃபைடு ஒளி உமிழும் பூச்சுகளைத் தயாரிக்கப் பயனாகிறது. இது மயிரை நீக்கும் தன்மை வாய்ந்தது. டைஎத்தில் துத்தநாகத்துடன் கேர்ந்து கால்சியம் கலவை அல்க்கைல் பெறுதிகளைக் கொடுக்கிறது. இப்பொருள் மிகு தன்மையுடையது ஃபீனைல் வினைபுரியும் அயோடைடுடன் கால்சியம் உலோகம் ஈதர் கரைசலில் வினைபுரிந்து கால்சியம் கிரிக்னார்டு வினைப்பொருளைத் தரு கிறது. ஈதர் Ca + C,H,IC,H,Cal பகுப்பாய்வு. கால்சியம் உப்புகளைத் தீப்பிழம்பில் சிறிது காட்டும்போது செங்கல் சிவப்பு நிறச் சுடர் உண்டாகிறது. இந்நிறத்தைக் கொண்டு கால்சியம் இருப்பதை அறியலாம். கால்சியம் உப்புடன் அம் மோனியம் குளோரைடு, அம்மோனியம் ஹைட்ராக் சைடு, அம்மோனியம் ஆக்சலேட் ஆகியவற்றைச் சேர்க்கும்போது வெண்ணிற வீழ்படிவு உண்டா கிறது. பருமனறி பகுப்பாய்வில் கால்சியத்தை. கால்சியம் உப்பாக வீழ்படியச் செய்து அமிலத்துடன் சேர்த்துத் திறன் தெரிந்த பொட்டாசியம் பெர் மாங்கனேட் கரைசலுடன் தரம் பார்க்க வேண்டும். எடையறி பகுப்பாய்வில் கால்சியம் ஆக்சலேட்டின் வீழ்படிவைச் சூடுபடுத்திக் கிடைக்கும் கால்சியம் ஆக்சைடின் எடையிலிருந்து கண்டுபிடிக்க வேண்டும். காரை. நீர்த்த சுண்ணாம்பு, மணல், நீர் ஆகிய வற்றைச் சேர்த்துக் கிடைக்கும் சாந்து போன்ற பொருள் காரையாகும். இது கட்டிடங்கள் கட்ட வும் மேற்பூச்சுப் பூசவும் பயன்படுகிறது. இதைக் கல்லின்மேல் பூசியவுடன் நீர் படிப்படியாக ஆவியாகி, கடினத் தன்மையடைந்து இறுகுகிறது. அப்போது கார்பன் டைஆக்சைடைக் கவர்ந்து கால்சியம் கார்ப னேட் உண்டாகிறது. சலவைத் தூள் உலர் நீர்த்த சுண்ணாம்பில் குளோரின் வளிமத்தைச் செலுத்துவதால் சலவைத் தூள் உண்டாகிறது. Ca(OH), + Cl, -→ CaOCl + H,O + இது குளோரின் நெடியுள்ள பொடியாகும். ஈரம், கார்பன் டைஆக்சைடு, அமிலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுக் குளோரினை வெளியேற்றுகிறது. சிறிதளவே கரைகிறது. இது ஒரு சிறந்த ஆக்சிஜ