கால்சிலைட் 457
கால்சிலைட் 457 னேற்றியாகும். காகிதம். பருத்தி ஆடை, துணி போன்றவற்றை வெளுப்பதற்கும் தொற்று நீக்கவும், ஆக்சிஜன், குளோரின், குளோரோஃபார்ம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள குளோரின் அளவை அயோடிமெட்ரி பகுப்பாய்வினால் அறியலாம். பருமனறி த. தெய்வீகன் நூலோதி. F. Albert Cotton and Geoffrey Wilkinson, Advanced Inorganic Chemistry, Sixth Edition, John Wiley and Sons Inc., New York, 1984. கால்சியம் ஆக்சலேட் கல் உடலின் சில உறுப்புகளில் (சிறுநீரக மண்டலம். பித்த நீர்ப் பை போன்றவை ) கற்கள் தோன்றக் கூடும். வைட்டமின் A குறைபாட்டாலும், சிறுநீர் அடர்த்தியின் மாற்றங்களாலும், குறைந்த அளவில் சிறுநீர் பிரிவதாலும், சிறுநீரக நுண்ணுயிர்த் தாக்கத் தாலும்,படுக்கையிலேயே நீண்ட நாள் இருப்ப தாலும் சிறுநீரக மண்டலத்தில் பலவகையான கற்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்று கால்சியம் ஆக்சலேட்டாகும். இது முசுக்கட்டைக் கல் (mulberry stone) எனப்படும். இந்தக் கல்லில் முள் போன்ற துருத்திகள் காணப்படுகின்றன. இதனால் சிறுநீரில் இரத்தம் வெளிப்படுகிறது. உறைந்த, மாற்றமடைந்த இரத்தம், கல்லின் பரப்பில் படிகிறது. ஆக்சலேட் கல், பொதுவாகத் தனியாகவே காணப்படுகிறது. எக்ஸ் கதிர்ப்படங்களில் நல்ல நிழலைக் காட்டுவதால் நோய் இன்னதென்று அறிவது எளிதாகிறது. கல் சிறியதாக இருந்த போதும், அதன் முரட்டுத் முள்கொண்ட பரப்பால், சில அறிகுறி களைத் தோற்றுவிக்கின்றது. கடினமான கல்லான கால்சிய ஆக்சலைட்டை உடைத்துப் பார்த்தால் வட்டமான வரிகள் காணப்படும். தனமான -மு.கி.பழனியப்பன் Con. David Ritchie et.al., Bailes & Love's short Practice of surgery, 17th Edition, ELBS, London. 1979. கால்சிலைட் அரிய கனிமமான கால்சிலைட் (kalsilite) 1942 ஆம் ஆண்டு தென்மேற்கு உகாண்டா நாட்டில் மாஃப்ரூ என்னுமிடத்தில் உருவான எரிமலைப் பாறைகளில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொட்டாசியம் அலுமினியம் சிலிகேட்டின் மூன்று உருவ வடிவங்களில் டெக்டோசிலிகேட் நிலைகளில் உள்ள பல ஒன்றாகும். இக்கனிமம் வகையைச் சேர்ந்ததாகும். இக்கனிமத்தை எக்ஸ் கதிர் ஆய்வில் நோக்கும்போது, அறுகோண வடில் அமைப்பைப் பெற்றுள்ளமையைக் காணலாம். இக்கனிமத்தை நுண்ணோக்கியின் மூலமாக ஆராயும்போது. இக்கனிமத்திற்கும், ஃபெல்ஸ்ப தாய்ட்ஸ் என்னும் கனிமத் தொகுதியிலுள்ள நெஃபிலீன் என்னும் கனிமத்திற்கும் வேறுபாடு எதுவுமின்றி, ஒரே வகையா ஒளியியல் பண்பு களைக் கொண்டுள்ளமையை அறியலாம். நெஃபிலீன் கனிமம் குறைந்த ஒளி விலகல் எண் கொண்டுள்ளது. மூலமாக, நெஃபிலீன் கனிமத்தையும்,கால் சிலைட் கனிமத்தையும் பிரித்தறியலாம். இவ்விரு கனிமங்களுமே எதிர் ஒளிச் சுழற்றும்(-) பண்பைப் பெற்றுள்ளன. இந்த இரு கனிமங்களின் அமைப்பு அல்லது தோற்றம் ஒரே மாதிரியாக இருந்தாலும், இதன் படிசு வகுப்பு வெவ்வேறானது. தன் ஆனால் கால்சிலைட் அமைந்துள்ள பாறைகள், கரிய நிறமுள்ள நுண்ணிய துகள்களைக் கொண்டுள்ளன. இதில் பெரிய ஆலிவின் படிகங்கள் பொதிந்துள்ளன. மேலும் பச்சை நிற மஞ்சள் வரிகளும் அமைந் துள்ளன. இவ்வரிகள் வடயாப்சைட், கால்சைட், கால்சிலைட் கனிமங்கள் கலந்த நிலையில் காணப் படும். இக்கனிமத்தின் வேதியியல் உட்கூறு KAI SÍO, ஆகும். இது அறுகோணப் படிகத் தொகுதியைச் சேர்ந்தது. இதன் மூன்று ஒளி விலகல் எண்கள், செவ்விணை வடிவப் பக்கத்தில் 3.12(100) ஆகவும், 2.58(5), மற்றும் 3.97 (45) ஆகவும் உள்ளன. இக்கனிமத்தின் ஒளியியல் எண்ண-1-538-1.543 ஆகவும்,1.532-1.537ஆகவும் உள்ளன. இதன் கடினத்தன்மை 6 ஆகும். அடர்த்தி 2.59- 2.625 ஆகும். இக்கனிமத்தின் கனிமப் பிளவு (1070) பக்கத்தில் தெளிவாகவும்,அடியிணைப் பக்கத்தில் (0001) தெளிவற்றும் காணப்படும். இக்கனிமம் குறைவளை முறிவு உடையது. எளிதில் உடையும் தன்மை கொண்டது. கால்சிலைட் இயற்கையில் பெரிய உருவமாகவும், இதன் அணுக்கள் நெருக்க மான நிலையிலும் காணப்படும். இக்கனிமம் நிறமற் றும், வெண்மையாகவும், சாம்பல் நிறத்திலும் காணப் படுகிறது. இக்கனிமத்தில் ஒளி ஊடுருவும் தன்மை குறைந்தே காணப்படுகிறது. இதன் மிளிர்வானது ஒளிர்வான எண்ணெய்ப்படல மிளிர்வை ஒத்துள்ளது. கால்சிலைட் நெப்லினுடன் திண்மக் கரைசலா கிறது. கால்சிலைட் திண்மக் கரைசலில் ஃபெரிக் அலுமினிய இடப்பெயர்ச்சி மிகுதியாயும் சிலிக்கான் அடக்கம் சுருங்கியும் காணப்படும். பெரும்பாலான கால்சிலைட் இயைபில் உலோக நேர்மின் அயனிகள் குறைவுற்றுள்ளன. கால்சிலைட் 850°C இல்