கால்நடை 461
வெளி அடுக்கு, உள் அடுக்கு என ஒற்றை வரிசையில் செல்கள் அமைந்த இரு அடுக்குகளைக் கொண்டிருக் கும். இதன் ஒரு பகுதியில் செல்கள் செறிவாக அமைந்துள்ளன. இப் பகுதியில் இருந்துதான் கரு வளர்ச்சி அடைகிறது. இது அண்டம் அல்லது பிண்டம் எனப்படுகிறது. குழிந்த பந்து போன்ற பகுதியின் வெளி அடுக்கில் இருந்துதான் நடு நரம்பு மண்டலத்தின் பகுதிகள், தோல் பகுதிகள், மயிர், குளம்புகள், கொம்புகள், பால் சுரப்பிகள், வியர்வை மற்றும் எண்ணெய்ச் சுரப்பிகள், கண், காது, மூக்குப் போன்ற சிறப்பு உறுப்புப் பகுதிகள், நாக்கில் உள்ள சுவை அரும்புகள் போன்றவை உருவாகின்றன. இதன் உள் அடுக்கி லிருந்து கல்லீரல் கணையம் ஆகியவை உருவாகின் றன. மேலும் மூச்சுப்பை, கருப்பை, உணவு மண்டலம் போன்றவற்றின் உள் அடுக்குகளும், செரிமானச் சுரப்பிகளும் இதிலிருந்துதான் உருவாகின்றன. இந்த உள் மற்றும் வெளி அடுக்குகளுக்கு இடையில் ஒரு வரிசைச் செல்களாலான மேலும் ஒரு மைய அடுக்கு உருவாகிறது. இந்த அடுக்கிலிருந்துதான் எலும்பு கள், தசைகள், இரத்த ஓட்ட மண்டல உறுப்புகள். மண்ணீரல் இனப்பெருக்க உறுப்புகள், சிறுநீரக உறுப்புகள் உருவாகின்றன. கருவின் ஏழாம் வார வளர்ச்சி வரை அதற்குத் தேவையான உணவு தாயின் கருப்பையிலிருந்து சுரக்கப்படும் கருப்பைப்பாலில் (uterine milk) இருந்து பெறப்படுகிறது. இந்தக் கருப்பைப் பாலின் அளவு குறைந்து நிற்கும்போது வளரும் கருவிற்குத் தேவைப் படும் உணவு தாயின் இரத்த ஓட்டத்திலிருந்து கருப்பையின் இரத்தக் குழாய்கள் வழியாக நஞ்சுக் கொடி(placenta) மற்றும் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளின் மூலம் பெறப்படுகிறது. சவ்வும், கருவைச் சுற்றி மூன்று சவ்வுகள் சவ்வுகள் உருவாகிக் கருவைப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு கருவுடன் கொப்பூழ் வழியாக இணைக்கப்படுகிறது. கொப்பூழ்க்கொடி (umblical cord) மூலம் தாயின் இரத்த ஓட்டம் கருவிற்குக் கிடைக்கிறது. இந்தக் கொப்பூழ்க்கொடியில் உள்ள இரத்தக் குழாய்களின் வழியாகக் கருவிற்குத் தாயிடமிருந்து உயிர்ச் சத்துக் கள் கொடுக்கப்பட்டு, கருவின் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன. எஸ். ராம்பிரசாத் கலப்பினம். கால்நடைகளில் கலப்பினச் சேர்க்கை நடைபெறுவதால் சராசரியாக ஒரு நாளைக்கு 2 லிட்டர் மட்டுமே தந்த பசுவின், பால் கொடுக்கும் திறன் மிகுதியாகிறது. இரண்டு லிட்டர் பால் தரும் பசுவைக் கலப்பினத்தின் மூலம் 10 விட்டர் தரும் அளவிற்கு உயர்த்த முடியும். இம்முறையில் கலப்பினம் பெற்ற பசுவின் முதல் வழித்தோன்றலும் அடுத்து வரும் வழித்தோன்றலும் 6 - 8 லிட்டர் கால்நடை 461 பேணு வரை பால் தருவதற்கும் இதே கலப்பின முறை பயன்படக்கூடும். எனவே தன் மூலம் குறைந்த செலவில் நிறைந்த பயனைப்பெறக்கலப்பினமே உதவி புரிகிறது. 2 லிட்டர் தரும் பசுவைப் பேணுவது போலவே 6 லிட்டர் பால் தரும் பசுவையும் வதில் தீமையோ, இழப்போ ஏற்பட வழி இல்லை. இவ்வாறே பிற பயன்களையும் எடுத்துக்காட்டாக முட்டை உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, மயிர்வளர்ச்சி போன்றவற்றையும் கலப்பினமாக்கல் மூலம் அதிகரிக் கலாம். கலப்பினத்தால் சில தீமைகளும் உண்டு. ஆனால் அவற்றின் அளவு குறைவேயாகும். காட்டாக, கலப் பினத்தால் பரம்பரைப் பண்பு மாறுபடும்போது அதன் இயற்கைப் பண்பும் ஓரளவு மாறுபடும். கால் நடைகளில் நோய் எதிர்ப்பாற்றல், சூழ்நிலை மாறு பாடு தாங்கும் ஆற்றல் போன்றவை வேறுபடலாம். ஆனால் கலப்பினத்தில் உள்ள நன்மைகளுடன் இவற்றை ஒப்பிடும்போது தீமைகள் குறைவாகும். ந. சண்முகம் பராமரிப்பு. கால்நடைகளை நோயின்றிப் பேணு தல் கால்நடைப் பராமரிப்பு எனப்படும். சிறந்த பரா மரிப்பின் மூலம் நிலையான வருவாய் பெறலாம். கன்று கருவறையில் இருக்கும்போது பசுவை நன்கு பராமரிக்கவேண்டும். பசு கருவுற்று இருக்கும்போது கன்று ஈனுவதற்குமுன் 60-70 நாள்கள் ஓய்வு அளித் தல் வேண்டும். அதாவது பால் கறவாமல் இருக்க வேண்டும். பசுவிற்கு ஓய்வு அளிக்காவிட்டால் கன்று ஈன்றவுடன் உடல்நலமும், பால் சுரக்கும் திறனும் பாதிக்கப்படும். கருவுற்றிருக்கும்போது சரிவிகித கலப்புணவும் பசுந்தீவனங்களும் அளிக்க வேண்டும். தவறினால் வைட்டமின் A சத்துக் குறைவால் கண்பார்வை இல் லாமையும் பிற கண் தொடர்பான நோய்களும் எனவே கன்றுகளுக்கு வரக்கூடும். கருப்பையில் வளரும் கன்றின் தேவையைக் கருதி மாட்டிற்குத் தினசரி கூடுதலாக 2 கி.கி அடர் தீவனமும், 10 கி.கி பசும்புல்லும், 30 கி. தாது உப்புக் கலவையும் கொடுக்க வேண்டும். சுன்று பிறந்ததும் அதன் மூக்கு. வாய், உடல் பகுதிகள் மீது சளி போன்று ஓட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த துணியால் துடைக்க வேண்டும். சாதாரணமாக, பசுவே அதை நக்கி நீக்கி விடும். கன்று ஈன்றவுடன் கொப்பூழ் கொடியை இரண்டரை செ.மீ. விட்டுக் கத்தரியால் வெட்டி நூலால் கட்டி டிங்சர் அயோடின் தடவ வேண்டும். தனால் கட்டி உண்டாவதை யும். னைய நோய்கள் பரவுதலையும் தடுக்க லாம். பால் சள்ளைக் கன்று பிறந்த இரண்டு மணி நேரத்திற்குள் சீம் கொடுக்க வேண்டும். சீம்பாலில் கன்றின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பொருள்களும் புரோட்டீன்