கால்நடை 463
107-108°F வலி வரை உதடுகளின் உடல் அடுக்கு வீங்கியும் சிவந்த நிறத் துடனும் காணப்படும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும். உடல் வெப்பநிலை இருக்கும்; உணவு உண்ணாது. அசை போடாது. பால் வற்றி, பால் மடி மென்மையாகவும் தளர்ந்தும் காணப்படும். அழற்சியின் உச்சநிலையில் மாடுகள் நின்று கொண்டேயிருக்கும்; தொடக்கநிலையில் அறையிலிருந்து நிறமற்ற ஒரு நீர்மம் வடியும்; அது மஞ்சள். சிலப்பு என்று மாறும், இறுதியாக, கரும் பழுப்பாகவும் அடர்த்தியாகவும் நாற்றத்துடனும் இருக்கும். தங்கியிருக்கும் மருத்துவம். அருகிலிருக்கும் மாடுகளுக்கு இந் நோய் பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்ட மாடு களிலிருந்து வடியும் நீர்மம் நஞ்சுக்கொடி போன்ற வற்றை அப்புறப்படுத்துவதோடு எரித்துவிடவும் வேண்டும். கருப்பையில் நஞ்சுக் கொடியை அகற்ற வேண்டும். அதன் பிறகு பீச்சுக் குழலின் வழி நீர்த்தாரை (douche) கொடுத்துக் கருப்பையை நன்றாகக் கழுவ வேண்டும். மருந்துகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நீண்டநாள் அழற்சி இது பொதுவாக தீவிர அழற்சியின் தொடர்ச்சியில் வரக்கூடியதாகும். இந்த அழற்சியில், பாதி குணமாகிய நிலையில் தீவிர அழற்சியின் அறிகுறிகள் மறைந்து விடும். வலி குறைந் தோ இல்லாமலோ இருக்கும். பால் சுரப்பு இருக் காது. அறையிலிருந்து தொடர்ந்து அல்லது இடை வெளி விட்டு நீர்மம் வழிந்துகொண்டேயிருப்ப தோடு துர்நாற்றத்துடனும் இருக்கும். . மல் மருத்துவம். நோயுற்ற கால்நடைகள் சிறந்த நிலையிலிருக்க நல்ல சத்தான உணவு கொடுக்க வேண்டும். அது எளிதில் செரிக்கக்கூடியதாகவும், மிளக்கியாகவும் இருக்க வேண்டும். கருப்பையிலுள்ள சீழை உடனே வெளியேற்ற வேண்டும். லூகாஸ் அயோடின் போன்ற மருந்துகளைப்பயன்படுத்தலாம். கருப்பைக் கட்டிகள். இது பொதுவாக, கால் நடைகளில் காணப்படுவதில்லை. அவ்வாறு ஏற்படின் அக்கட்டி கன்று ஈனும் காலம்வரை எந்த அறி குறியும் ஏற்படுத்தாது. கட்டி எந்த இடத்திலிருக் கிறது என்பதைப் பொறுத்து மருத்துவம் வேறுபடும். கருப்பையின் ஒரு மூலையில் சிறு கட்டிகளாக இருந்தால் அவற்றை அகற்றத் தேவையில்லை. வேருடன் கூடியதாக இருந்தால் அக்கட்டியைக் கட்டாயம் அகற்ற வேண்டும். கருப்பை நெகிழ்ச்சி (prolapse). கருப்பையின் ஒரு பகுதி மட்டுமோ முழுவதுமோ இனப்பெருக்க உதடு களின் வழியாக வெளியே தள்ளுவதற்குக் கருப்பை நெகிழ்ச்சி என்று பெயர். நோய்க் காரணங்கள். நஞ்சுக்கொடியை வெளியே எடுக்கும்போது மருத்துவ முறைகளைச் சரியாகப் பின்பற்றாமலிருந்தால் அழற்சி கால்நடை 463 ஏற்படுகிறது. நோய் அறிகுறிகள். கருப்பையின் உட்பகுதி வெளியே தொங்கிக் கொண்டிருக்கும்; அழற்சியுற்றுக் காணப்படும். உள் அடுக்கு, கிழிந்து காயத்துடனும், நாற்றத்துடன் கூடிய நீர்மத்துடனும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகள் அதிகக்காய்ச்சலுடன் முனகிக் கொண்டிருக்கும். மருத்துவம். காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும். வெளியே தள்ளிய கருப்பையின் உட்பகுதி மேலும் காணப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்திக் கருட் பையின் மேற்பகுதியைத் தூய்மையாகக் கழுவ வேண்டும். இதற்குப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது சாதாரண உப்பைப் பயன்படுத்தலாம்: வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் உட்பகுதியை மீண்டும் உள்ளே தள்ளுவதோடு அதனுடைய நிலை யில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடு செய்யவேண்டும். கருப்பையில் நீர்க்கோப்பு, இந்நோய் கன்று ஈனும் போது ஏற்படும் காயங்களிலிருந்து சுரக்கும் சுரப்புகள் வெளியே செல்ல வழியில்லாமல் உண்டாகின்றது. இந்நீர் தங்குவதால் வயிறு பெரிதாகி மாடுகள் சினையுற்றிருப்பது போன்று காணப்படும். மருத்துவம். இனப்பெருக்க உறுப்பின் முன்பகுதி யைத் திறந்து உள்ளேயிருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும்; பிறகு தேவையான மருந்துகளை உள்ளே செலுத்த வேண்டும். கருப்பை முறுக்கேறுதல். கருப்பை அதனுடைய அச்சில் முழுவதுமாகவோ பகுதியோ சுற்றிக் கொள்வதால் இது ஏற்படுகிறது. காரணங்கள். மாடுகள் தவறிக் கீழே விழுவதால் உண்டாகும் அல்லது தரையில் உருளும் போது ஏற்படும். அறிகுறிகள். கன்று ஈனுதலின் நிலைகள் மிகவும் குறைந்து காணப்படும். கன்று ஈனுதலில் முதல் நிலையான பனிக்குடம் உடைந்து பிறகு மாடு கன்று ஈன முடியாமல் நீண்ட நேரமிருக்கும். வலியுடன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும்; அடிக்கடி சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும். நன்றாகப் பருத்துக் காணப்பட்ட பால்காம்புகள் சுரப்பு இழந்து துவண்ட நிலையில் காணப்படும். மருத்துவம். கருப்பைச் சுழற்சி முதலில் எப்பக்க மிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகு கால்நடைகளின் காலைக் கட்டிவிட்டு வளர்ச்சி இருக்கும் திசையிலேயே உருட்ட வேண்டும். சுழற்சி சீரானதும் கன்று தானாகவே ஈனும். TOY சீ. சமரசம்