பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 கால்நடை

454 கால்நடை கருச்சிதைவு நோய். கால்நடைகளில் பலவகைக் காரணங்களால் கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. அதிலும் முக்கியமாக புரூசெல்லா (Brucella), ட்ரை கோமோனியா (Trichomonia), வைப்ரியோ (Vibrio) ஆகிய மூன்று நோய் நுண்ணுயிர்களால் ஏற்படும். இம்மூன்று வகையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந் தது புரூசெல்லா இது கால்நடைகளி லிருந்து மனிதருக்குப் மனிதருக்குப் பரவக்கூடியது என்பதால் குறிப்பிடத்தக்கது. ஆகும். புரூசெல்லா நோய் நுண்ணுயிரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை புரூசெல்லா அபார்ட்டஸ் (மாடுகள்). புரூசெல்லா சூயிஸ் (பன்றிகள்), புரூசெல்லா மெலிடென்சீஸ் (வெள்ளாடு கள்) என்பன. இவற்றால் உண்டாகும் நோய்க்கு, பாங்ஸ் நோய் என்றும் தொற்றுக்கருச்சிதைவு என்றும் மால்டா காய்ச்சல் என்றும் பெயர். இந்தக் கருச்சிதைவு நோய் அனைத்து நாடுகளிலும் உள்ள கால்நடைகளில் காணப்படுவதாகும். மேலும் மனிதர் களில் கால்நடைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களிடமும் காணப்படுகிறது. இது முதல் கருத்தரிப்பில் ஏழாம் மாதத்தில் ஏற்படுகிறது. பின்னர் ஏற்படும் கருத்தரிப்பில் 8 அல்லது 9 ஆம் மாதத்தில் கருச்சிதைவு உண்டாகிறது. இது சாதாரண மாக நுண்ணுயிர்க் கொல்லி சூரிய ஒளி மற்றும் உலர் வதால் கொல்லப்படுகிறது. பொருள்கள் அழுகிப் போகும்போது இந்நுண்ணுயிர் விரைவில் இறந்துவிடும். பாலைக் காய்ச்சிக் குளிரவைப்பதாலும் இறந்துவிடும். மண்ணுக்கு அடியில் இரண்டு அடி ஆழத்தில் 30- 45 நாள் நுண்ணுயிர் உயிருடன் காணப்படும். இந் நோய்ப்பெருக்க காலம் ஒரு குறிப்பிட்டகால அளவு தான் என்று கருதமுடியாது. இது நோய்வாய்ப்பட்ட கால்நடைகளிலிருந்து வெளியேற்றப்படும் சுழிவுப் பொருள்கள் மூலம் கலக்கப்பட்டு உணவு, நீர் மூலம் பரவுகிறது. பசுக்களின் உறுப்புகளைக் கையாளுவதன் மூலம் கால்நடை உதவி மருத்துவர்கள் போன் றோருக்கு இந்நோய் உண்டாகிறது. இது பால் வழியா கவும் மனிதனுக்குப் பரவக்கூடியதாகும். கால்நடை களில் இந்நோய் நுண்ணுயிர் உடலில் சென்றவுடன் ஏறத்தாழ 7,8 மாதங்ளுக்குப்பின் நோய் அறிகுறிகள் காணப்படும். அறிகுறிகள். நோய் கண்ட பசுக்களில் முதல் கருத் தரிப்பாக இருந்தால் ஏழாம் மாதத்தில் கருச்சிதைவு உண்டாகும். கன்றுகள் உயிருடன் அல்லது இறந்து பிறக்கும். கன்றை மூடியிருக்கும் மெல்லிய சவ்வு தோலைப் போன்று ஆங்காங்கே வெண்மையாகவும் தடிப்பாகவும் இருக்கும். கருப்பையிலிருந்து வடியும் நீர் மம், மஞ்சள் கலந்து பழுப்பு நிறமாகவும் வழவழப் பாகவும் நாற்றம் இல்லாமலும் இருக்கும் (placentitis). தஞ்சுக் கொடி விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கால்நடை உதவி மருத்துவர் தாம் எடுக்க வேண்டியிருக்கும். இந்நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி விந்தில் இருக்கும். மனிதர்களில் இந்நோய் காணப்பட்டால் தலைவலி, மூட்டுவலி யுடன் காய்ச்சலும் காலை, மாலையில் விட்டுவிட்டு வரும். இக்காய்ச்சல் வரைபடத்தை நோக்கின் பல் வரிசை போன்று இருக்கும். ஆதலால் இந்நோயை அலைக் காய்ச்சல் undulant fever) என்று கூறுவர். 3 நோயறி முறைகள். இறந்து பிறந்த கன்றுகளின் வயிற்றிலோ, கொடியிலோ, இரத்தத்திலிருந்து பெறப் பட்ட சீரத்திலோ பாலிலிருந்து எடுக்கும் மாதிரிப் பொருள்களிலோ ஆய்வு மூலம் நோய் அறிகுறி கள் தென்படும். இந்நோயை இரத்தச் செல்திரள் ஆய்வு மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம். புருசெல்லா எதிர்ச்செனி ஒரு சொட்டும் இரத்தம் ஒரு சொட்டும் சேர்த்துக் கலந்து 15 நிமிடம் வைத்துப் பின்பு பார்த் தால் நோய் உள்ள கால்நடைகளில் இரத்தமானது ஆங்காங்கே ஒன்று திரண்டு காணப்படும். இதன்மூலம் எந்தக் கால்நடையில் இந்நோய் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளிலிருந்து சீரத்தை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி அந்தச் சீரத்தின் மூலம் குழல் இரத்தச் செல்திரள் ஆய்வு செய்து பார்த்தால் நோயின் தன்மையைத் தெரிந்து கொள்ள லாம். நோயின் தன்மை நீர்த்தல் 1 இல் 40க்கு மேல் இருந்தால் நிச்சயமாக உள்ளது என்று கொள்ள லாம். நீர்த்தல் ஆனது 1 இல் 20 மற்றும் 1இல் 40 இடையே இருந்தால் நோய் பற்றி அறுதியிட முடி யாது. சீரம் நீர்த்தல் 1இல் 10, அதற்குக் கீழாக இருந்தால் நோய் அறிகுறியில்லை என்று சொல்ல லாம். இந்நோயைப் பிற கருச்சிதைவு நோய்களி லிருந்தும் தனித்துப் வேண்டுமென்றால் பார்க்க விப்ரியோ நோய் நுண்ணுயிரியால் உண்டாக்கப்படும் கருச்சிதைவு 3 ஆம் மாதத்திலும், டிரைகோமோனஸ் கருச்சிதைவு 5 அல்லது 6 மாதத்திலும் ஏற்படும். லெப்டோஸ் பைரா நோய் நுண்ணுயிர் மூலம் ஏற் படும் கருச்சிதைவு எந்தக் காலத்திலும் ஏற்படலாம். ஆனால் இந்நோய் மூலம் ஏற்படும் கருச்சிதைவு 7 மாதத்திற்குப் பின்னரே ஏற்படும். நோய் எதிர்ப்பு ஆற்றல். இந்நோயிலிருந்து கால் நடைகளைக் காக்க, நோய் கண்ட கால்நடைகளைத் தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளிலிருந்து அதன் கன்றுகளைத் தனியாகப் பிரித்து புரூசெல்லா அபார்டஸ் நுண்ணுயிரி கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைக் கன்றுகளுக்குப் போட்டு வந்தால் நோய் பரவுவதைத் தடுக்கலாம். கன்று பிறந்து 21 ஆம்நாள் முதலும் 6 மாதம் கழித்தும் தேவைக்கேற்ப ஆண்டுக்கொரு முறை தடுப்பூசி போட வேண்டும். நோய்த் தடுப்பு முறைகள். கால்நடைகளை அவ்வப் போது இரத்தச் செல் எதிர்செனி பயன்படுத்தி