பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்நடை 465

ஆய்வு செய்ய வேண்டும். இறந்து பிறந்த கன்று. நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து கசியும் நீர்மம் யா வற்றையும் எடுத்து எரித்துவிடவேண்டும். உணவுப் பொருள்கள் நீர் ஆகியவற்றில் நோயால் பாதிக்கப் பட்ட பொருள்கள் கலக்கக்கூடா. பாலை நன்றாகக் காய்ச்சிய பின் குடிக்க வேண்டும். பொலி காளை களைப் பயன்படுத்தும் முன்னர் இந்நோயால் பாதிக் கப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும். சினைப் பசுக்களாக இருந்தால் அவற்றைத் தனியாக வைத்துப் பராமரித்து நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்னர் பிற பசுக்களுடன் சேர அனுமதிக்க வேண்டும். கால்நடை, உதவி மருத்து வர் நோய்வாய்ப்பட்ட கன்று மற்றும் நஞ்சுக் கொடிகளைக் கையாளும்போது கை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். நோய் கண்ட கால்நடைகள் இருந்த இடத்தை நன்றாகத் தூய்மைப்படுத்தி நுண் ணுயிர்க் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். இரத்த ஓட்ட மண்டல நோய். இதய உறை அழற்சி (pericarditis) என்பது கால்நடை யினங்களில் காணப்படும் நோய்களில் ஒன்று. பொதுவாகக் காயம் ஏற்படுவதால் உண்டாகும் இந்நோயின் தொடக்கத்தில் வயிற்றில் வளிமம் நிறைந்து வலி தோன்றும். நாளடைவில் இதயம் வேலை செய்ய முடியாத நிலையுண்டாகும். இந் நோய் ஏற்பட்டால் குணமடைவது மிக அரிது. இதய உள்ளுறை அழற்சி நோய் பொதுவாகப் பாக்டீரியாக்களால் உண்டாகிறது. இதனால் நெஞ்சு வலியும், காய்ச்சலும் ஏற்படும். நோய் தீவிர மானால் விரைவாக மூச்சு விடும். உடம்பில் நீர் கோத்துச் சிக்கல்களுண்டாகி மரணம் ஏற்படலாம். கிளை மூச்சுமண்டல நோய். மூச்சுக்குழலிலும் மூச்சுக்குழலிலும் அழற்சி ஏற்பட்டால் மூச்சு உறுப்பு களின் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்படும். மூச்சுக் குழலழற்சி முனைப்பானது, நாட்பட்டது (chronic) என இருவகைப்படும். அழற்சி தோன்றியதும் முதலில் சளியில்லாத இருமல் வரும். சில நாள்களில் சளியுடன் கூடிய இருமல் உண்டாகும். மூக்கிலிருந்து வரும் சளி தொடக்கத்தில் நீர்த்ததாகவும் பின்னர் கெட்டி யாகவும் வரும். மூச்சுவிடத் துன்பப்படும். அழற்சி என்று தெரிந்தவுடனேயே கால்நடை மருத்துவரிடம் காட்டித் தகுந்த மருத்துவம் செய்து கொள்ளுதல் நல்லது. சரியான மருத்துவம் செய்யாமல் விடும் நாட்பட்ட அழற்சியில் சளியுடன் சேர்ந்த இருமல், கெட்டியான சளி, காய்ச்சல் முதலியன உண்டாகும். காய்ச்சலுடன் தொடர்ந்து இருமலும் நீடித்தால் நுரையீரல் காற்றறை வீக்கம் (emphysema of the lung) என்னும் நோய் உண்டாகும். நுரையீரலிலுள்ள நுண்காற்றறைகள் (alveoli) விரிவதால் இந்நோய் உண்டாகும். இதில் நாட்பட்ட நுரையீரல் காற்றறை வீக்கம், நாட்பட்ட செல்லிடை (interstitial emphysema) வீக்கம் என இரு வகையுண்டு. அ.க. 8 - 30 கால்நடை 465 கால் நாட்பட்ட நுரையீரல் வீக்கம் பொதுவாகச் நடைகளிலும், செல்லிடை வீக்கம் குதிரைகளிலும் காணப்படும். குதிரைகளில் காணும் இந்நோயைக் குதிரைக்காசம் என்பர். பொதுவாக இது நாட் பட்ட மூச்சுக்குழல் அழற்சியாகத் தொடங்கி காச நோயாக மாறும். குதிரை மூச்சுவிடத் துன்பப்படும். அளவுக்கதிகமாக குதிரை மசால் செடி, பயற்றங் கொடி, மாசுபடிந்த புல் போன்ற தீவனங்களை உண்டால் இந்நோய் உண்டாகும். இந்நோயில் இருமல் அடிக்கடி வரும். மூச்சை வெளியே விடும் போது விலாவில் இரட்டைச் சுருக்கம் விழுதல் விலாக்களில் குழிவிழுதல் வயிறு தொங்குதல் ஆகி வவை இந்நோயின் குறிகளாகும். இந்நோய் எளிதில் குணமாகாது. குதிரைக்கு வந்தால் மருத்துவத்தால் நோய் குணமாகலாம். பின்னர் குதிரை எளிய பணி களுக்குத்தான் உதவும். நிமோனியா, மூச்சுக்குழல் நிமோனியா பெரும் பாலும் சளியுடன் கூடியதாக இருக்கும். மனிதர் களுக்கு வரும் நிமோனியாவிலிருந்து இது வேறு பட்டது. சிலவேளைகளில் குதிரைக்கு மட்டும் வரும். பாக்ட்டீரியா, சிலவகை வளிமங்கள், ஒட்டுண்ணி கள் ஆகியவற்றால் வரும் இந்நோய் ஏற்பட்டால் காய்ச்சல், சளியுடன் இருமல், மூக்கில் சளி ஒழுகுதல் முதலியன உண்டாகும். மருத்துவத்தால் சில குண மடைந்தாலும் பெரும்பான்மையானவை நாட்பட்ட அழற்சிக்குள்ளாகி இறந்துவிடும். நுரையீரல் பிரிவு நிமோனியா. இது பெரும்பாலும் குதிரையைத் தாக்கும். குதிரைக்கு அளவுக்கு மீறி வேலை கொடுத்தாலும், குளிரில் நெடுநேரம் இருந் தாலும் வரும். குதிரையின் இயல்பான உடல் வெப் ub 100-101° F. காய்ச்சல் வந்தால் 105- 107°F இருக்கும். நாடித்துடிப்பு மிகும். அடிக்கடி இருமல் வரும். தொடக்கத்தில் சளி நீர்த்தும். பின்னா கட்டியாகவும் மஞ்சளாகவும் இருக்கும். தொடக்கத்திலேயே நல்ல மருத்துவம் செய்து குதிரைக்கு ஓய்வு கொடுத்தால் குணமாகிவிடும். புப்புசப் பை நோய் (pleurisy). நுரையீரலை ஓட்டி யுள்ள சவ்வுப் படலமும், மார்பின் உட்புறச் சவ்வும் அழற்சியடைவதால் இந்நோய் கால்நடை களுக்கு அடிக்கடி வரும். இந்நோய்க்குப் பாக்டீரியா வும் அவற்றின் நஞ்சுகளுமே காரணம். பலவித தொற்றுநோய்களாலும் இது வரும். நாய்களுக்கும் கால்நடைகளுக்கும் இந்நோயை உண்டாக்குவது காசநோய் நுண்ணுயிரியாகும். இந்நோய் தீவிரமா னால் கால்நடை அசையாமல் சோர்ந்து படுத்தே யிருக்கும். காய்ச்சல் வரும். மூக்குத் துளைகள் விரியும். குதிரைக்குவந்தால் படுக்காமல் அமைதியற்றிருக்கும். படுத்தால் நோயில்லாத பக்கம் சாய்ந்து படுக்கும். மருத்துவத்தால் ஒரு சில குணமடையும். சில, நாட் பட்ட நோயாக மாறி இறந்து போகும். இந்நோய்க்கு