பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 கால்நடை

466 கால்நடை முக்கிய காரணமான காசநோய் நுண்ணுயிரிகளைத் தொடக்கத்திலேயே அழித்துவிட வேண்டும். - பா. நாச்சி ஆதித்தன் நரம்பு மண்டல நோய்.இவை மூளை உறை அழற்சி (meningitis). மூளை அழற்சி (encephalitis), பெரு மூளை இரத்தப்பெருக்கு (apoplexy), மூளைக்கட்டி, வெயில் அதிர்ச்சி நோய் (sun-stroke), குடு அதிர்ச்சி நோய் (heatstroke) கால்கை வலிப்புநோய் (epilepsy), நரம்பழற்சி (neuritis) எனப் பலவகைப்படும். பெரும்பரிலும் மூளை உறை அழற்சி நுண்ணுயிர் களால் உண்டாகிறது. சில வேளைகளில் காசநோய் ஏற்பட்டாலும், உடம்பில் கட்டிகளின் முனைப் பாலும் இந்நோய் உண்டாகும். குதிரைகளில் இன் ஃபுளுயன்சாவாலும் இந்நோய் உண்டாகலாம். ஒட்டுண்ணிகளாலும், மண்டை டையோட்டில் ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். நோயுற்ற விலங்கு, அயர்ச்சியுடன் மயங்கிக் காணப்படும். முரட்டுத்தனமாக நடக்கும். விரைவாக மூச்சு விடும். நாடித்துடிப்புச் சீராக இருக்காது. காய்ச்சல் ஏற்படும். வெறிபிடித்ததுபோல் கடிக்கும்; உதைக்கும்; அங்குமிங்கும் ஓடும். சிறிது நேரத்தில் சோர்ந்து படுத்துவிடும். சுண்கள் விரியும். நடக்கும்போது தலை யைத் தொங்குமாறு வைத்து அசைந்து அசைந்து மெதுவாக நடக்கும். இந்நோய் கண்டால் குதிரை பிழைப்பதரிது. நாய்களுக்கு உடனடி மருத்துவம் செய்தால் நாட்பட்டுக் குணமாகும். சில விலங்குகள் இயல்புக்கு மீறி மூளை அழற்சி. இது பரவிய அழற்சி என்றும் குறிப்பிட்ட பகுதி அழற்சி என்றும் இருவகைப்படும். பரவிய மூளை அழற்சி பொதுவாக நாய் குதிரை முதலியவற்றில் ஏற்படும். இன்ஃபுளுயன்சா நோய் நாட்பட்டால் இவ்வழற்சி ஏற்படலாம். காய்ச்சல் இதன் முதல் அறிகுறி. நோயுற்ற விலங்கு ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிச் சுற்றி வரும். பக்கவாதமும் உண்டாகலாம். உடனடி மருத்துவம் செய்தால் சில சமயங்களில் குணமடையலாம். பெரும்பாலானவை இறந்துவிடும். குறிப்பிட்ட பகுதியின் மூளை அழற்சி பொதுவாகக் குட்டி விலங்குகளிடமே காணப்படும். வேறு நோய்களால் தாக்கப்பட்டு உடல் பலவீனமடைவதால் தடுப்பாற்றல் குறைய, இந்நோய் வரலாம். ஒட்டுண்ணிகளாலும் இந்நோய் உண்டாக லாம். பெருமூளை இரத்தப்பெருக்கு. பொதுவாக, கால் நடைகளிலும் நாய்களிலும் மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் நசிவுற்றால் இரத்தப்பெருக்கு R.ண்டாகும். உடல் பலவீனப்பட்டு இரத்தக் குழாய்கள் கிழிந்தும் போகலாம். திடீரென ஏற்படும் இந்நோயால் இழுப்பு வந்து மரணம் உண்டாகலாம். சில வேளைகளில் மெதுவாக வரும் நோயால் கண்பாவை விரியும். உதடுகள் செயலிழக்கும், இந்நோய் எளிதில் குண மாகாது. தலையில் சூரியக் கதிர்கள் நேராகத் தாக்குவதால் வெயில் அதிர்ச்சிநோய் ஏற்படும். கால்நடைகள் கோடைக் காலத்தில் வெயில் நேரத் தில் வேலை செய்யும்போது இது உண்டாகும். இந் நோய் திடீரென ஏற்படும். வியர்வை மிகும். மூச்சு விடுதல் விரைவாகும். காய்ச்சலுடன் இசிவும் வரும். தக்க உடனடி மருத்துவம் செய்து ஓய்வு கொடுத் தால் குணமாகிவிடும். மிகுந்த சூட்டால் சூடு அதிர்ச்சி நோய் உண்டா கும். இந்நோய் இரவிலும் திடீரென ஏற்படும். காய்ச்சல் மிகுதியாவது இதன் முக்கிய அறிகுறி யாகும். கால்நடை தள்ளாடிக் கீழே விழும்; இசிவு வந்து மரணம் ஏற்படும். கால்கை வலிப்புநோய் நாய்களுக்கே வரும் ஒரு பரம்பரை நோய் ஆகும். திடீரென வரும் இந்நோயால் மயக்கம் வந்து தசைகள் இழுக்கும்; உடல் விறைத்துவிடும்; முகம், கழுத்துத் தசைகள் சுருங்கிச் சுருங்கி இழுக்கும்; கண்கள் ஒரு நிலைப்படும்; மலம், சிறுநீர் தாமாகவே வழியும். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளியும். சோர்வு நீங்க நீண்ட நேரம் ஆகலாம். இந்நோயுள்ள நாய்களை இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்து வைக்க வேண்டும். நரம்பழற்சி, நரம்பில் ஏற்படும் காயங்களாலும் பாக்ட்டீரியாக்களால் உண்டாகும் நஞ்சாலும் இ நோய் ஏற்படுகிறது. உணர் நரம்புகளில் ஏற்பட்டால் வலி மிகுதியாக இருக்கும். உணர் திறன் சிறிதுசிறி தாகக் குறைந்து இறுதியில் இல்லாமற்போகும். செயல் நரம்புகளில் ஏற்பட்டால் இழுப்பும் பின்னர் பக்கவாதமும் உண்டாகும். இது குணமாவது அரிது. பா. நாச்சி ஆதித்தன் - இனப்பெருக்க உறுப்பு நோய். பசுவிலும் பெண் நாயிலும் ஏற்படும் கருப்பை அழற்சி நோயால் மலடு ஏற்படும். பெரும்பாலும் இந்நோய் பாக்ட்டீரியா வால் உண்டாகும். பசுவின் மலட்டுத் தன்மைக்கு டிரைக்கோமோனாஸ்ஃபீட்டஸ் (Trichomonas foetus) என்னும் ஒற்றைச் செல் உயிரி காரணமாகும். நோய் தீவிரமானால் யோனி வாயிலிருந்து நாற் றத்துடன் ஒழுக்கு வரும். காய்ச்சல் ஏற்படும். அடிக் கடி பசி ஏற்படும். குட்டிப் போடும்போது தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. உடனடி மருத்துவம் செய்யா விடில் பாக்ட்டீரியா நச்சு இரத்தத்தில் கலந்து மரணம் உண்டாகும். யோனிப் பாதையிலிருந்து வரும் ஒழுக்கைக் கட்டுப்படுத்தாவிடில் நோய் தீவிர மடைந்து சூற்பையிலும் சூற்குழாய்களிலும் அழற்சி ஏற்படலாம், பசுக்களில் காசநோய் நுண்ணுயிரியா லும் இந்நோய் உண்டாகும். சூற்பையில் சிறு பைகள் (eysts) பசுக்களில் மிகுதியாக உண்டானால் மலட்டுத்தன்மை ஏற்படும். எ.கா. குதிரை.