கால்நடை 467
சினைப்பாதை அழற்சி (salpingitis) ஏற்பட்டால் சூற்பையிலிருந்து அண்டம் வெளிலாராமல் நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படும். கோழி இந்நோயால் தாக்குண்டால் இறந்துவிடும். பசுக்களிடம் மிகுதியாகக் காணப்படும் மடி அழற்சி (mastitis) ஒரு முக்கிய நோயாகும். பாக்ட்டீரி யாவால் ஏற்படும் இந்நோய் தீவிரமானால் மடியும் காம்பும் வீங்கிப் பாலுக்குப் பதிலாகச் சீழ் வரும். காய்ச்சல் உண்டாகும். நாட்பட்ட நோயினால் திசுக் கள் இறந்து மடி அழுகிவிடும். இது மிகவும் தீங்கா னது. வெள்ளாடுகளிலும் செம்மறியாடுகளிலும் இந் நோய் பரவலாகக் காணப்படும். மடி சுருங்கிவிடும். பால் காரச் சத்து மிகுந்து நீர்த்துவிடும். சில நாள் களில் பால் கறக்காமல் போகும். இந்நோய் கண்ட வுடன் தக்க மருத்துவம் செய்தால் குணமடையும். பொதுவாக இந்நோய், மந்தையில் ஏற்படுவதால் கால்நடைகளை நல்ல முறையில் வளர்க்கவேண்டும். ஸ்ட்ரெப்டோக்காக்கஸ் அகலாக்டியே (strato coccus agalactial) என்னும் பாக்ட்டீரியாவால் உண்டாகும் மடி அழற்சி ஒரு தொற்று நோயாகும். இந்நோயுற்றால் பால் சுறக்காது. நோய் கண்டதும் மருத்துவரை அணுகி உடனடி மருத்துவம் செய்ய வேண்டும். சுக்கிலச் சுரப்பி அழற்சி. சிறுநீர்த் தாரை வழி யாக வரும் பாக்ட்டீரியாவால் உண்டாகும் இந் நோய் பரவலாகப் பெரும்பாலான ஆண் கால்நடை களில் ஏற்படும். இந்நோய் தீவிரமானால் சிறுநீர் இறங்காது.சுரப்பி வீங்கிவிடும். காய்ச்சல் வரும். சில வேளைகளில் சுரப்பியில் கட்டியும் உண்டாகும். சுக்கிலச் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீர்ப்பை யில் கற்கள் உண்டாகலாம். பரவலாக நாய்களிடமே இந்நோய் காணப்படுகிறது. -பா. நாச்சி ஆதித்தன் சிறுநீர் மண்டல நோய். இவை சிறுநீரக அழற்சி (nephritis). சிறுநீர்ப்பை அழற்சி (cystitis), சிறுநீர்க் கற்கள் (urinary stones) எனப் பலவகைப்படும். சிறு நீரக அழற்சியில் முனைப்பான அழற்சி, நாட்பட்ட அழற்சி,கீழ் அழற்சி என மூன்று வகையுண்டு. முனைப்பான அழற்சி வந்தால் சிறுநீர் மிகுதி யாக இறங்கும். நோய் முதிர்ந்தால் சிறுநீர் கலங்கலாக இருக்கும்; அளவு குறையும்; அடர்வெண் மிகும்; அல்புமினும் மிகும். காய்ச்சல் ஏற்படும். தோல் சிறுநீர் நாற்றம் எடுக்கும். வாந்தி, இழுப்பு, ஜன்னி முதலிய கோளாறுகள் ஏற்பட்டு இறுதியில் இறக்க நேரிடும். நாட்பட்ட அழற்சி நோய் முதிர்ந்து வரலாம். சிறுநீர் அடிக்கடி வரும். கால்களில் நீர் கோத்து வீக்கம் உண்டாகும். அடிக்கடி வாந்தி வரும். தாகம் மிகுதியாக எடுக்கும். சிறுநீர் நாற்றமுள்ள ஊறல் அ.க.8-30 கால்நடை 467 நோய் (eczema) உண்டாகும். இரண்டு சிறுநீரகங் களிலும் அழற்சி ஏற்பட்டால் குணப்படுத்துவது கடினம். சிறுநீரகச் செல்களுள் சீழ் ண்டாக்கும் நுண்ணுயிர்கள் புகுந்தால் கீழ் அழற்சி உண்டாகிறது. சிறுநீரகங்களில் குண்டூசித் தலை அளவுள்ள சிறு கட்டிகள் உண்டாகும். அழற்சி தீவிரமானால் மரணம் ஏற்படலாம். சிறுநீர்பை அழற்சி பொதுவாக நாய் களிடம் பரவலாகக் காணப்படும். கரடுமுரடான உறுத்தும் பொருள்கள் சிறுநீரகம் அல்லது சிறுநீர்க் குழாய் வழியாகச் சிறுநீர்ப் பைக்குள் வந்தால் ந்நோய் ஏற்படும். சில வகைப் பாக்ட்டீரியாக் களாலும் இந்நோய் உண்டாகலாம். சிறுநீர்ப்பை அழற்சி தீவிரமானால் சிறுநீர் சொட்டுச் சொட்டாகத் தொடர்ந்து வரும். வலியும் இருக்கும். சில வேளைகளில் சிறுநீர் கழித்தலும் கடினமாகும். சிறுநீரில் அல்புமின், சளி, இரத்தம் ஆகியவை இருக்கும். சிறுநீரின் அடர்வெண் மிகும். பாக்டீரியா நிறைந்திருக்கும். சிறுநீர் மிகவும் நாற்ற மடிக்கும். சிறுநீர்ப்பையில் கற்கள் சேர்வதாலும் இந் நோய் ஏற்படலாம். சிறுநீர்க் கற்கள் பல அளவிலும் உருவிலும் இருக்கும். பொதுவாகச் சிறுநீரை அடக்குதல், நீர் குறைவாகக் குடித்தல், சிறுநீரில் அமிலம் அல்லது காரத்தன்மை மிகுதல், சிறுநீர்ப்பாதையில் நுண் கற்கள் சேருதல்,வைட்டமின் A குறைநோய் ஆகிய வற்றால் சிறுநீர்க் கற்கள் உண்டாகலாம். சிறுநீரகக் கற்கள் சிறு மணல் போலவும் சிறுநீர்ப்பைக்கற்கள் சிறிது பெரியனவாகவும் இருக்கும். சில குதிரைகளில் முட்டை அளவுள்ள கற்கள் காணப்படும். ஊனுண்ணிகளின் சிறுநீர்க் கற்கள் ஆக்சலேட்டுகளாலும் யூரேட்டுகளாலும் உருவா கின்றன. தாவரவுண்ணிகளின் சிறுநீர்க்கற்கள் கார்ப் னேட்டுகளாலும் பாஸ்ஃபேட்டுகளாலும் ருவா கின்றன. கற்கள் பெரியனவானால் சிறுநீர்க் கழித் தலில் கடினமேற்படுவதுடன் சில வேளைகளில் சிறு நீர்ப்பைகிழிந்தும் விடும். இதற்கு மருத்துவம் இல்லை. -பா.நாச்சிஆதித்தன் ணவுப் பாதை நோய். அசைபோடும் கால்நடை களின் இரைப்பையில் முதல் அறையாகிய ரூமெனில் உணவு திரண்டு கட்டியாகி அடைத்துக் கொள்வ தற்கு அடைப்பு நோய் (impaction) என்று பெயர். சத்துக் குறைந்த உலர்ந்த தீனியை அளவுக்கதிகமாகத் தின்பதாலோ, ரூமெனில் தசை வலிமை குன்றி னாலோ இந்நிலை ஏற்படும். இந்நோய் கண்டால் கால்நடை பின் கால்களால் வயிற்றில் உதைத்துக் கொள்ளும். அசை போடாது. வயிறு வீங்கி மூச்சு விடத் துன்பப்படும். நோய் தொடக்கத்தில் மருத் துவம் செய்தால் குணமாகும். நாட்பட்டால் அறுவை மருத்துவமே சிறந்தது.