பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 கால்நடை

469 கால்நடை ரூமன்பொருமல் (tympanites of rumen) என்னும் நோய் இரைப்பையில் தேங்கியுள்ள தீனி நொதித்து வளிமம்நிறைந்துபொருமல் உண்டாவதால் ஏற்படு கிறது. ரூமன் தசை வலிவு குறைந்தாலோ, ரூமன் சுரப்பிகள் நன்கு சுரக்காமல் இருந்தாலோ இந்நோய் ஏற்படுகிறது. அமைதியற்று அடிக்கடி பின்காலால் வயிற்றை உதைத்துக் காண்டால் இந்நோய் உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். மூச்சுவிடத் துன்பப்படும்; தீனி எடுக்காது; அசை போடாது. நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும். அடிக்கடி சிறுநீரும், மலமும் சிறிய அளவில் கழிக்கும்; காய்ச் சலும் ஏற்படும்; மாடு, வெள்ளாடு, செம்மறியாடு இவற்றிற்கு இந்நோய் வரும்போது உடனடியாக மருத்துவம் செய்யாவிடில் இறந்துவிடும். ரூமனில் துளை செய்து வாயுவை வெளியேற்றலாம். குதிரை யில் சில வேளைகளில் உணவோ வாயுவோ இரைப் பையில் அளவுக்கு மீறித் தேங்கினாலோ தீனி தின்ற வுடன் எதிர்பாராமல் கீழே விழுந்தாலோ இரைப்பை கிழியும்.6-10 மணி நேரத்தில் மரணம் நேரும். . நாய்க்கு வரும் நோய்களில் மிக முக்கியமானது இரைப்பை அழற்சி (gastritis). உறுத்தும் பொருளோ, நச்சுப்பொருளோ உணவில் இருந்தால் இரைப்பை அழற்சி உண்டாகும். டைஃபஸ் நோயாலும் இது ஏற்படலாம். குட்டிகளின் குடலில் நாக்குப் பூச்சிகள் (ascaris) இருந்தாலும் இந்நோய் உண்டாகும். வாந்தி மிகும்; காய்ச்சல் உண்டாகும்.உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். குடலழற்சி. இந்நோய் உண்டானால் தீனி எடுக்காது. அசை போடாது. மலச்சிக்கல் உண்டாகி இரண்டொரு நாள்களில் வயிற்றுப் போக்கு ஏற் படும். அடிக்கடி மலம் சிறுகச்சிறுக வரும். குதிரைக்கு இந்நோய் ஏற்பட்டால் வலியால் ஓயாமல் நடந்து கொண்டே இருக்கும். காய்ச்சல் வரும். பசுவுக்கு வந்தால் பால் கறப்பது குறைந்துவிடும். வயிற்று வலி. இது விட்டு விட்டு வரும் வலி (spasmodic colic), பொருமல் வலி (flatulent colic என இரு வகைப்படும். இது பொதுவாகக் குதிரை யிடமே காணப்படும். விட்டுவிட்டு ஏற்படும் வலியால் வியர்வை மிகுந்து விலங்கு சோர்ந்துவிடும். காய்ச்ச லும் வரும். சிறுநீர் வரும் போலிருந்தாலும் சிறுநீர் வாராது. வயிற்றின் மீது அடிக்கடி உதைத்துக் கொள்ளும். புரண்டு புரண்டு எழும். பொருமல் வலி உண்டாவதால் பெருங்குடலில் வாயுக்கள் நிறைந்து வியர்வை மிகும். தீனியில் சாறு மிகையாக இருந் தாலோ, பூஞ்சணமிருந்தாலோ இதுஏற்படும். அடிக் கடி முன்னால் உதைத்துக் கொள்ளும். சுற்றிச் சுற்றி வரும். நோய் தீவிரமானால் அடிக்கடி சிறுகச் சிறுக மலம் வரும். வாயுவும் பிரியும். சில வேளைகளில் மூச்சுத் திணறலோ குடல் கிழிதலோ ஏற்பட்டு மரணம் நேரலாம். வயிற்றுச் சவ்வழற்சி, ஈரல்கட்டி, குடல் கட்டி அல்லது குடல் முறுக்கு ஆகியவற்றால் வயிற்றுச் சவ்வழற்சி (peritonitis) உண்டாகும். காயம் ஏற்பட்டு அதன் வழியே உட்செல்லும் நோய் நுண்ணுயிரி களும் உண்டாகும். சில வேளைகளில் காயடிக்கும் போதோ, கருப்பை கிழியும்போதோ, சிறுநீர்ப்பை கிழியும்போது உண்டாகும். ஆடு மாடுகளுக்குக் காச நோய் நுண்ணுயிரியால் அடிக்கடி உண்டாகலாம். நோய் தீவிரமடைந்தால் வயிற்றைச் சிறிதே தொட்டாலும் வலிக்கும். மூச்சு விரைவாக விடும். காய்ச்சல், நடுக்கம் உண்டாகும். மலச்சிக்கல் ஏற் படும். படுத்தால் எழுந்திருக்க முடியாமற் போகும். மகோதரம் (ascites or dropsy ) இந்நோய் கண்டால் வயிற்றில் நிணநீர் போன்ற வெளிர் மஞ்சள் நிறநீர் உண்டாகி வயிறு உப்பி விடும். ஆனால் இந் நீரில் புரதம் குறைவாக இருக்கும். மூச்சுவிடத் துன்பப்படும். நோய் கண்டவுடன் தக்க மருத்துவம் செய்தால் குணமாகி விடும். மஞ்சட் காமாலை. இந்நோய் கண்டால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வரும். காய்ச்சல் இருக்கும். மலச்சிக்கல் உண்டாகும். மலம் கெடுநாற்றம் அடிக் கும். நாட்பட்ட நோயால் உடல் மெலிந்து சோகை ஏற்படும். வயிறும் கால்களும் வீங்கும். கல்லீரல் அழற்சி. இதில் சீழ்க் கல்லீரல் அழற்சி செல்லிடைக் கல்லீரல் அழற்சி என இருவகையுண்டு. சீழ் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் கல்லீரல் திசுக்களில் சேர்ந்தால் அழற்சி உண்டாகும். மற்ற உறுப்புகளில் சீழ்க்காயங்கள் ஏற்பட்டாலும் கல்லீரல் பாதிக்கப் படலாம். கல்லீரல் செல்களுக்கிடையிலுள்ள இணைப்புத்திசு இயல்பு மீறி வளர்ந்தால் செல் லிடைக் கல்லீரல் அழற்சி ஏற்படும். குதிரை போன்ற விலங்கினங்கள் சில நச்சுச் செடிகளைத் தவறாகத் தின்று விட்டால் இந்நோய் ஏற்படலாம். பூஞ்சண முள்ள வைக்கோலையோ கொதித்த தீனியையோ உண்பதாலும் வரலாம். செரிமானமின்மை, பசி யின்மை இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். மலம் கெடுநாற்றத்துடனிருக்கும். நாட்பட்டால் மகோதரம் உண்டாகும். நாய்களே பெரும்பாலும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. ஆடுகளில் நாக்குப் பூச்சியாலும் இந்நோய் வரலாம், புழு நீக்கி மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்தலாம். -பா. நாச்சி ஆதித்தன் கல்வீரல் அழற்சி. இந்நோய் பொதுவாகக் கல்லீரல் அழற்சிச் சீழடைவு (suppurative hepatitis) என்றும் நெடுநாட்பட்ட அழற்சி (chronic hepatitis) என்றும் இரு வகைப்படும். நெடுநாட்பட்ட கல்லீரல் அழற்சியில் உண்மையான கல்லீரல் திசு அணுக்கள் மறைந்து நார்த்திசுக்களால் நிரப்பப்படும். எனவே இதைக் கல்லீரல் நாரடைவு (cirrhosis of the liver) என்று மறு பெயரிட்டுக் குறிப்பிடுவர்.