பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்நடை 469

உள் நாரடைவின் காரணம். நுண்ணுயிரிகள் வெளிப் படுத்தும் நச்சுப் பொருள்கள், கார்பன் டெட்ரா குளோரைடு, மாங்கனீஸ் குளோரைடு போன்ற வேதிப்பொருள்கள் கல்லீரலைத் தாக்குவது, பித்த நீர்க் குழாயில் தொடர்ந்து உறுத்தல் ஏற்படுவதால் குழாயில் அடைப்பு ஏற்படுவது, ஈரல் புழுக்கள் அஸ்காரிஸ் போன்ற உருளைப்புழுக்களின் நகரும் பருவம், சிஸ்டி செர்கஸ் (cysticercus) போன்ற ஒட்டுண்ணிகள் ஈரலில் ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியன நாரடைவின் காரணங்களாகும், மேலும் ஆக்டினோ பெசில்லஸ் காசநோய் போன்றவற்றின் நேரடித் தாக்குதல்களால் கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்படு கின்றன. இதுபோன்ற ஏதோ ஒன்று கல்லீரலைத் தொடர்ந்து தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துவதால். ஈரலின் இயல்பான நிறமும் அளவும் தோற்றமும் மாறுபாடு அடையும். மாடுகளிலும் ஆடுகளிலும் கல்லீரல் நாரடைவு பெரும்பாலும் ஃபேசியோலா ஹெபாட்டிகா (Fasciola hepatica) என்னும் ஈரல் புழுக்களால்தான் ஏற்படு கிறது. குடல் மற்றும் வயிறு அழற்சியால் யேற்றப்படும் நச்சுப் பொருள்களாலும், பிடித்த தீவனம் உட்கொள்ளுவதாலும் பாதிக்கப்படுகிறது. வெளி பூசணம் கல்லீரல் நாரடைவின் வகைகள். கல்லீரல் நாரடைவு ஒரு பகுதி நாரடைவு, பல பகுதி (முழு) நாரடைவு என இருவகைப்படுகிறது. முழு நாரடைவு விலங்குகளில் பெரிதும் காணப்படுவதில்லை; எனினும் எப்போதா வது பூனை, நாய் போன்றவற்றில் ஏற்படுவதுண்டு. கண்பார்வையில் கல்லீரல் தோற்றம். கல்லீரலின் முழு நாரடைவின்போது, தொடக்கநிலையில் ஈரல் வீங்கியிருக்கும்; நாளடைவில் ஈரல் சுருங்கிவிடும். மென்மைத்தன்மை மாறி அழுத்தமாகவும், சுத்தி யால் வெட்டும்போது கடினமாகவும் இருக்கும். அதன் புறப்பகுதி புள்ளிகளாகவும், கரடுமுரடாகவும் தோற்றமளிக்கும். ஈரலின் நிறம் பழுப்பு மஞ்சள் நிறமாகவோ பித்த நீர்த்தேக்கத்தால் பச்சை நிற மாகவோ காட்சியளிக்கும். ஈரல் புழுக்களால் ஏற் படும் நாரடைவில் புதிய பித்த நாளங்கள் உண்டாகி யிருக்கும். நுண்ணோக்கியில் தோற்றம். ஈரல் திசுக்கள் மாறி நார் இணைப்புத் திசுக்கள் அதிகரித்திருக்கும். முழுப் பாதிப்பில் நார்த்திசுக்கள் கட்டுக்கட்டாக உருவாகி யிருக்கும். ஈரல் அணுக்களில் கொழுப்பு மாற்றமும், ஈரல் அழுகலும், உருமாற்றமும் தெரியும். நாரடைவால் ஏற்படும் விளைவுகள். தொடர்ந்து செயலாற்றும் கல்லீரலின் வழக்கம கமான பணிகள் பாதிக்கப்படுவதுடன் கல்லீரல் இரத்த ஓட்டம் தடைப் பட்டு உடல் திசுக்களில் நீர்கோர்த்த நிலை. சிரை களில் இரத்தத் தேக்கம், மண்ணீரல் வீக்கம், வயிறு, குடற் பகுதிகளில் இரத்தக் குழாய்த்தடிப்பு ஆகியவை கால்நடை 465 தோன்றுவதுடன் மஞ்சள் காமாலை ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட கால்நடைகள் இறந்துவிடும். இதற்கு மருத்துவம் ல்லை. இந்நோய் வாராமல் தடுக்க காலத்தில் குடல் புழு நீக்க மருந்துகள் கொடுக்கலாம். தூய நீர், சரிவிகித உணவு. காற்றோட்டமான மாட்டுக் கொட்டகை அமைப்பு ஆகியவையும் உதவும். ச.தமிழரசன் உள் ஒட்டுண்ணி நோய். கால்நடைகளின் குடல் களில் உள் ஒட்டுண்ணிகள் பெரும்பான்மையாக உள்ளமையால் அவை செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இளம் கால்நடைகளில் வை உடல் வளர்ச்சியைப் பாதிப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. முதிர்ச்சி அடையாத புழுக்கள் குடல் மற்றும் நுரையீரல் வழியே சென்று பித்த நாளங்கள், சிறுகுடலை அடைந்து விடுவதால் அல்லது புண்களை ஏற்படுத்துவதால் கால்நடைகளில் இந் நோயின் தீவிர அறிகுறிகள் உண்டாகின்றன. , உள் ஒட்டுண்ணி நோய் ஏற்படுத்தும் புழுக்களின் வகைகள். ஒவ்வொரு கால்நடையும் உள் ஒட்டுண்ணி யைக் கொண்டுள்ளது. பன்றிகளில் அஸ்கேரிஸ் சூசம் (Ascaris sucem), குதிரைகளில் அஸ்கேரிஸ் ஈகு வாரம் (Ascaris equorum), பசு இனங்களில் அஸ்கேரிஸ் விட்டுலோரம் (Ascaris vitulorum) ஆகிய உள் ஒட்டுண்ணிகள் நோய்களை ஏற்படுத்துகின்றன. இருப்பிடம். உள் ஒட்டுண்ணிகள் பொதுவாக உலகெங்கும் காணப்படும். வை பொதுவாகப் பண்ணைகளிலேயே நோயை ஏற்படுத்துகின்றன. கன்றுகள் தாயிடம் இருந்து இளம்புழுக்களைச் சீம்பால் மற்றும் கொப்பூழ்க் கொடி மூலமாகவும் பெறுகின்றன. எனவே கன்றுகளில் இப்புழுக்களைத் தொடக்கத்திலேயே காணலாம். கன்றுகள் இப்புழுக் களின் முட்டைகளை இரண்டு முதல் மூன்று வாரத்தில் சாணத்தின் மூலம் வெளியிடுகின்றன. இந் நோய் கன்றுகளில் பொதுவாக நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை காணப்படுகிறது. கால்நடைகளில் கன்றுகளுக்கு இந்நோய் தாய்ப்பால் மற்றும் சாணம் மூலம் ஏற்படுகிறது. கால்நடைகளில் இளம் புழுக் களின் வளர்ச்சி மற்றும் இடம்பெயர்தல் சரிவரத் தெரியவில்லை. கன்றுகளில் இந்தநோயின் முதிர்ந்த நிலை 10 நாள்களிலிருந்து காணப்படுகிறது. நோய் அறிகுறிகள். பொதுவாக இந்நோய் இளங் கன்றுகளையே தாக்குகிறது. கன்றுகளின் உ ல் தோல் பளபளப்புக் குறைந்து மெலிந்து காணப்படும். சில நேரங்களில் கன்றுகளுக்கு வலிப்பு மற்றும் குடல் அடைப்பு ஏற்படலாம். கன்றுகளின் உடல் எடை குறைந்து இரத்தச் சோகை ஏற்படும். முதிர்ந்த கால் நடைகளில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகத் தெரிவதில்லை. பொதுவாக இந்தக் கால்நடைகளில் பசியின்மை, மூச்சுக்கோளாறு நோய்கள் ஏற்படலாம்.