கால்நடை 471
இந்நோய் பெரும்பாலும் காய்ச்சலுடனேயே தோன்றும். அதனால் நோய் கண்ட விலங்கு சுறு சுறுப்பாயிராது. பால் கொடுக்கும் அளவு குறையும். நோய் கடுமையாகாவிட்டால் பொதுவாக மூன்று வார காலத்தில் நலமாகிவிடும். இதற்குரிய மருத்துவம் நோயுற்ற விலங்கை மந்தையினின்றும் தனியே பிரித்து வேறாக வைப்பதும், கொப்புளங்களைத் தூய்மை செய்வதும், நச்சுக் கொல்லிகள் தடவி வைப்பது மாகும். அம்மை மிகுநுண்ணுயிரை, நோயில்லாத கன்றுகளின் தோலைக் கீறிய பகுதிகளில் தேய்த்தால் அங்குக்கொப்புளங்கள் பல நிலைகளில் தோன்றும். இந்தக் கொப்புளங்களிலுள்ள நிணநீரை எடுத்து மனிதர்களின் உட்லில் செலுத்தினால் அம்மை நோயின் கடுமை குறைந்து, அந்நோய்த் தடுப்பாற்றல் (immunity) உண்டாகிறது. குதிரை அம்மை. இந்நோய் கடுமையானதன்று. கொப்புளங்கள் குளம்புகளுக்கு மேலேயுள்ள பகுதி களிலும், குதிகால்களிலும் தோன்றும். அந்த இடங் களில் அழற்சி உண்டாகும். கொப்புளங்கள் உதடுகள், மூக்கைச் சுற்றியுள்ள தோல், பிறப்புறுப்பின் புறப்பகுதி தோன்றலாம். பெண் குதிரையின் ஆகிய டங்களிலும் செம்மறி ஆட்டு அம்மை. இது மிகவும் கடுமை யான நோய். உடலில் பல மாறுதல்களை உண் டாக்கிக் கொன்றுவிடும். கொப்புளங்கள் கோழைப் படலங்களிலும், மயிரில்லாத பகுதிகளாகிய கன்னம், உதடு, மூக்குத் துளைகள், குய்யம், மடி, விதைப்பை. தொடைகளின் உட்புறம், வாலின் அடிப்புறம் ஆகிய இடங்களிலும் தோன்றும். இந்நோய் பரவுவதற்கு நோயுற்ற விலங்கைத் தொடவேண்டியதில்லை. காற்று,தூசி முதலிய வழிகளிலும் பரவ முடியும். மனிதன், ஈ. பூச்சி ஆகிய வழியாகவும் பரவலாம். இந்நோய் இரண்டு வகைப்படும். ஒன்று கடுமையில்லாதது. அதில் கொப்புளங்கள் தனித்தனி யாகவும், ஒழுங்காகவும் தோன்றும், மற்றொன்று பரவக்கூடியது. கடுமையானது; கொப்புளங்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும், ஒழுங்காகவுமிரா. முதலில் கடுமையான காய்ச்சல் வரும். விலங்கு சுறு சுறுப்பில்லாமல் இருக்கும். தீனி தின்னாது: நடக்கும்போது கால்கள் விறைப்பாக இருக்கும். ஏறத்தாழ நான்கு நாள்களில் கொப்புளங்கள் தோன்றும். அப்போது சிவந்த தடிப்புகள் இருக்கும். முதல் வகை நோயில் மூன்று வாரங்கள் ஆகும்போது. கொப்புளங்கள் உலர்ந்து, பக்குகள் உதிரும். ஒரு முறை நோய் வந்துவிட்டால் பிறகு நீண்ட காலம் வாராமல் இருக்கும். இரண்டாம் வகை நோயில் தோல் வெடிக்கும். மயிர் உதிரும். சில வேளைகளில் கண்களிலும் கொப் புளங்கள் தோன்றிக் கண்களைக் குருடாக்கி விடுவ துண்டு. மூக்குத் துளைகளில் கொப்புளங்கள் உண் கால்நடை 471 டாகிக் கெடு நாற்றமுடைய சீழ் வடியலாம். பெண் ஆடுகள் நோயுறும்போது கருவுற்றிருந்தால் கருச் சிதைந்துவிடும். பெரும்பாலும் இந்நோய் கண்ட விலங்குகள் இறந்துவிடும். நோய் கண்டவுடன் அம்மை நோயுற்ற விலங்கு களையும், உடல் நலம் குறைந்தவைபோல் தோன் றும் விலங்குகளையும் வேறாகத் தனியே பிரித்து வைத்துவிட வேண்டும். வந்த நோய் ரண்டாம் வகையினதாக இருந்தால் நோய் கண்ட விலங்கு களைக் கொன்று புதைத்து விடுவதே சிறந்தது. நோயில்லாத விலங்குகளையும் பெரிய மந்தையாக ராமல், சிறுசிறு கூட்டங்களாகப் பிரித்துத் தூய மேய்ச்சல் கொண்டுபோய்விட வேண்டும். தொழுவங்களை நச்சுக் கொல்லி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். கொப்புளங்களில் நச்சுக் கொல்லி மருந்துகளைப் பூசவேண்டும். நோயுறாத விலங்குகளுக்கு நோய்த் தடை மருந்துகள் அளிக்க லாம். நிலங்களுக்குக் வெள்ளாட்டு அம்மை. இது கடுமையில்லாத நோய். கொப்புளங்கள் மடி, காம்பு ஆகிய இடங் களிலும், சில வேளைகளில் வேறிடங்களிலும் தோன் றும். கொப்புளங்களுக்கு வழக்கமாகச் செய்ய வேண்டுவன செய்தால் நோய் நலமாகிவிடும். பன்றி அம்மை. பன்றி அம்மை இளம் பன்றி களுக்கே வரும். உடல் முழுதும் தோன்றும். சில வேளைகளில் மூச்சுப்பாதையிலும் தோன்றுவதால் இறப்பு நேரும். நோய்த்தடை மருந்தை ஊசி மூலம் கொடுக்கலாம். பறவை அம்மை. இது கோழிகளுக்கும், பறவை களுக்கும் வரும் தொற்று நோய். பொதுவாக இளம் பறவைகளுக்கே வரும். தலை உச்சியிலும், தோல் மடிப்புகளிலும், கண் இமையிலும் கொப்புளங்கள் காணப்படும். வாயில் மஞ்சள் நிறமான ஒட்டுந் தன்மையுள்ள படலம் காணப்படும். சில வேளை களில் கண்களிலிருந்தும், மூக்கிலிருந்தும் கோழையும், சீழும் சுலந்த நீர் ஒழுகும். இந்நோய் மூன்று வகைப்படும். முதல் வகையில் கொப்புளங்கள் இறகில்லாத தலைப்பகுதியில் தோன்றும். அவை பின்னர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமான, மருப்போன்ற முடிச்சுகளாக மாறும். இவை ஒன்றாகச் சேர்ந்து பெரிய முடிச்சுகள் ஆகும். ஏறக்குறைய இருபத்தொரு நாள்களில் இவை உலர்ந்து உதிரும். இவ்வகை நோய் கடுமையான தன்று. இரண்டாம் வகையில் மஞ்சள் நிறமான தடித்த படல ஒட்டுகள் வாயினுள்ளும், தொண்டை. யிலும் தோன்றும். மூன்றாம் வகையில், கொப்புளங்கள் மூக்குத் துளைகளிலும், சுண்களிலும் காணும்; கண்ணிமைகள் வீங்கும்; தடிப்பான மஞ்சள் நிற நீர் வரும்.