பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 கால்நடை

472 கால்நடை முதல் வகை நோய் கண்டால், கொப்புளங் களைத் தூய்மை செய்து மிகு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பூசி வைப்பதே முறை. இம்முறை பிற ருவகை நோயிலும் பயன்படாது. அதனால் அந்த இரண்டு வகை நோய்கள் கண்டால், நோயுற்ற விலங்குகளைத் தனியே பிரித்து வைப்பதோடு தொழு வங்களை மிகு நுண்ணுயிர்க்கொல்லி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். குஞ்சுகள் இரண்டு மாத வயதாயிருக்கும்போது அவற்றிற்கு நோய்த் தடை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தலாம். வெ. துரைசாமி வீக்கம், கல்லால் அடிபடுவதாலோ, கீழே விழுவ தாலோ அடிபட்ட இடத்தில் கால்நடைகளுக்கு வீக்கம் ஏற்படும். சுளுக்கு ஏற்பட்டாலும் வீக்கம் உண்டாகும். முள்ளோ ஆணியோ தைத்தாலும் வீக்கம் ஏற்படும். இவற்றை எடுத்தால்தான் வீக்கம் குறையும். வீக்கம் கண்டவுடன் 3-4 வேளை வெந்நீர் ஒற்றடமும் வறுத்த தவிட்டு ஒற்றடமும் கொடுத்தால் குணமாகும். இதில் குணமாகாவிட்டால் கர்ப்பூரத் தைலம் அல்லது மர எண்ணெய் தடவினால் சில நாளில் வீக்கம் குறைந்து விடும். காலில் வீக்கம் வந் தால் ஒற்றடம் கொடுத்தபின் சிறிது பஞ்சு வைத்துத் துணியால் கட்டுப்போடலாம். வலி மிகுதியாக இருந் தால் கரியபோளம் மருந்தில் சிறிது எடுத்து நான்கு மடங்கு நீரில் கரைத்துக் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் வலி குறையும், வீக்கமும் வாடிவிடும். சில வேளைகளில் வீக்கம் குறையாமல் சீழ், கட்டி விடலாம். சீழ் பிடித்த கட்டி இளகும் வரை ஒற்றட மும் தைலமும் இட்டு நன்றாகப்பழுத்தவுடன் மருத்து வரைக் கொண்டு அறுவை செய்து சீழை அகற்றி விடலாம். சீழை முழுதும் அகற்றியதும் டெட்டால் அல்லது ஃபினைல் விட்டுக் கழுவிப் கர்ப்பூரத்தையும் வேப்பெண்ணெயையும் (1-8 வீதம்) கலந்து தட வப் புண் ஆறிவிடும். புண் பெரியதாக இருந்தால் சிறிது துணியில் எண்ணெயை ஊற்றிப் புண்ணில் வைத்துக் கட்டிவிடலாம். சரியான மருத்துவம் செய் யாவிடில் சீழ் பிடித்த பகுதி புரையோடி உள்ளுக்குள் துளைத்துக்கொண்டு பிற பகுதிகளிலும் பரவி மிகு வலியைக் கொடுக்கும். வீக்கமோ காயமோ ஏற்பட்ட கால்நடைகளுக்கு முழு ஓய்வு கொடுத்து. தூய்மையான இடத்தில் கட்டி வைத்து எளிதில் செரிமானமாகக் கூடிய தீனியைக் கொடுத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஈக்கள் காயத்தில் உட்காராதவாறு மூடியும் வைக்க வேண்டும். சில வேளைகளில் கால் தடுமாறிக் கீழே விழுந்தால் சுளுக்கு ஏற்படும். மூட்டுகளிலுள்ள பந்தகங் களும் தசை நார்களும் பிசகிப்போவதால் அந்த இடம் வீங்கும். ஒற்றடம் கொடுத்துத் தைலம் தடவி நீவி விட்டால் இரண்டொரு நாளில் குணமாகிவிடும். கால்நடைகள் - எலும்புமுறிதல். நடக்கும்போது கால் தடுக்கிக் கீழே விழுந்தாலோ, குதிக்கும்போதோ. அடி பட்டாலோ எலும்பு முறியலாம். கீழே தள்ளிக் காயடிக்கும் போதும் கால்நடைகள் பலமாக உதைத்துக் கொள்ளும் போதும் எலும்பு முறிய வாய்ப்புண்டு. எலும்பு நோய்களாலும் எலும்புவலி விழந்து முறியலாம். ஆகிய எலும்பு முறிவுகளில் பல விதங்களுண்டு. நடுவில் இரண்டு துண்டாகவும், குறுக்கே கோணலாகவும். சில வேளைகளில் பல துண்டுகளாகவும் முறியலாம் எலும்பு ஒடிந்த இடத்தில் காயமேற்பட்டிருந்தால் அதன் வழியே முறிந்த எலும்பு நீட்டிக் கொண்டிருக் கும். நரம்பு, தசை, இரத்தக் குழாய் வையும் சேதப்பட்டிருக்கும். எலும்பு முறிந்த இடத் திவ் காயமில்லாமலிருந்தால் முறிந்த இடத்திற்குக் கீழ்ப்பகுதி துவண்டு தொங்குவதைக் கொண்டு எலும்பு முறிந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். முறிந்த சில மணித்துளிகளுக்குள் வீக்கமும் வலியு மேற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படும். உடன டியாக மருத்துவரிடம் காட்டி முறிந்த எலும்புகளைப் பொருத்திக் கட்டுப்போடுதல் வேண்டும். ஆதாரமாக மூங்கில் குச்சிகளையோ, பலகைத்துண்டுகளையோ பயன்படுத்தலாம். இதை மருத்துவரே செய்ய வேண்டும். கட்டுப்போடுவதற்கு முன்பு எலும்பு முறிந்த இடத்தைத் தூய்மை செய்து பஞ்சினால் மூடி, பிறகு குச்சியை வைத்து நன்றாகக் கட்டிவிட வேண்டும். கட்டுப்போட்டவுடன் அசையாமல் இருக்குமாறு வைத்துக் கொள்வது முக்கியம். கட்டுப்போடும் போது பாரிஸ் மாச்சாந்து சேர்த்தால் கட்டுத் தளரா மலும் அசையாமலும் இருக்கும். 3-4 வாரங்கள் கட்டவிழ்க்காமல் இருந்தால் எலும்புகள் கூடி விட லாம். கட்டவிழ்த்தவுடன் கழுவி விட்டுத் தேங்கா யெண்ணெயையும் மீன்எண்ணெயையும் கலந்து தடவி மெதுவாக நீவிவிட வேண்டும். காயம்பட்டிருந் தால் ஆறுவதற்கு வேண்டிய மருத்துவமும் செய்ய வேண்டும். நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கொண்டு தூய்மை செய்து நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தாகப் பெனிசிலின், சல்ஃபானிலமைடு முதலியவற்றைத் தடவவேண்டும். கால் எலும்புகள் முறிந்தால் கூடு மானவரையில் கால் முழுதும் கட்டுப்போட வேண் டும். கரியபோளம், ரெசின் 4:1 வீதம் கலந்து நீரில் கலக்கிக் கொதிக்க வைத்துச் சாந்து நிலையில் இறக்கி ஒடிந்த பகுதியில் பற்றுப்போடலாம். சிலர் கோழி முட்டை, உளுந்து இரண்டையும் கலக்கிப் பற்றுப் போடுவர். கால்நடைகளுக்கு மருத்துவ காலத்தில் சத்துள்ள தீவனத்தைக் கொடுத்து முழு ஓய்வு அளிக்க வேண்டும். தொழுவத்தில் மணலை மிகுதியாகப் பரப்பி மெத்தென்றாக்கிப் படுக்க வைக்கவேண்டும்.