பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 கால்நடை

474 கால்நடை உடனடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஆறிவரும் புண்களுக்கு வீரியமுள்ள நுண்ணுயிர்க் கொல்லியைப் பயன்படுத்துவதைத்தவிர்த்து, சல்ஃபா னிலமைடு மீள் எண்ணெய் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம். . ஆழமான காயங்களுக்குக் சுசிவுநீர் வெளி வரத் தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும். மருந்தில் நனைத்த காஸ் துணியைப் பயன்படுத்தலாம். கொம்பு முறிவு மற்றும் குளம்புகள் வெளிவந்த நிலை யில் இரத்தக் கசிவு மிகுதியாக இருந்தால் காயத் தின் மேல் கயிற்றால் இறுகக்கட்டி இரத்தப்போக்கை நிறுத்தலாம். சல்ஃபானிலமை மடு மீன் எண்ணெய்க் கலவை அல்லது 'BIPP' கட்டை ஒருநாள் ஒரு நாள் போடலாம். விட்டு புழு வைத்த புண்கள் (maggot wound). இவ் வகைக் காயங்களுக்கு டர்பன்டைன் அல்லது சூடம் கலந்த எண்ணெய்த்திரியைப் புண்ணில் 24 மணி நேரம் வைத்துப் பிறகு கழுலி லார்எக்சேன் களிம்பு தடவலாம். புழு நெருங்காமல் இருக்க வேப்பெண் ணெய் தடவலாம். நச்சுக்கடிக் காயங்கள் தேள்கடி. தேள் கடித்தவுடன் மார்ஃபீன் அல்லது அட்ரோப்பின் ஊசி மூலம் செலுத்த வேண்டும். குளுக்கோஸ் நீர்,ஸ்டீராய்டு மற்றும் ஹிஸ்ட்டமின் எதிர் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தி மருத்துவம் செய்யலாம். நச்சுப் பாம்புக் கடி காயம். மூன்று வகையான பாம்புகள் விலங்கினங்களைக் கடிக்க வாய்ப்புள்ளது. அவை நாகப்பாம்பு, ஊது சுருட்டை, விரியன்என்பன. ஒன்று அல்லது இரண்டு பல் பட்ட காயமாக இருந் தால் அதை நச்சுக்கடி என்றும், பல பற்களால் ஏற்படும் காயங்களை நச்சற்ற கடி காள்ளலாம். என்றும் மேல் மருத்துவம். கடிபட்ட இடத்திற்கு கயிற்றால் இறுகக்கட்டி நஞ்சு உடலில் பரவாமல் தடுக்க வேண்டும். கடிபட்ட இடத்தில் பனிக்கட்டியை வைக்கலாம். உடனடியாக நச்சுஎதிர்மருந்தூசி போட வேண்டும். கடிபட்ட இடத்தை நன்கு கழுவிப் பொட்டாசியம் பெர்மாங்கனேட், கிளிசரின் மூலம் சுட வேண்டும். குளவி, தேனீ, எட்டுக்கால் பூச்சி ஆகியவற்றால் ஏற்படும் காயத்தை அம்மோனியா மற்றும் சோப்புக் கரைசலில் கழுவி ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் போட வேண்டும். பெருச்சாளிக் கடிக்குப் பெனிசிலின் ஊசி போட வேண்டும். எலிக்கடி பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படுவதில்லை. நெருப்புச்சுட்ட புண்கள். நெருப்பு உடலில் நேரடி யாகப் படுவதாலோ நெருப்பால் சூடாக்கப்பட்ட உலோகப் உடலில் பொருள்கள் படுவதாலோ பாதிப்பு அடைந்து புண் உண்டாகும். இதைச் சுட்ட புண்கள் என்பர். வெப்ப நிலையில் உள்ள நீர்மப் பொருள்கள், வளிமப் பொருள்கள், ஆவிப்பொருள் கள் ஆகியவை படுவதால் ஏற்படும் புண்ணைக் கொப்புளங்கள் என்பர். மேற்கூறிய காயத்திற்கு ஜென்சியன் வயலெட் அல்லது அக்ரிபிளேவின் போடலாம். மேலும் நுண்ணுயிர் எதிர் மருந்து. ஹிஸ்ட்டமின் எதிர் மருந்து ஊசி மூலம் போடலாம். காயங்கள் மிகுதியாக இருந்தால் குளுக்கோஸ் நீர் ஊசி மூலம் கொடுக்கலாம். க. ரங்கராவ் தீவனங்கள். கால்நடைத் தீவனங்கள் நார்த் தீவனங்கள், அடர் தீவனங்கள் என இருவகைப்படும். அடை நார்த்தீவனங்கள் வகை பச்சைத் தீவனங்கள். நேப்பியர்புல், கினியாப்புல், எருமைப்புல். ரோட்ஸ்புல், கொழுக்கட்டைப்புல், ஹரியாளிப் புல், குதிரை மசால் (Lucern), பாராப்புல், சிக்னல் புல், பர்சீம் புல் எனப் பலவகைப் புல் களையும், அகத்தி, கைளபி. பீல்டு பீன்ஸ், ஸ்டை லோ கிளைசீன், குட்சி, பட்டர்பிளை பட்டாணி, டைலோசியா போன்ற பயறு வகைகளையும் கூபாப்புல், ஹெட்ஜ் லூசர்ன் முதலிய மரவகைகளை யும் பயிரிட்டுக் கால்நடைகளுக்குப் பச்சைத் தீவன மாக அளிக்கலாம். பச்சைத் தீவனம் அளிக்கப்பட்ட கால்நடைகள் மிக்க நலத்துடன் இருப்பதுடன் பால் அளவும் பெருகும். கறவையினங்கள் விரைவில் இனப் பெருக்கத்திற்கு ஏற்ற பருவத்தை அடையும். புல் வகைகளில் 70% ஈரச் சத்துள்ளது. நோய் எதிர்ப்புத் திறனும், வைட்டமின் A சத்தும் பச்சைப் புற்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட பச்சை நார்த்தீவனங்கள். பச்சை நார் பயிரிடமுடியாதபோது. மிகுதியாகப் பயிர் செய்யப்பட்ட பச்சை நார்த் தீவனங்களை சைலேஜ் முறையில் பதப்படுத்திக் கால்நடைகளுக்குத் தீவள மாக அளிக்கலாம். இதில் 40% ஈரப்பதமுள்ளது. உலர்ந்த நார்த் தீவனங்கள். வைக்கோல், உலர் நார்த் தீவனங்களையும் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும். நார்த் தீவனங்கள் செரிமானத்திற்கும், தீவனப்பைகளில் நன்மை பயக்கும் உயிரணுக்களை உ உற்பத்தி செய்யவும் வழிவகுக்கின்றன. நார்த் தீவனங்களை யூரியா உப்புடன் குறிப்பிட்ட அளவில் கலந்து பதப்படுத்திச் சத்துணவாகக் கொடுக்கலாம். அடர் தீவனங்கள்: பிண்ணாக்கு. வேர்க்கடலை, எள், தேங்காய், பருத்திக் கொட்டை, முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆளி தவிடு. அரிசி, கோதுமை, பார்லி முதலியவற்றி விருந்து தயாரிக்கப்படுகின்றது.