476 கால்நடை
476 கால்நடை க வேண்டும். அது உண்ணும் தீனி முழுதையும் பாலாகக் கொடுக்கக் கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். நல்ல பசுவிற்குப் பெரும்பாலான உறுப்பு கள் மெலிந்து காணப்படும். 3. மிகுதியாகப் பால் தரக்கூடிய மடி, பெரியதாகவும் பால் கறந்தவுடன் மென்மையாகவும் இருத்தல் வேண்டும். மடிக்கு வரும் ரத்த நாளங்கள் பெரியனவாக, நீளமாக, பல கிளை களுடன் இருத்தல் வேண்டும். ய நல்ல கறவைப் பசுவைத் தேர்ந்தெடுக்க அதன் பண்புகளுக்கு மதிப்பெண் கொடுத்துத் தேர்வு செய்யலாம். பசுவுக்கு ஒவ்வொருவரும் எவ்வளவு மதிப்பெண்தருகின்றனர் என்று கணக்கிட்டுத் தேர்வு செய்ய வேண்டும். இதேபோன்று பண்ணைக் காளை களையும் தயாரிக்கலாம். ஆடுகள் பெரிய ஆடுகள். ஆடுகள் கண்காட்சியும் தனியாக நடத்தப்படுவதுண்டு. ஆடுகள் றைச்சி தரும் மயிர் தரும் ஆடுகள் என இருவகைப்படும். இவ்விருவகை ஆடுகளும் பயன் தருவதில் வேறுபடுவதால் தோற்றத்திலும் வேறுபடு கின்றன. இறைச்சி தரும் ஆட்டின் உடல் தாகவும், தாழ்ந்ததாகவும், இறுக்கமானதாகவும், வளைவில்லாததாகவும், தசை மிகுந்ததாகவும், சுறு சுறுப்பில்லாததாகவுமிருக்கும். மயிர் தரும் ஆடு மெல்லிய உடலும், கால்களும் கொண்டிருக்கும். இத்தகைய இரண்டுவித ஆடுகளை மதிப்பிடுவதற்கு விளக்க அட்டவணைகள் தயாரிப்பதுண்டு. இறைச்சி தரும் ஆட்டை மதிப்பிடுவோர் சற்றுத் தொலைவில் நின்று ஆட்டின் பக்கங்களையும் கவனித்து, ஆட்டைத் தொட்டுப் பார்க்க வேண்டும். தொட்டுப் பார்த்துத் தீர்மானிக்க நல்ல பயிற்சி வேண்டும். விலாப்புறமிருந்து பார்த்தால் ஆட்டின் உடல் இறுக்கம் தாழ் நிலை, முதுகில் வலிமை, கழுத்தின் நீளம், தலைநிமிர்வு இவற்றைக் கவனிக்க லாம். பின்புறம் நின்று பார்த்தால் உடம்பின் அகலம், இறுக்கம், அகலம், தொடைகளின் வளர்ச்சி,பின் கால்களின் அமைப்பு ஆகியவற்றைக் காணலாம். முன்புறம் நின்று பார்த்தால் முக்கிய நெஞ்சின் அளவையும் மாக லுள்ள பிட்டத்தின் தாலைவு: தலை, கால்களுக்கிடையி காது, முன்கால்கள் வளையாதிருத்தல் ஆகியவற்றையும் காணலாம். இவ்வாறு நின்று பார்க்கும் போது காணக்கூடிய குறைகள் உடம்பில் வலிவின்மை, நெஞ்சின் குறைந்த அளவு, கால்கள் ஒன்றோடொன்று இடித்தல் ஆகியவையாகும். பின்னர் ஆட்டைத் தொட்டுப் பார்க்க வேண்டும். கையை விரித்து முதுகின் மீது முன்னும் பின்னுமாகத் தடவிப் பார்த்தால் தசை எவ்வளவு, எத்தன்மையது என்பதையும்,முதுகின் வலிமையையும் அறிய முடியும். பல ஆடுகள் முதுகு வலிமையில்லாம லும், பிட்டம் மெலிந்தும், முன் பக்கம் தாழ்ந்து மிருக்கும். இதன்பின் தோள் பட்டை, கழுத்து, நெஞ் சின் அகலம், முன் கால்களுக்கு இடையே நெஞ்சின் அகலம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். தோள் பட்டை அகலமாகவும், இறுக்கமாகவும், மென்மை யாகவும் இருக்க வேண்டும். இறுதியில் மயிரை நல்ல வெளிச்சத்தில் கவனிக்க வேண்டும். இவை தொடை யின் கீழ்ப் பகுதியில் முரடாகவும், தோள்களில் மென்மையாகவுமிருக்கும். மாடுகள் ஆடுகள் காட்சி கள் தவிர, கோழிகள் கண்காட்சியும் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல இனக்கோழிகள் கண்காட்சியும் கருத்துக் காட்சியும் விவசாயிகள் பயன்பெறத் தக்க வகையில் நடத்தப் பட்டு வருகின்றன. பி. இராமன் காசநோய். இந்நோய் மனிதர்களிடமிருந்து கால் நடைகளுக்கும், கால்நடைகளிடமிருந்து மனிதருக்கும் பரவக்கூடிய தொற்றுநோய் ஆகும். 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து மம்மிகளில் உள்ள எலும்புகளின் மூலம் இந்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1865 ஆம் ஆண்டில் வில்லிமின் என்னும் அறிவியலார் பாதிக்கப்பட்ட மனித மற்றும் கால்நடை களின் தசையை எடுத்து முயல்களுக்கு ஊசி மூலம் செலுத்திக் காச நோயை உண்டாக்கினார். நோய்க் காரணம். இந்நோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் என்னும் நுண்ணுயிரால் உண்டாக் கப்படுகிறது. முதன் முதலாக 1882 ஆம் ஆண்டு பாம் கார்டன் என்னும் அறிவியலார் பாதிக்கப்பட்ட தசைகளிலிருந்து இந்நோய் நுண்ணுயிர் இருப்பதை எடுத்துக் காட்டினார். பின்பு ராபர்ட் காக் என்பார் இந்நோயின் தன்மையைக் கண்டறிந்தார். இந்நோய் நுண்ணுயிரியை மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவை மனிதனில் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் மைக்கோபாக்டீரியம் என்றும், இனங்களில் போவிஸ் என்றும், பறவை இனங்களில் மைக்கோபாக் டீரியம் ஏவிஸ் என்றும் வழங்கப்படும். மெல்லியதாக இரண்டு நீண்டும். மூன்று நுண்ணுயிர்களுடன் சேர்ந்தும் காணப்படும் இந்நோய்க்கான பெயர்கள் முத்து நோய், உடல் உருக்கி நோய் என்பன. பாலை 142 பசு பிற இந்நோய் நுண்ணுயிர்கள் உடல் அழுகுவதால் அழியா அவை ஏறக்குறைய 27 மாதங்கள் வரை உயிரோடு இருக்குமென்று கண்டறியப்பட்டுள்ளது. நன்றாகக் கொதிக்க வைப்பதின் மூலமோ 145°F இல் 30 நிமிடத்துக்குப்பதப்படுத்து வதன் மூலமோ இந்நுண்ணுயிரியை அழிக்கலாம். நோயின் தன்மை. இந்நோய் நுண்ணுயிரி மனிதரை மிகவும் பாதிக்கிறது. மனிதர்கள் மைக்கோபாக்டீரியம் யம் டியூபர்குலோசிஸ், மைக்கோபாக்டீரியம்